கோவை மக்கள் கவனத்திற்கு! உள்துறை அமைச்சர் வந்துள்ளதால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்!

கோவை வந்தடைந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு விமான நிலையத்தில் பாஜகவினர் மலர் தூவி உற்சாக வரவேற்பு. இன்று இரவு ஈஷா யோகா மையம் செல்ல உள்ளார்.

‘கோல்டு கார்ட்’ : 5 மில்லியன் டாலருக்கு அமெரிக்க குடியுரிமை வழங்க டிரம்ப் அனுமதி

முதலீட்டாளர்களுக்கு 35 வருட பழமையான விசாவை மாற்றும் வகையில், $5 மில்லியனுக்கு (ரூ. 43.5 கோடி) குடியுரிமை பெற வகை செய்யக் கூடிய “தங்க அட்டை” விசாவை வழங்க திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் செவ்வாயன்று தெரிவித்தார். இதனால், “செல்வந்தர்களாக இருப்பவர்கள் நிறைய பணம் செலவழித்து அமெரிக்காவில் முதலீடு செய்து வெற்றி பெற வழிகிடைக்கும், அதனால், நிறைய பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படும், நிறைய வரிகளை வருவாய் கிடைக்கும். மேலும் இது மிகவும் வெற்றிகரமாக இருக்கும் என்று நினைக்கிறோம்,” … Read more

வறுமை ஒழிப்பிற்காக பல்வித அணுகுமுறைகளுடன் கூடிய ஒருங்கிணைந்த ‘பிரஜா சக்தி’ வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்

வறுமை ஒழிப்பிற்காக பல்வித அணுகுமுறைகளுடன் கூடிய ஒருங்கிணைந்த ‘பிரஜா சக்தி’ வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

AUS v SA: மழையால் ரத்தான ஆஸி vs தெ.ஆ போட்டி – அரையிறுதிக்கு முன்னேறுவது யார்? குரூப் B நிலவரம் என்ன?

சாம்பியன்ஸ் டிராபி தொடரானது அரையிறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது. குரூப் A-ல் தலா இரண்டு வெற்றிகளைப் பெற்ற இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிவிட்டன. இவ்வாறிருக்க, குரூப் B-ல் தலா ஒரு வெற்றியைப் பெற்ற ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதிக்கான தங்கள் இடத்தை உறுதிசெய்யும் நோக்கத்தில் நேற்று போட்டிக்குத் தயாராகின. ஆனால், போட்டி நடக்கும் ராவல்பிண்டி மைதானத்தில் நேற்று காலை முதலே வானம் மேக மூட்டமாக இருந்த சூழலில், போட்டி தொடங்குவதற்கு முன்பாக மழை குறுக்கிட்டது. சாம்பியன்ஸ் … Read more

தவெக தலைவர் விஜய் வீட்டில் காலணி வீசிய நபர்: போலீஸார் விசாரணை

மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி பகுதியில் உள்ள போர் பாயிண்ட் எனப்படும் தனியார் சொகுசு விடுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழா கொண்டாட்டம் பிப். 26-ம் தேதி (இன்று) நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்து வரும் 2,500-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சிரமமின்றி வந்து செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இன்று காலை சென்னை நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டுக்குள் இளைஞர் … Read more

வடகிழக்கு மாநிலங்களுக்கு புதிய எதிர்காலம்: அட்வான்டேஜ் அசாம் 2.0 உச்சி மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, “அட்வான்டேஜ் அசாம் 2.0” உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு 2025- உச்சி மாநாட்டை கவுகாத்தியில் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர், வடகிழக்கிற்கு இன்று முதல் புதிய எதிர்காலம் தொடங்குவதாக தெரிவித்தார். மாநாட்டில் கலந்து கொண்டவர்களின் முன்னிலையில் பிரதமர் மேலும் பேசியதாவது: கிழக்கு இந்தியா மற்றும் வடகிழக்கு நிலம் இன்று ஒரு புதிய எதிர்காலத்தை தொடங்குகிறது. அட்வான்டேஜ் அசாம் என்பது முழு உலகையும் அசாம் மாநிலத்தின் சாத்தியமான வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துடன் இணைப்பதற்கான … Read more

