நேபாளத்தில் முடியாட்சிக்கு ஆதரவான போராட்டத்தில் வன்முறை

காத்மாண்டு: நேபாளத்தில் முடியாட்சிக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் கார்களுக்கு தீ வைக்கப்பட்டன, கடைகள் சூறையாடப்பட்டன. இதனால், தலைநகர் காத்மாண்டில் பதற்றமான சூழல் நிலவுகிறது. நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சி கோரி, முன்னாள் மன்னர் ஞானேந்திர ஷாவின் ஆதரவாளர்கள் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தலைநகர் காத்மாண்டுவில் நேற்று நடைபெற்ற போராட்டத்தின்போது வன்முறை ஏற்பட்டது. ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் அலுவலகத்தைத் தாக்கிய நூற்றுக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள், வாகனங்களுக்கு தீ வைத்து, கடைகளை … Read more

கமல் பெயரில் மோசடி? ராஜ்கமல் பிலிம்ஸ் எச்சரிக்கை!

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பெயரை அனுமதியின்றி பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மியான்மரில் இன்று பிற்பகல் மீண்டும் நிலநடுக்கம்: 4.7 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது

மியான்மரில் இன்று (சனிக்கிழமை) பிற்பகல் 2.50 மணிக்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இதன் தீவிரம் 4.7 ஆக பதிவானதாக இந்தியாவின் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை பிற்பகல் மியான்மர் மற்றும் அண்டை நாடான தாய்லாந்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் மற்றும் பாலங்கள் தரைமட்டமாகின. ரிக்டரில் 7.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் சில நிமிட நேரம் வரை நீடித்ததால் மியான்மரில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது, இந்த எண்ணிக்கை மேலும் … Read more

டெல்லியில் பா.ஜ.க. சார்பில் இன்று வேலு நாச்சியாருக்கு புகழஞ்சலி

புதுடெல்லி, ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்ட முதல் பெண் ஆட்சியாளர் என்ற பெருமையை பெற்றவர் தமிழகத்தின் சிவகங்கை ராணி வேலு நாச்சியார். வீரமங்கை வேலு நாச்சியாருக்கு புகழ் சேர்க்கும் நிகழ்வு டெல்லியில் உள்ள கேதர்நாத் ஷானி கலையரங்கத்தில் இன்று (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு நடக்கிறது. நிகழ்ச்சியில் அவரைப்பற்றிய சித்திர புத்தக வெளியீடும், நாடக நிகழ்ச்சியும் நடைபெறும். இந்த நிகழ்ச்சிக்கு பா.ஜனதா தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்குகிறார். மேலும் இந்நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை மந்திரி … Read more

சென்னை அணி தோற்றதை கிண்டல் செய்த இளைஞர் மீது தாக்குதல்

சென்னை, ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று சேப்பாக்கத்தில் நடந்த 8வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்சை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் … Read more

Earthquake: மியான்மர், தாய்லாந்தை உலுக்கிய நிலநடுக்கம்; உயரும் பலி எண்ணிக்கை… அச்சத்தில் மக்கள்!

மியான்மரில் கடந்த சில ஆண்டுகளாகவே துப்பாக்கி முனையில் ராணுவ ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. ஆட்சியைக் கைப்பற்ற அங்கு ஏரளமான கிளர்ச்சிப் படைகள் தோன்றி, ராணுவத்திற்கும் – கிளர்ச்சிப் படைகளுக்குமிடையே எப்போதும் துப்பாக்கிக் குண்டுகள் முழங்கிய வண்ணமிருந்தன. இது மக்களுக்கு கடந்த சில ஆண்டுகளாகவே மன நடுக்கத்தை ஏற்படுத்தி வந்த நிலையில், இப்போது இயற்கை பேரிடராக கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு நாட்டையே உலுக்கிப் போட்டிக்கிறது. மியான்மர், தாய்லாந்து நில நடுக்கம் இந்திய நேரப்படி நேற்று காலை 11.30 மணி … Read more

திருவள்ளூர் | செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணிபுரிந்த ஒடிசா மாநில தொழிலாளர்கள் 55 பேர் மீட்பு

திருவள்ளூர்: பெரியபாளையம் அருகே தனியார் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணிபுரிந்து வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 55 பேர் மீட்கப்பட்டனர். திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே திருக்கண்டலம் கிராமத்தில் தனியார் செங்கல் சூளை உள்ளது. இதில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 55 பேர் கடந்த 3 மாதங்களாக பணியாற்றி வந்தனர். இந்நிலையில், இவர்களை செங்கல் சூளை நடத்துபவர்கள் கொத்தடிமைகளாக நடத்துகிறார்கள் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப்புக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையில் … Read more

சுற்றுச்சூழலை பாதுகாக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் முக்கிய பங்காற்றியுள்ளது: திரவுபதி முர்மு

புதுடெல்லி: நாட்டின் சுற்றுச்சூழல் நிர்வாகத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயம் முக்கிய பங்காற்றியுள்ளதாகவும், அதன் தீர்ப்புகள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் ‘சுற்றுச்சூழல் – 2025’ எனும் இரணடுநாள் தேசிய மாநாட்டை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு புதுடெல்லியில் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “சுற்றுச்சூழல் தொடர்பான அனைத்து நாட்களும், அவற்றின் நோக்கங்களையும், திட்டங்களையும் ஒவ்வொரு நாளும் மனதில் கொண்டு, முடிந்தவரை அவற்றை நமது … Read more

மியான்மர், தாய்லாந்து பூகம்ப பலி 1000-ஐ கடந்தது: ‘ஆபரேஷன் பிரம்மா’ மூலம் இந்தியா உதவிக்கரம்!

மியான்மர், தாய்லாந்தில் பூகம்பத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1000-ஐ கடந்துள்ளது. 1600-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்திய அரசு ‘ஆபரேஷன் பிரம்மா’ என்ற பெயரில் மியான்மருக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பிவைத்துள்ளது. உணவு, கூடாரங்கள், அத்தியாவசிய மருந்துகள் என 15 டன் அளவிலான பொருட்களை இந்திய விமானப் படையின் C130J விமானம் மூலம் மியான்மருக்கு கொண்டு சேர்த்துள்ளது. பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு: இதற்கிடையில், மியான்மரின் ராணுவ ஆட்சித் தலைவரான மின் ஆங் ஹ்ளெய்ங்கிடம் பிரதமர் நரேந்திர மோடி … Read more

2026-ல் தமிழக முதல்வர் ஆவது யார்? சி வோட்டர் கணக்கெடுப்பில் மக்கள் சொன்ன பெயர்!!

Chief Minister In 2026 Assembly Elections C Voter Results : பல விதமான அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வரும் வேளையில், 2026ஆம் ஆண்டில் யார் தங்களுக்கு முதலமைச்சராக வேண்டும் என்பது குறித்து மக்களிடம் சிவோட்டர் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.