GT vs MI: குஜராத் அணியை வீழ்த்துமா ஹர்திக் படை.. முதல் வெற்றியை பதிவு செய்யப்போகும் அணி எது?

ஐபிஎல் தொடர் கடந்த 22ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 8 லீக் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், விளையாடிய இரண்டு போட்டிகளிலுமே வெற்றி பெற்று பெங்களூரு அணி முதல் இடத்தில் உள்ளது. இந்த நிலையில், இன்று நடைபெற இருக்கும் 9வது லீக் ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இப்போட்டி குஜராத் டைட்டன்ஸ் அணியின் சொந்த மைதானமான, அகமதாபாத் நரேந்திர மோடி … Read more

ரூ.32.09 கோடி மதிப்பில் காவல்துறைக்கு புதிய வாகனங்கள்! கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை:  தமிழ்நாடு காவல்துறைக்கு, ரூ.32.09 கோடி மதிப்பில் புதிய வாகனங்கள் வாங்கப்பட்டுஉள்ளது. அதை  முதல்வர் ஸ்டாலின்  இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்,  தமிழ்நாடு காவல்துறைக்கு ரூ.32.09 கோடி மதிப்பில்  வாங்கப்பட்டுள்ள புதிய வாகனங்கள் சேவையை  தொடங்கி வைத்தார். தமிழ்நாடு காவல்துறைக்கு ரூ.32.9 கோடி செலவில்  500 இருசக்கர வாகனங்கள், 300 நான்கு சக்கர வாகனங்கள் வாங்கப்பட்டு உள்ளது. இந்த வாகனங்களை,  கொடியசைத்து முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

கவுன்ட்டரில் எடுத்த ரெயில் டிக்கெட்டை ஆன்லைன் மூலம் ரத்து செய்யலாம் – அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

புதுடெல்லி, டிக்கெட் கவுன்ட்டரில் காத்திருப்போா் பட்டியல் டிக்கெட்டை வாங்கியவா்கள், இருக்கை உறுதியாகாத நிலையில் ரெயில் புறப்படுவதற்கு முன்பாக டிக்கெட் கவுன்ட்டருக்கு சென்று ரத்து செய்யவேண்டிய நிலை குறித்து மாநிலங்களவையில் பா.ஜ.க. எம்.பி. மேதா விஷ்ரம் குல்கா்னி கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு பதிலளித்த ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், ரெயில் நிலைய டிக்கெட் கவுன்ட்டர்களில் எடுத்த டிக்கெட்டை ஆன்லைன் மூலம் ரத்து செய்யலாம் என்று தெரிவித்தார். ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் அல்லது 139 எண்ணுக்கு அழைத்து கவுன்ட்டர்களில் எடுத்த … Read more

ஐ.எஸ்.எல்.கால்பந்து: பெங்களூரு- மும்பை அணிகள் இன்று மோதல்

பெங்களூரு, 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இதில் பங்கேற்ற 13 அணிகள் தங்களுக்குள் உள்ளூர்- வெளியூர் அடிப்படையில் 2 முறை மோதின. லீக் சுற்று முடிவில் முதல் இரு இடங்களை பிடித்த மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட்ஸ், எப்.சி. கோவா அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறியது. 3 முதல் 6-வது இடங்களை பெற்ற பெங்களூரு எப்.சி., நார்த் ஈஸ்ட் யுனைடெட், ஜாம்ஷெட்பூர் எப்.சி., மும்பை சிட்டி எப்.சி. ஆகிய … Read more

`எங்கள் பொறுமையை சோதிக்க வேண்டாம்' – குணால் கம்ராவை கைது செய்ய சிவசேனா அமைச்சர் கோரிக்கை

மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவில் இருந்து வெளியில் வந்ததை சித்திரிக்கும் விதமாக, அவரை துரோகி என்று விமர்சித்து காமெடி நடிகர் குணால் கம்ரா காமெடி ஷோவில் பாடினார். மும்பையில் இக்காமெடி ஷோ நடந்த ஸ்டூடியோவை சிவசேனாவினர் அடித்து உடைத்தனர். இவ்விவகாரத்தில் குணால் கம்ரா மீது மும்பை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு ஆஜராகும்படி இரண்டு முறை சம்மன் அனுப்பி இருக்கின்றனர். ஆனால் அவரைக் கைதுசெய்ய சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து … Read more

‘4 சுவர்களுக்குள்ளேயே 2 ஆண்டு அரசியலை விஜய் முடித்துவிட்டார்’ – கே.பி.முனுசாமி

கிருஷ்ணகிரி: விஜய் மக்களை சந்திக்காமல் 4 சுவர்களுக்குள்ளேயே 2 ஆண்டுக்கால அரசியலை முடித்துவிட்டார் என கிருஷ்ணகிரியில் அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில், ராசுவீதி, ரவுண்டானா சேலம் சாலையில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது. இதில், அதிமுகவின் துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி பங்கேற்று பொதுமக்களுக்கு பழங்கள், நீர்மோர் வழங்கினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுகவினர் சந்தித்தது, கூட்டணிக்காக … Read more

வாக்குறுதியளித்தபடி ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்: அமித் ஷா

புதுடெல்லி: முன்னர் உறுதியளித்தபடி ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், அதற்கான காலக்கெடு குறித்து அவர் தெரிவிக்கவில்லை. நேற்று (மார்ச் 28, 2025) இரவு நடைபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமித் ஷா, “ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து மீண்டும் வழங்கப்படும் என்று நாங்கள் உறுதியளித்துள்ளோம். ஆரம்பத்திலிருந்தே, மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று நாங்கள் கூறி வருகிறோம். ஆனால் அது எப்போது என்பதை பொது மன்றத்தில் … Read more

அமெரிக்க வெள்ளை மாளிகையின் இப்தார் விருந்தில் ட்ரம்ப் பங்கேற்பு

மேற்காசிய நாடுகளுடனான மோதல்களுக்கு மத்தியில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற இப்தார் விருந்தில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது: முஸ்லிம்களின் நலனுக்கான செயல்பாடுகளில் எனது நிர்வாகம் எப்போதும் அவர்களுடன் கைகோத்து நிற்கும். அத்துடன் மத்திய கிழக்கில் அமைதியைக் கொண்டு வரும் வகையில் ராஜதந்திர ரீதியில் தொடர்ந்து நடவடிக்கைகளை எடுக்கும். அமெரிக்காவில் கடந்த நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் முஸ்லிம் சமூகத்தினர் பெருமளவில் ஆதரவளித்தனர். அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். பல சவால்கள் இருப்பினும் அவர்களின் … Read more

நடிகை அபிநயாவின் வருங்கால கணவர் இவர்தான்! முதன்முறையாக வெளியான போட்டோ..

Actress Abhinaya With Her Fiance Photo : பிரபல நடிகை அபிநயா, சில நாட்களுக்கு முன்பு தான் ஒருவரை காதலிப்பதாக கூறியதை அடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ள போகிறவரின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.  

2026ல் திமுக vs தவெக தான் போட்டியா? தமிழச்சி தங்கபாண்டியன் சொன்ன பதில்!

திமுக என்பது வளர்ந்த ஆலமரம், எது குறித்தும் யாருடைய சாவல்களுக்கும் அது அஞ்சாது என தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் பேட்டி.