நீரிழிவு மருந்து செமக்ளூடைடு மாரடைப்பைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும்: ஆய்வு

உடலில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் செமக்ளூடைடு என்ற மருந்து, நீரிழிவு நோயால் ஏற்படும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை 14 சதவீதம் குறைக்கும் என்று ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வை நடத்திய அமெரிக்காவின் வட கரோலினா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், செமக்ளூடைடு உடல் எடையைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருப்பதாகவும், உடல் பருமனைக் கட்டுப்படுத்தும் மருந்தாகவும் செயல்படக்கூடும் என்றும் கூறினர். இதயத்தின் தமனிகளில் கொழுப்பு சேர்வதால், டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு இதயம் தொடர்பான பிரச்சினைகள் … Read more

நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வரும் ரமலான் பண்டிகை

புதுடெல்லி, ரமலான் பண்டிகையை நாடு முழுவதுமுள்ள இஸ்லாமிய மக்கள் இன்று கொண்டாடி வருகின்றனர். ரமலான் முடிவுக்கு வந்ததற்கான அறிகுறியாக பிறை சந்திரன் நேற்றிரவு தெரிந்தது. இதனை தொடர்ந்து இன்று காலையில் இருந்து, மசூதிகளுக்கு சென்ற அவர்கள் தொழுகையில் ஈடுபட்டனர். நன்றியுணர்வை பிரதிபலிக்கும் வகையில் சமூக மக்கள் ஒன்றாக திரண்டு தங்களுடைய அன்பை பகிர்ந்து கொண்டனர். அமைதி மற்றும் வளத்திற்காக வேண்டி கொண்ட அவர்கள், குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் மற்றும் அண்டை வீட்டாருடனும் கொண்டாட்டங்களை பகிர்ந்து கொண்டனர். இதன்படி, டெல்லியில் … Read more

20 ரன்கள் குறைவாக அடித்தோம்.. இருப்பினும்.. – சென்னைக்கு எதிரான வெற்றிக்குப்பின் ரியான் பராக்

கவுகாத்தி, 18-வது ஐ.பி.எல். தொடரில் நேற்று கவுகாத்தியில் நடைபெற்ற 11-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் ராஜஸ்தான் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி நிதிஷ் ராணாவின் அதிரடியின் மூலம் (81 ரன்கள்) 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு 182 ரன்கள் அடித்தது. சென்னை தரப்பில் கலீல் அகமது, பதிரானா, நூர் அகமது … Read more

RCB: `இனிமேல் இதுல நாங்கள்தான் நம்பர் 1' – சிஎஸ்கே-வை ஓரங்கட்டி ஆர்சிபி சாதனை

ஐபிஎல் 18-வது சீசன் கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. இதில், 17 சீசன்களாக சாம்பியன் பட்டம் வெல்லாத ஆர்.சி.பி அணி இந்த முறை நிச்சயம் கோப்பையை வெல்ல வேண்டும் என புதிய கேப்டனுடன் களமிறங்கியிருக்கிறது. பிலிப் சால்ட் அவுட்டானா கோலி, கோலி அவுட்டானா, படிக்கல், படிக்கல் அவுட்டானா பட்டிதார், பட்டிதார் அவுட்டானா லிவிங்ஸ்டன், லிவிங்ஸ்டன் அவுட்டானா ஜிதேஷ் சர்மா, ஜிதேஷ் சர்மா அவுட்டானா டிம் டேவிட் என பேட்டிங் யூனிட் மற்றும் ஹேசில்வுட், புவனேஷ்வர் குமார், யஷ் தயாள், க்ருனால் … Read more

ஏப்.6-ல் தமிழகம் வரும் பிரதமரை கண்டித்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு

சென்னை: “தமிழகத்துக்கு தர வேண்டிய ரூ.4,034 கோடியை தராமல் கிராமப்புற மக்களின் வாழ்வில் விளையாடுகிறது மத்திய அரசு. இதுபோன்ற காரணங்களால் தமிழகத்துக்கு ஏப்ரல் 6-ம் தேதி வருகை தரும், பிரதமர் மோடியை கண்டித்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றதிலிருந்தே தமிழகத்தையும், தமிழர்களையும் ஜனநாயக விரோத திட்டங்கள் … Read more