தமிழக அரசு துறைகளில் 2020-க்குப்பிறகு நியமிக்கப்பட்ட தற்காலிக பணியாளர்களை பணி நீக்கம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழக அரசு துறைகளில் 2020-க்குப்பிறகு நியமிக்கப்பட்ட தற்காலிக பணியாளர்களை பணி நீக்கம் செய்ய  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமீப காலமாக அரசு பணிகளின் பெரும்பாலான துறைகளில் தற்காலிக பணியாளர்களே நியமனம் செய்யப்பட்டு வருகின்றன. இதனால், அரசு பணிகள் முழுமை பெறாத நிலையே தொடர்கிறது. இந்த நிலையில், அரியலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறையில் கணிப்பொறி உதவியாளராக தினக்கூலி அடிப்படையில் கடந்த 1997-ம் ஆண்டு பணிக்கு சேர்ந்த சத்யா என்பவர், … Read more

TVK Vijay: கோலாகலமாக தொடங்கிய தவெக-வின் இரண்டாம் ஆண்டு! – மகிழ்ச்சியில் தொண்டர்கள்! – Photo Album

TVK இரண்டாம் ஆண்டு தொடக்க விழா TVK இரண்டாம் ஆண்டு தொடக்க விழா TVK இரண்டாம் ஆண்டு தொடக்க விழா TVK இரண்டாம் ஆண்டு தொடக்க விழா TVK இரண்டாம் ஆண்டு தொடக்க விழா TVK இரண்டாம் ஆண்டு தொடக்க விழா TVK இரண்டாம் ஆண்டு தொடக்க விழா TVK இரண்டாம் ஆண்டு தொடக்க விழா TVK இரண்டாம் ஆண்டு தொடக்க விழா TVK இரண்டாம் ஆண்டு தொடக்க விழா TVK இரண்டாம் ஆண்டு தொடக்க விழா … Read more

எல்லா பக்கமும் வம்பு வளர்க்கும் சீமான்! – நாம் தமிழரின் இலக்குதான் என்ன?

பெரியார், விஜய், திமுக, காங்கிரஸ் என சீமான் எல்லா பக்கமும் வம்பு வளர்க்கிறார். இதனால் அவரது கட்சியிலிருந்து பலரும் விலகிக் கொண்டே இருக்கிறார்கள். இது அவரின் அரசியலுக்கு பின்னடைவாக முடியும் என ஒரு தரப்பு விமர்சிக்கிறது. ஆனால், இதுதான் சரியான தமிழ்த் தேசிய பாதை, சரியாகவே சீமான் பயணிக்கிறார் என்கிறது நாம் தமிழர் தரப்பு. ​வாக்கு வங்கி அடிப்படையில் ஒவ்வொரு தேர்தலிலும் வளர்ந்​துவந்த சீமானுக்கு, நடிகர் விஜய் ‘திரா​விடம் – தமிழ்த் தேசியம்’ என கலந்துகட்டி கொள்கையை … Read more

ரயில்வே வேலைக்கு நிலம் லஞ்சம்: லாலு குடும்பத்தினர் ஆஜராக டெல்லி நீதிமன்றம் உத்தரவு

ரயில்வே வேலைக்கு நிலம் லஞ்சமாக பெற்ற வழக்கில், பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், அவரது மகன் மற்றும் மகள் ஆகியோர் நேரில் ஆஜராக டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை ரயில்வே அமைச்சராக பணியாற்றிய காலத்தில் மேற்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் பணி நியமனம் செய்ய நிலங்களை லஞ்சமாக பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக … Read more