உடல்நிலையில் முன்னேற்றம்: அபாய கட்டத்தை தாண்டிய போப் பிரான்சிஸ்

வாடிகன் சிட்டி, கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் (88) மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக கடந்த மாதம் 14-ந் தேதி ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில், அவருக்கு நிமோனியா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஏற்கனவே நாள்பட்ட நுரையீரல் நோயால் அவதிப்படும் போப் பிரான்சிசுக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டதால் அவரது உடல்நிலை மோசமடைந்து கவலைக்கிடமானது. தொடர் சிகிச்சையின் பலனாக போப் பிரான்சிசின் உடல்நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், எனினும் அவர் … Read more

Elon Musk: தனது நிறுவன ஊழியர் சிலிஸ் மூலம் 4வது குழந்தை; 14 குழந்தைக்குத் தந்தையானார் எலான் மஸ்க்

எலான் மஸ்க் தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஷிவோன் சிலிஸ் என்ற பெண் ஊழியருடன் நான்காவது குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறார். 53 வயதான எலான் மஸ்க், கடந்த 2021ம் ஆண்டு தனது ‘நியூரோலிங்க்’ நிறுவனத்தில் பணிபுரியும் ஷிவோன் சிலிஸ் என்ற பெண் ஊழியருடன் குழந்தையைப் பெற்றெடுத்தார். பிறகு, இவர்களுக்கு 2022ம் ஆண்டு இரட்டைக் குழந்தைகளைப் பிறந்தது. தற்போது இவர்கள் நான்காவது குழந்தையைப் பெற்றெடுத்திருக்கின்றனர். Discussed with Elon and, in light of beautiful Arcadia’s birthday, we felt … Read more

தங்கச்சிமடத்தில் ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்

ராமநாதபுரம்: இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், கைப்பற்றப்பட்ட படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி, ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் தங்கச்சிமடத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஜனவரியிலிருந்து 18 படகுகள் சிறைபிடிக்கப்பட்டு 131 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 38 மீனவர்கள் இலங்கை நீதிமன்றத்தால் தண்டனை பெற்று அங்குள்ள சிறைகளில் உள்ளனர். மேலும் 42 தமிழக மீனவர்கள், 13 காரைக்கால் மீனவர்கள் நீதிமன்ற விசாரணையில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இலங்கை சிறைகளில் உள்ள மீனவர்களையும், … Read more

“சமூகத்தில் நடக்கும் வன்முறையில் சினிமாவுக்கும் பங்கு இருக்கலாம், ஆனால்…” – சுரேஷ் கோபி கருத்து

திருவனந்தபுரம்: “சமூகத்தில் நடக்கும் வன்முறையில் சினிமாவுக்கும் பங்கு இருக்கலாம். ஆனால், அதுவே மூல காரணம் என சொல்லிவிட முடியாது” என மத்திய இணை அமைச்சரும், நடிகருமான சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார். பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் சுற்றுலாத் துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபியிடம், ‘சமூகத்தில் நிகழும் வன்முறை சம்பவங்களுக்கு சினிமாவின் பங்கு என்ன?’ என்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “திரைப்படங்களில் வன்முறையைக் காட்டக் கூடாது அல்லது அதைக் குறைக்க வேண்டும் … Read more

வெள்ளை மாளிகை ‘சம்பவம்’ – ட்ரம்ப் ரியாக்‌ஷன், ஜெலன்ஸ்கி எதிர்வினை என்ன?

கீவ்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையிலான சந்திப்பு கடும் வாக்குவாதத்தில் முடிவடைந்ததது. உக்ரைன் விவகாரத்தில் தீர்வுக்கான அமெரிக்காவின் முயற்சி தோல்வி அடைந்தது. அதன்பின் விருந்து நிகழ்வு ரத்து, வெள்ளை மாளிகையில் இருந்து உக்ரைன் குழு வெளியேற்றம் என அடுத்தடுத்து பரபரப்புகள் அரங்கேறின. அதன் தொடர்ச்சியாக இரு தலைவர்களும் ரியாக்‌ஷன்களுடன் கூடிய அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து கருத்துகளை வெளியிட்டுள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகையில் … Read more

'உண்மையை பேசுங்கள்…' விஜய்க்கு பாடம் நடத்திய சரத்குமார் – என்ன சொன்னார்?

Tamil Nadu Latest News: கருத்தோடு தெளிவாகவும் புள்ளி விவரங்களோடு உண்மையை மட்டுமே விஜய் பேச வேண்டும் என பாஜகவின் நட்சத்திர பிரமுகர் சரத்குமார் தெரிவித்தார்.

டெல்லி : தமிழ்நாடு இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

டெல்லி தலைநகர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இன்று டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டலால் தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த சுப்ரீம்கோர்ட்டு நீதிபதி மகாதேவன் உள்பட அனைத்து விருந்தினர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இந்த வெடிகுண்டு மிரட்டல் இமெயில் மூலம் விடுக்கப்பட்டுள்ளது/ தொடர்ந்து மோப்ப நாய்கள் உதவியுடன் டெல்லி போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியில் ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. இதுவரை … Read more

வெள்ளை மாளிகையில் டிரம்ப்-ஜெலன்ஸ்கி சந்திப்பு: கனிமவள ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை

வாஷிங்டன், உக்ரைன்-ரஷியா இடையேயான போர் கடந்த 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் ஆயுத மற்றும் பொருளாதார உதவியுடன் உக்ரைன் அரசு இந்த போரை எதிர்கொண்டு வருகிறது. அதே சமயம், அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், உக்ரைன்-ரஷியா போரை முடிவுக்கு கொண்டுவர முயற்சித்து வருகிறார். முன்னதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சர்வாதிகாரி போல் செயல்படுவதாக டொனால்டு டிரம்ப் கடுமையாக விமர்சித்திருந்தார். உக்ரைனில் 2019-ல் … Read more

Haryana: 'நஷ்டமான தொழில்… காப்பீட்டுத் தொகையைப் பெறக் கொலை' – சினிமா பாணி சம்பவம்; என்ன நடந்தது?

ஹரியானா மாநிலம் ஹிசாரைச் சேர்ந்தவர் ராம்மெஹர். கொரோனா பேரிடர் காலத்திற்கு முன்பு, தொழிற்சாலை நடத்தி வந்த இவர், லாக் டவுனின் போது இவரது தொழிற்சாலை பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. அதனால், அவரது கடன் அளவு ரூ.1.5 கோடிக்கு எகிறியுள்ளது. என்ன செய்வதென்று தெரியாத ராம்மெஹருக்கு, தான் போட்டிருந்த ஆயுள் காப்பீடு ஞாபகத்திற்கு வந்துள்ளது. காப்பீடு மூலம் இவருக்குக் கிட்டதட்ட ரூ.1.5 கோடி கிடைக்கும். இதனால் பிளான் ஒன்றைச் செய்துள்ளார். பிளான் படி, தன் சாயலைப் போலவே இருக்கும் … Read more