மியான்மரில் தொடரும் சோகம்.. பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்ததால் அதிர்ச்சி

நேபிடாவ், மியான்மர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் நேற்று முன் தினம் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.7 மற்றும் 6.4 ஆக பதிவான நிலையில், நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்து பெரும் சேதம் ஏற்பட்டது. அடுத்தடுத்து தாக்கிய நிலநடுக்கங்களால் மியான்மரில் பல நகரங்களில் வானுயர கட்டிடங்கள் சீட்டு கட்டுப்போல் சரிந்து, தரைமட்டமாகின. சாலைகள் பெயர்ந்தன. பாலங்கள் இடிந்தன. அதோடு இந்த நிலநடுக்கத்தால் மியான்மரின் மிகப்பெரிய அணையும் உடைந்தது. நிலநடுக்கத்தால் நேபிடாவ், மண்டலே ஆகிய … Read more

ராயல் என்ஃபீல்டு சூப்பர் மீட்டியோர் 650 ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள் – Royal Enfield Super Meteor 650 on-road price and specs

பிரபலமான நடுத்தர மோட்டார்சைக்கிள் தயாரிப்பாளரான ராயல் என்ஃபீல்டு நிறுவன க்ரூஸர் ரக சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் என்ஜின், மைலேஜ், நிறங்கள், அம்சங்கள், போட்டியாளர்கள் மற்றும் ஆன்-ரோடு விலை என அனைத்து முக்கிய விபரங்களையும் அறிந்து கொள்ளலாம். 2025 Royal Enfield Super Meteor 650 மிகவும் சக்திவாயந்த க்ரூஸர் ரக மாடலாக விளங்குகின்ற 650சிசி சூப்பர் மீட்டியோரில் பேரலல் ட்வீன் சிலிண்டர் எஞ்சின் பெற்று அதிகபட்சமாக அதிகபட்சமாக 47hp பவரினை 7250rpm-லும் 5,650rpm-ல் 52.3Nm டார்க்கினை … Read more

'இது கட்டமைக்கப்பட்ட சுரண்டல்!' ஏ.டி.எம்மில் பணம் எடுத்தால் ரூ.23 வரை கட்டணம்- RBI; ஸ்டாலின் கண்டனம்

வரும் மே மாதம் முதல், ஒரு மாதத்தில் குறிப்பிட்ட அளவிற்கு மேல் ஏ.டி.எம்களில் எடுக்கப்படும் பணத்திற்கு ரூ.2-ல் இருந்து ரூ.23 வரை வங்கிகள் கட்டணம் விதிக்கலாம் என்று கடந்த வெள்ளிக்கிழமை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “ஒன்றிய அரசு அனைவரையும் வங்கி கணக்கு தொடங்குமாறு அவசரப்படுத்தியது. அதன் பின்னர், பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டுவந்து டிஜிட்டல் இந்தியாவை முன்னுறுத்தியது. அதற்கு பிறகு என்ன ஆனது? … Read more

ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை பெறுவதில் தமிழக அரசின் நிலை என்ன? – அன்புமணி

சென்னை: ஆன்லைன் சூதாட்டத்தால் நிகழ்ந்த தற்கொலைகளில் 77 உயிரிழப்புகள் திமுக ஆட்சியில் தான் நிகழ்ந்துள்ளன. ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்யும் விஷயத்தில் அரசின் நிலைப்பாடு என்ன? உச்ச நீதிமன்றத்தை அணுகியோ, புதிய சட்டத்தை இயற்றியோ ஆன்லைன் சூதாட்டத்தைத் தடுக்கப் போகிறதா? அல்லது தற்கொலைகளை வேடிக்கைப் பார்க்கப் போகிறதா? என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி வட்டம் மிட்னாக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மதன்குமார் என்ற … Read more

நாக்பூரிலுள்ள ஆர்எஸ்எஸ் நிறுவனர்களின் நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி

நாக்பூர்: பிரதமர் மோடி நாக்பூரில் உள்ள டாக்டர் ஹெட்கேவர் ஸ்ம்ருதி மந்திருக்குச் சென்று அங்குள்ள ஆர்எஸ்எஸ் நிறுவனர்கள் கேசவ் பலிராம் ஹெட்கேவர், எம்.எஸ்.கோல்வாக்கர் ஆகியோரின் நினைவிடங்களுக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். பிரதமரின் இந்த நாக்பூர் வகையின் போது, ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் தலைவர் மோகன் பாவத், சங்கத்தின் முன்னாள் பொதுச்செலாளர் சுரேஷ் பைய்யாஜி, மகராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ஆகியோர் உடன் இருந்தனர். இதில் பட்னாவிஸும், நிதின் கட்கரியும் நாக்பூரைச் சேர்ந்தவர்கள் … Read more

இந்தியாவுடனான வரி விதிப்பு பேச்சுவார்த்தை சுமுகமாக நடக்கிறது: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தகவல்

வாஷிங்டன்: இந்தியாவுடனான வரி விதிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை சுமுகமாக நடக்கிறது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் கூறியதாவது: இந்திய பிரதமர் மோடி சமீபத்தில் இங்கு வந்திருந்தார். நாங்கள் எப்போதும் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இது கொடுமையானது. அவர் (மோடி) புத்திசாலியான மனிதர், உண்மையில் எனது சிறந்த நண்பர். அவருடனான பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்தது. இந்தியா, … Read more

மனோஜ் பாரதிராஜாவுக்கு இரங்கல் தெரிவிக்காத டாப் நடிகர்கள்! அவ்ளோ பிசியா? யாரெல்லாம் தெரியுமா?

Actors Who Did Not Condolence Manoj Bharathiraja Death : தமிழ் திரையுலகின் நடிகராக விளங்கிய மனோஜ் பாரதிராஜா சமீபத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது இறப்புக்கு பெரிய பிரபலங்கள் சிலர் இரங்கல் தெரிவிக்கவில்லை என்ற ஆதங்கம் ரசிகர்களுக்கு இடையே எழுந்துள்ளது.  

பத்திரப்பதிவு தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அரசாணை!

பெண்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்படும் சொத்துக்களுக்கு பதிவு கட்டணத்தில் 1% குறைக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்த நிலையில், அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஹர்திக் பாண்டியா vs சாய் கிஷோர் மோதல் : போட்டிக்குப் பிறகு நடந்தது இதுதான்..!

Hardik Pandya, Sai Kishore : ஐபிஎல் 2025 தொடரின் நேற்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. அதேபோல் மும்பை இந்தியன்ஸ் நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவி புள்ளிப் பட்டியலில் 9வது இடத்தில் இருக்கிறது. இந்த போட்டியின்போது ஹர்திக் பாண்டியா – சாய் கிஷோர் இடையே மோதல் ஏற்பட்டது. பேட்டிங் ஆடிக் … Read more

நடுவானில் உயிரிழந்த பயணி; அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

லக்னோ, பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து நேற்று தலைநகர் டெல்லிக்கு இண்டிகோ விமானம் சென்றுகொண்டிருந்தது. விமானத்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். உத்தரபிரதேசத்தின் லக்னோ வான்பரப்பில் பறந்துகொண்டிருந்தபோது, விமானத்தில் பயணித்த சதீஷ் சந்திர பர்மன் (வயது 63) என்ற பயணிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவர் நடுவானில் விமானத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து உடனடியாக விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விமானம் லக்னோ விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. பின்னர், உயிரிழந்த பயணியின் உடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு … Read more