PM Internship Scheme : 10, 12, டிப்ளோமா, கல்லூரி முடித்தவர்களுக்கு இறுதி வாய்ப்பு – மார்ச் 31 கடைசி தேதி

PM Internship : பிரதமரின் இன்டர்ன்ஷிப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க இன்னும் ஒருநாள் மட்டுமே எஞ்சியிருக்கிறது. மார்ச் 31 ஆம் தேதி நாளை கடைசி நாள் ஆகும்.  

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம் – ரிக்டர் 5.1 ஆக பதிவு

நேபிடா, மியான்மர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் நேற்று அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.7 மற்றும் 6.4 ஆக பதிவான நிலையில், நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்து பெரும் சேதம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் மியான்மரில் சுமார் ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்ததாகவும், சுமார் 2 ஆயிரம் பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. அங்கு மீட்புப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு … Read more

Summer Skin Problems: வியர்வை, வேனல்கட்டி, அரிப்பு, படர்தாமரை… தீர்வு என்ன?

கோடைக்காலத்தில் சருமம் மற்றும் கூந்தல் சார்ந்து ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் அவற்றுக்கான தீர்வுகள் குறித்தும் பேசுகிறார் சென்னையைச் சேர்ந்த சருமநோய் மருத்துவர் வானதி திருநாவுக்கரசு. SUMMER Summer Health Drinks: கோடையில் உடல் குளிர்ச்சியாக இருக்க என்னென்ன அருந்தலாம்? இந்த ஆடைகளுக்கு நோ “கோடைக்காலத்தில் வியர்வை அதிகம் சுரக்கும். அதனால் எண்ணெய்ப்பசையும் அதிகமாகும். வியர்க்குரு ஏற்படும். இந்த நாள்களில் இரு வேளை குளிப்பது அவசியம். இரண்டு வேளையும் குளிர்ந்த நீரில்தான் குளிக்க வேண்டுமே தவிர வெந்நீரில் குளிக்கக் … Read more

தொண்டர்களை உற்சாகப்படுத்த விஜய் பேசியிருப்பார்; தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சி அதிமுகதான் – பழனிசாமி திட்டவட்டம்

சேலம்: தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக விஜய் ஏதேனும் பேசியிருப்பார். தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சி அதிமுகதான் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். சேலம் மாவட்டம் ஓமலூர் பேருந்து நிலையம் அருகே அதிமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீர்மோர் பந்தலை நேற்று திறந்துவைத்து, பொதுமக்களுக்கு நீர்மோர், பழங்களை வழங்கிய பழனிசாமி, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு: ‘தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து சந்திசிரிக்கிறது. இதுசம்பந்தமாக சட்டமன்றத்தில் பேச எதிர்கட்சிகளுக்கு அனுமதிக்காமல் வெளியேற்றுகின்றனர், … Read more

நண்பர்களின் ரூ.16 லட்சம் கோடி கடன் ரத்து: பாஜக அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: ‘‘கோடீஸ்வர நண்பர்களின் ரூ.16 லட்சம் கோடி கடனை பாஜக அரசு தள்ளுபடி செய்துள்ளதால் வங்கித் துறை சிக்கலை சந்தித்துள்ளது. உழியர்கள் மன அழுத்தத்துடன் மோசமான சூழலில் பணியாற்றுகின்றனர்’’ என மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறியுள்ளார். ஐசிஐசிஐ வங்கியில் பணியாற்றிய முன்னாள் ஊழியர்கள் குழு, மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசியது. இதன்பின் எக்ஸ் தளத்தில் ராகுல் கூறியிருப்பதாவது: ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் ஊழியர்கள் குழுவை … Read more

நிலநடுக்கத்தால் 1,600 பேர் பரிதாப உயிரிழப்பு: மியான்மர் விரைந்தது இந்திய மீட்பு படை

நேப்பிடா: மியான்மர் நிலநடுக்கத்தில் இதுவரை 1,600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 3,500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் (பர்மா) மோனிவா நகருக்கு அருகே நேற்று முன்தினம் காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 7.7 ஆக பதிவானது. அடுத்த 10 நிமிடங்களில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 6.8 ஆக பதிவானது. பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. மியான்மர் தலைநகர் நேப்பிடா, … Read more

வெண்ணுமலையப்பர் திருக்கோவில்,  பெரியகண்டியங்குப்பம்.  விருத்தாசலம்

வெண்ணுமலையப்பர் திருக்கோவில்,  பெரியகண்டியங்குப்பம்.  விருத்தாசலம் தல சிறப்பு : விருத்தாலம் நகரின் காவல் தெய்வமாக இக்கோயில் அமைந்துள்ளது. பொது தகவல் : கோயில் கிழக்கு பார்த்து அமைந்துள்ளது. பிரகாரத்தில் விநாயகர், முருகன், ஆதி அய்யனார், கருப்பசாமி, சுந்தரமூர்த்தி அய்யனார், தட்சிணாமூர்த்தி சன்னதிகள் அமைந்துள்ளன. தல வரலாறு : சுந்தரமூர்த்தி நாயனார் திருவாரூரில் இருந்து திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) வழியாக திருநாவலூர் சென்றார். அப்போது விருத்தகிரீஸ்வரர் அவரை அழைத்து, தன்னை பற்றி பாடல் பாடுமாறு கூறினார். அதற்கு சுந்தரமூர்த்தி நாயனார் … Read more

செந்தில் பாலாஜி மீதான வழக்குகளின் நிலை குறித்த விசாரணை அறிக்கையை மே 2-க்குள் அளிக்க வேண்டும்: சிறப்பு நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: செந்தில் பாலாஜி மீதான வழக்குகளின் விசாரணை நிலை அறிக்கையை மே 2-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு போக்குவரத்துக் கழகங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி லஞ்சம் பெற்று பணமோசடியில் ஈடுபட்டதாக, கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்த தற்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜி மீது 3 பண மோசடி வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இந்த வழக்குகளின் விசாரணை, சென்னை எம்.பி, … Read more

பிரதமர் மோடி அரசின் முயற்சிகளால் வெளிநாட்டு சிறைகளில் இருந்து 10,000 இந்தியர்கள் விடுதலை

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் ராஜதந்திர முயற்சிகளின் பலனாக கடந்த 2014 முதல் வெளிநாட்டு சிறைகளில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் விடுதலை பெற்றுள்ளதாக அதிகாரிகள் கூறினர். இதுகுறித்து மத்திய அரசின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த 2014 முதல் பிரதமர் மோடி தலைமையிலான அரசு வெளிநாடுகளில் உள்ள இந்திய குடிமக்களின் நலனுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. தூதரக பேச்சுவார்த்தை மற்றும் உயர்நிலை தலையீடுகள் மூலம் வெளிநாட்டு சிறைகளில் இருந்து 10 ஆயிரத்துக்கும் … Read more

பள்ளிகளில் பாதுகாப்பு நடைமுறை குறித்து ஆய்வு நடத்த கோரிய மனு தள்ளுபடி

சென்னை: தமிழகம் முழுவதும் பள்ளிகளின் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்ய முன்னாள் நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க கோரிய பொதுநல வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் யுகேஜி படித்து வந்த 4 வயது சிறுமி, கடந்த ஜனவரி 3-ம் தேதி பள்ளி வளாகத்தில் உள்ள செப்டிக் டேங்கில் விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பாதுகாப்பு நடைமுறைகளை ஆய்வு செய்ய … Read more