மத்திய பட்ஜெட்: பொதுமக்கள் கருத்து | ஆதரவும், எதிர்ப்பும்

மதுரை: நாட்டின் 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்.1) தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து வர்த்தக அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் தங்கள் கருத்தினை பகிர்ந்துள்ளார். தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் என்.ஜெகதீசன்: மத்திய அரசின் பட்ஜெட்டில் நிறைய வரவேற்கத்தக்க அறிவிப்புகள் உள்ளன. தனிநபர் வருமான வரி விலக்கு ரூ.12 லட்சமாக உயர்வு, மூத்த குடிமக்களுக்கு வட்டி வரம்பு உள்ளிட்ட நிறைய அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது. விவசாயத்துறை, எம்எஸ்எம்இ துறை, மூலதனத்துறை, … Read more

வருமான வரிச் சலுகை: மீம்ஸ் குவித்துக் கொண்டாடிய நெட்டிசன்கள்!

புதுடெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை சனிக்கிழமை தாக்கல் செய்த நிலையில் இணையவாசிகள் பட்ஜெட் குறித்து மீம்ஸ்கள் வெளியிட்டு சமூகவலைதளத்தை தெறிக்க விட்டனர். தனது பட்ஜெட் உரையின் தொடக்கத்தில் நிர்மலா சீதாராமன் அனைத்து பகுதிகளுக்கான சீரான வளர்ச்சியின் மூலம் அனைவருக்குமான வளர்ச்சி என்ற இலக்கை மத்திய அரசு அடையும் என்று கூறினார். பல மாற்றங்களுக்கு இடையில், அவர் தேர்தல் நடைபெற உள்ள பிஹார் மாநிலத்துக்கு பல திட்டங்களை அறிவித்தார். அதேபோல், வரிசெலுத்துவோரின் … Read more

மத்திய பட்ஜெட் 2025: நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல்.. முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?

2025-26 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்.01) தாக்கல் செய்து நாடாளுமன்றத்தில் உரையாற்றி வருகிறார்.   

மத்தியபட்ஜெட் 2025-26: பட்ஜெட்டில் 6 அம்சங்களுக்கு முக்கியத்துவம்! நிதியமைச்சர் நிதிர்மலா சீத்தாராமன்…

டெல்லி:  மத்திய பட்ஜெட்டில் வரிவிதிப்பு, சுரங்கம் என 6 துறைகளுக்க சீர்த்திருங்கள் மற்றும் முக்கியத்துவம் வழங்கப்படுவதாக நிதிய இமைச்சர் கூறினார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து எட்டாவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யத் தொடங்கியுள்ளார். நமது நாட்டின் பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியா மீதான நம்பகத்தன்மை உலக அளவில் உயர்ந்துள்ளது. எல்லா பகுதிகளிலும் சமச்சீரான அளவில் வளர்ச்சி உள்ளது  என கூறியதுடன்,  வரிவிதிப்பு, சுரங்கம் என 6 துறைகளில் சீர்திருத்தங்களை பட்ஜெட் … Read more

தோல்வி விரக்தியில் பாஜக வன்முறையில் ஈடுபடுகிறது; கெஜ்ரிவால் தாக்கு

புதுடெல்லி, டெல்லி சட்டமன்ற தேர்தல் வரும் 5 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே இருப்பதால் அனல் பறக்கும் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. அங்கு பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவுகிறது.அதிலும் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. இதனால் இரு கட்சிகளும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில் தான், டெல்லி தேர்தல் பிரசாரத்தில் ஆம் ஆத்மி வேட்பாளரை பாஜகவினர் … Read more

விராட் கோலிக்கு ரஞ்சி கோப்பை எல்லாம் தேவையில்லை – ராயுடு ஆதரவு

மும்பை, இந்திய அணி சொந்த மண்ணில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 0-3 என்ற கணக்கில் மோசமாக தோற்றதுடன், ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரையும் 1-3 என்ற கணக்கில் பறிகொடுத்தது. இவ்விரு தொடரிலும் மூத்த வீரர்கள் கேப்டன் ரோகித் சர்மாவும், விராட் கோலியும் ரன் எடுக்க முடியாமல் திணறினர். இதில் குறிப்பாக விராட் கோலி தொடர்ச்சியாக அவுட் சைடு ஆப் ஸ்டம்ப் பந்துகளில் விக்கெட்டை இழந்து வருகிறார். அவருடைய சுமாரான ஆட்டம் சமீபத்திய நியூசிலாந்து … Read more

