கனடா தேர்தலில் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட ஒருவர் உட்பட மூன்று தமிழர்கள் வெற்றி

2025 கனேடிய பொதுத் தேர்தலில் போட்டியிட்ட ஆறு தமிழ் வேட்பாளர்களில் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் உள்ளிட்ட மூன்று தமிழர்கள் வெற்றிபெற்றுள்ளனர். இந்தத் தேர்தலில் விபரல் கட்சியின் சார்பில் மூவரும், கன்சர்வேடிவ் கட்சியின் சார்பில் இருவரும், பசுமை கட்சியின் சார்பில் ஒருவரும் என மொத்தம் ஆறு தமிழர்கள் வேட்பாளர்களாக போட்டியிட்டனர். இவர்களில் விபரல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அனிதா ஆனந்த் Oakville கிழக்கு தொகுதியிலும், Scarborough-Guildwood-Rouge Park தொகுதியில் ஹரி ஆனந்தசங்கரி, Pickering–Brooklin தொகுதியில் ஜுனிதா … Read more

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் நியமனம்

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா கடந்த 2024-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பதவியேற்றார். இவரது பதவிக் காலம் வரும் மே 13-ம் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே, உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியை பரிந்துரை செய்யுமாறு சஞ்சீவ் கன்னாவுக்கு மத்திய சட்ட அமைச்சகம் கடிதம் அனுப்பியிருந்தது. இதனையடுத்து, தனக்கு அடுத்ததாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்புக்கு மூத்த நீதிபதி பூஷன் ராமகிருஷ்ண கவாய் (பி.ஆர்.கவாய்) பெயரை சஞ்சீவ் கன்னா பரிந்துரை … Read more

கனடா: ஆம் ஆத்மி நிர்வாகியின் மகள் கடற்கரையில் சடலமாக மீட்பு – அதிர்ச்சி சம்பவம்

ஒட்டாவா, பஞ்சாப் மாநிலம் மொஹாலி மாவட்டம் டிராபாசி பகுதியை சேர்ந்த ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி தேவேந்தர் சிங். இவரது மகள் வன்ஷிகா (வயது 21) . வன்ஷிகா கடந்த 2 ஆண்டுகளுக்குமுன் கனடா சென்றார். அவர் ஒட்டாவாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வந்தார். இந்நிலையில், கடந்த 25ம் தேதி மாலை வன்ஷிகா தான் தங்கி இருந்த வீட்டில் இருந்து வெளியே சென்றார். அந்த வீட்டில் தங்கி இருந்த சக மாணவிகளிடம் , வேறு வாடகை … Read more

கேரளா: 5 வயது சிறுமியைக் கடித்த தெரு நாய்; தடுப்பூசி போடப்பட்டும் மரணமடைந்த சோகம்; என்ன நடந்தது?

கேரள மாநிலம் மலப்புரம் பெருவள்ளூரைச் சேர்ந்தவர் சல்மான் பாரிஸ். இவரது மகள் ஸியா பாரிஸ். 5 வயது ஆன ஸியா பாரிஸ் கடந்த மாதம் 29-ம் தேதி வீட்டுக்கு அருகே உள்ள கடைக்கு மிட்டாய் வாங்க நடந்து சென்றுள்ளார். அப்போது ஸியா பாரிஸைத் தெருநாய் ஒன்று ஆக்ரோஷமாகக் கடித்தது. அப்போது அவரைக் காப்பாற்ற வந்த சுமார் 6 பேரையும் அதே தெருநாய் கடித்தது. நாய் கடித்ததில் சிறுமி ஸியா பாரிஸுக்குத் தலை, முகம், உதடு, கை, கால் … Read more

“திமுகவினரின் மனங்களில் இருந்து ‘காலனி’ எப்போது அகலும்?” – எல்.முருகன் கேள்வி

சென்னை: “ஆவணங்களில் இருந்து காலனியை நீக்கினால் போதுமா? திமுகவினரின் மனங்களில் இருந்து ‘காலனி’ எப்போது அகலும்?” என்று மத்திய இணை அமைச்சரும், தமிழக பாஜக மூத்த தலைவருமான எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆவணங்களில் இருந்து காலனியை நீக்கினால் போதுமா? திமுகவினரின் மனங்களில் இருந்து ‘காலனி’ எப்போது அகலும்? ஆதிக்கத்தின் அடையாளமாகவும், தீண்டாமையின் குறியீடாகவும், வசை சொல்லாகவும் இருப்பதால் ‘காலனி’ என்ற சொல் இனிமேல் அரசு ஆவணங்களில் இருந்து நீக்கப்படும் என்று … Read more