“சிறுபான்மையினரை பாதுகாப்பது பெரும்பான்மையினரின் கடமை” – மம்தா பானர்ஜி

கொல்கத்தா: சிறுபான்மையினரை பாதுகாப்பது பெரும்பான்மையினரின் கடமை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தில் உள்ள மொதபாரி பகுதியில் கடந்த 27ம் தேதி இரண்டு குழுக்களிடையே வன்முறை வெடித்தது. வன்முறை தொடர்பாக 61 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தை அடுத்து அப்பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்பட்டது. இந்நிலையில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கொல்கத்தாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இஸ்லாமியர்களின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மாநில முதல்வர் மம்தா பானர்ஜி,“மாநிலத்தில் … Read more

மியான்மர் பூகம்பம்: 700 முஸ்லிம்கள் உயிரிழப்பு முதல் தொடரும் உள்நாட்டு போர் வரை!

மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின்போது பல்வேறு மசூதிகளிலும் தொழுகையில் ஈடுபட்டிருந்த 700 முஸ்லிம்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், இந்த 700 பேரும் ஏற்கெனவே ராணுவ அரசு அதிகாரபூர்வமாக அறிவித்த 1,700+ உயிரிழப்பு கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளதா இல்லையா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. மியான்மரில் கடந்த 28-ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.7 புள்ளிகளாக பதிவான நிலநடுக்கத்தால், மண்டாலே நகரில் பல கட்டிடங்கள் இடிந்தன. அங்கு நிலவும் ராணுவ ஆட்சியால் போதிய வசதிகள் … Read more

தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ..100 கோடி சம்பளம் வாங்குபவர்! யார் தெரியுமா?

Dhanush To Cast Popular Actor As Hero In His Film: பிரபல நடிகர் தனுஷ் இயக்குநராகவும் களமிறங்கியிருக்கிறார். இவர், தனது அடுத்த படத்தில் யாரை ஹீரோவாக்க இருக்கிறார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.  

தோனி முன்பு போல் இல்லை.. உண்மையை உடைத்த ஸ்டீபன் பிளம்மிங்!

2025 ஐபிஎல் தொடரின் 8வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில், முதலில் பெங்களூரு அணி பேட்டிங் செய்து 197 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது. அந்த இலக்கை துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இப்போட்டி குறித்து பல்வேறு விமர்சனங்கள் சிஎஸ்கே அணி மீது வைக்கப்பட்டன.  குறிப்பாக எம். எஸ். தோனி 9ஆம் வரிசையில் இறங்கியது எக்கச்சக்கமான விமர்சனங்களை எதிர்கொண்டது. … Read more

செருப்புகள் ஜாக்கிரதை விமர்சனம்: செருப்புக்குள் வைரம்… சிரிக்க வைக்கிறதா சிங்கம்புலி சீரிஸ்?

சென்னையில் வைரக் கடத்தலில் ஈடுபடுகிறார் ரத்னம். அப்படி ஒரு நாள் அவர் வைரத்தைக் கடத்திச் செல்லும்போது காவல்துறையினருக்கு ரத்னத்தைப் பற்றி எங்கிருந்தோ தகவல் பறக்கிறது. அதனைத் தொடர்ந்து ரத்னத்தைக் காவல் துறையினர் பின் தொடர்கிறார்கள். காவல்துறைக்கு அஞ்சி தன்னுடைய செருப்பின் அடிப்பக்கத்தில் கடத்திக் கொண்டு வந்த வைரத்தை மறைத்து வைக்கிறார். பின், அந்த செருப்பைப் பத்திரப்படுத்த எதேச்சையாகப் பார்க்கும் தனது நண்பன் தியாகுவிடம் (சிங்கம் புலி) ஒப்படைக்கிறார் ரத்னம். Seruppugal Jaakirathai Review தியாகுவிடமிருந்த அந்தச் செருப்பை … Read more