கனடா, மெக்சிகோ மற்றும் சீனா நாடுகளுக்கான வரி விதிப்பு இன்று முதல் அமல்: வெள்ளை மாளிகை

வாஷிங்டன் டி.சி., அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்று டொனால்டு டிரம்ப் ஜனாதிபதியானார். கடந்த ஜனவரி 20-ந்தேதி நடந்த பதவியேற்பு விழாவில் புதிய ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்று கொண்டார். அவர் பதவிக்கு வந்ததும் பல உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். இந்நிலையில், அமெரிக்காவில் சட்டவிரோத வகையில் பென்டனைல் எனப்படும் மருந்து பொருள் விநியோகிக்கப்பட்டு உள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த பென்டனைல் என்ற மருந்து பொருள் வலி நிவாரணியாக மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. … Read more

TVK : 'பட்ஜெட்டுக்காக காத்திருந்த விஜய்; பனையூரில் 'மெட்ராஸ்' பட அரசியல்!' – தவெக மீட்டிங் ஹைலைட்ஸ்!

தவெக-வின் நான்காம் கட்ட மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை வெளியிட விஜய் இன்று பனையூர் அலுவலகத்துக்கு வந்திருந்தார். கோஷ்டி பூசல், மெட்ராஸ் பட பாணியிலான சுவர் அரசியல் என தகதகத்த தவெக முகாமின் இன்றைய மீட்டிங்கின் அப்டேட்ஸ் இங்கே. எப்போதும் மதியம் 12:30 மணியிலிருந்து மதியம் 1:30 க்குள் அலுவலகத்துக்கு வருவதை வழக்கமாக வைத்திருந்த விஜய், இன்றைக்கு 3 மணிக்குத்தான் பனையூர் அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தார். காலை முழுவதும் மத்திய பட்ஜெட் வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்ததால் அந்த நேரத்தில் அலுவலகத்துக்கு … Read more

மத்திய பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துள்ளது: புதுச்சேரி முதல்வர் பாராட்டு

புதுச்சேரி: நாட்டின் நலனுக்கேற்ற பல்வேறு சிறப்பு அம்சங்களைக்கொண்ட பட்ஜெட்டை தாக்கல் செய்த பிரதமர், மத்திய நிதியமைச்சர் ஆகியோருக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பாராட்ட தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று கூறியிருப்பதாவது: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2025-26-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையானது, மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்து, நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதற்கான பிரதமர் நரேந்திர மோடியின் எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுப்பதை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. குறிப்பாக, நாட்டின் முதுகெலும்பாக விளங்கக்கூடிய … Read more

ரூ.12 லட்சம் வரை ‘No Tax’, விலை உயரும், குறையும் பொருட்கள்: பட்ஜெட் 2025-ன் டாப் 10 ஹைலைட்ஸ்

ரூ.12 லட்சம் வரை வருமான வரி இல்லை!: நடுத்தர வர்க்கத்தினருக்கு சிறப்பு கவனம் செலுத்தும் வகையில், புதிய வருமான வரி கட்டமைப்பின் கீழ் ஆண்டுக்கு ரூ.12 லட்சம் மொத்த வருமானம் ஈட்டுவோருக்கு வருமான வரி இல்லை. அதாவது, மூலதன ஆதாயங்கள் போன்ற சிறப்பு விகித வருமானத்தைத் தவிர மாதத்துக்கு சராசரி வருமானம் ரூ.1 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோர் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை. அத்துடன், நிலையான கழிவுத் தொகை ரூ.75,000 அளிக்கப்படுவதன் காரணமாக ரூ.12.75 லட்சம் … Read more