‘பஹல்காம் தாக்குதலின்போது ‘ஜிப் லைன்’ ஆப்பரேட்டரின் ‘அல்லாஹு அக்பர்’ முழக்கம் இயல்பானதே’

புதுடெல்லி: கடந்த வாரம் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாத தாக்குதல் நடந்தபோது அங்கிருந்த ‘ஜிப் லைன்’ ஆப்பரேட்டர் ‘அல்லாஹு அக்பர்’ என முழக்கமிட்டது இயல்பான ரியாக்‌ஷன் தான் என என்ஐஏ கூறியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கடந்த 22-ம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த சாகச அனுபவத்துக்கான ஜிப் லைனில் சுற்றுலா பயணி ஒருவர் பயணித்துள்ளார். அதன்போது தனது செல்போனில் அதை வீடியோவாக பதிவு செய்துள்ளார் அந்த சுற்றுலா … Read more

Kuiper இன்டர்நெட் சாட்டிலைட்டை விண்ணில் செலுத்திய அமேசான்: மஸ்க் உடன் மோதும் பெசோஸ்

புளோரிடா: சாட்டிலைட் மூலம் அதிவேக இணைய சேவை வழங்கும் நோக்கில் Kuiper இன்டர்நெட் சாட்டிலைட்டை விண்ணில் செலுத்தி உள்ளது அமேசான் நிறுவனம். இதன் மூலம் எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் சாட்டிலைட் இணைய சேவைக்கு சவால் விடுத்துள்ளது ஜெஃப் பெசோஸின் அமேசான் நிறுவனம். உலக அளவில் இதன் மூலம் வேகமான மற்றும் மலிவு விலையில் பிராட்பேண்ட் இணைய சேவையை வழங்க அமேசான் திட்டமிட்டுள்ளது. அதற்கான தொடக்க புள்ளியாக 27 Kuiper இன்டர்நெட் சாட்டிலைட்டை ‘அட்லாஸ்’ ராக்கெட் மூலம் விண்ணில் … Read more

ரெட்ரோ ப்ரீ-புக்கிங் வசூல்ச சாதனை..போதை வழக்கில் நடிகர் விடுதலை! டாப் 5 சினிமா செய்திகள்

Today Top 5 Tamil Cinema News : தமிழ் சினிமாவில் ட்ரெண்டிங்கில் பல செய்திகள் இருக்கின்றன. அதில் டாப் 5 செய்திகள் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.

டெல்லியை சுருட்டிய நரைன், வருண்.. தோல்விகளில் இருந்து மீண்ட கொல்கத்தா!

ஐபிஎல்லின் 18வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இத்தொடரின் 48வது லீக் ஆட்டம் இன்று (ஏப்ரல் 29) டெல்லி அருன் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் அஜின்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.  டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி கொல்கத்தா நைட் … Read more

Ajith: "மனதளவில் மிடில் கிளாஸ்தான்; சூப்பர் ஸ்டார், தல பட்டங்கள் என்றுமே வேண்டாம்" – அஜித் குமார்

நடிகர் அஜித்குமார் நேர்காணல், திரைப்பட விழாக்களில் பல ஆண்டுகளாகவே கலந்துகொள்வதில்லை. சமூக வலைத்தளங்களில்கூட அவர் இருப்பதில்லை. சினிமாவில் நடிப்பதைத் தாண்டி, தனது தனிப்பட்ட வாழ்க்கை, கார் ரேஸிங் எனத் தனக்குப் பிடித்த துறைகளில் பல்வேறு பங்காற்றி சாதனைகளைப் படைத்து வருகிறார். சினிமா, மோட்டார் ரேஸிங் துறையில் சிறந்து விளங்கி வரும் அஜித்குமாருக்கு நேற்று (ஏப்ரல் 28) பத்ம பூஷண் விருது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவால் வழங்கப்பட்டது. மனைவி ஷாலினி, குழந்தைகள் அனுஷ்கா-ஆத்விக் மற்றும் அவரது குடும்பத்தினர் … Read more