மேற்கு வங்கத்தில் தொடரும் வக்ஃபு போராட்டம்: வன்முறை தொடர்பாக இதுவரை 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்ஃப் (திருத்த) சட்டத்திற்கு எதிரான வன்முறை போராட்டங்கள் தொடர்பாக மேலும் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதன் மூலம், மொத்த கைதுகளின் எண்ணிக்கை 150 ஆக அதிகரித்துள்ளது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மாவட்டத்தில் நடந்த வன்முறையில் இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். “அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, மேலும் புதிய வன்முறை சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை” என்று போலீசார் தெரிவித்தனர். “சுதி, துலியன், ஷம்ஷெர்கஞ்ச் மற்றும் ஜாங்கிபூர் … Read more

மேற்கு வங்காளத்தில் வக்பு திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்-மம்தா பானர்ஜி

கொல்கத்தா, மேற்குவங்காளத்தில் வக்பு திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று மம்தா பானர்ஜி உறுதியளித்துள்ளார். இது தொடர்பாக முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தனது எக்ஸ் தளபக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களுக்கும் எனது உண்மையான வேண்டுகோள், தயவுசெய்து அமைதியாக இருங்கள், நிதானமாக இருங்கள். மதத்தின் பெயரால் எந்த வன்முறையிலும் ஈடுபடாதீர்கள். ஒவ்வொரு மனித உயிரும் விலைமதிப்பற்றது. அரசியலுக்காக கலவரத்தைத் தூண்ட வேண்டாம். கலவரத்தைத் தூண்டுபவர்கள் சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கிறார்கள். அவர்கள் மீது கடும் … Read more

தென்கொரியா: சுரங்கப்பாதை இடிந்து விபத்து – மீட்புப்பணிகள் தீவிரம்

சியோல், தென்கொரியாவின் தலைநகர் சியோலில் வங்மயோங் என்ற நகரம் உள்ளது. இப்பகுதியில் பொதுமக்கள் வசதிக்காக சுரங்கப்பாதை கட்டப்பட்டு வந்தது. இந்நிலையில், சுரங்கப்பாதை இன்று திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் சுரங்கப்பாதை பணியை மேற்கொண்ட 2 ஊழியர்கள் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கிய 2 பேரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுரங்கப்பாதை அமைக்கும்போது அருகே உள்ள கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டதால் பெரும்பாலான ஊழியர்கள் பணியை நிறுத்திவிட்டு புறப்பட்டுள்ளனர். அப்போது திடீரென … Read more

நேஷனல் ஹெரால்டு வழக்கு: ரூ.700 கோடி சொத்துகளை பறிமுதல் செய்ய நோட்டீஸ் – அமலாக்கத்துறை அதிரடி

காங்கிரஸ் கட்சிக்குச் சொந்தமான நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கைக்கு சொந்தமான ரூ.2000 கோடி சொத்துகளை சட்டவிரோதமாக சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் வாங்கியதாக பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான சுப்ரமணிய சுவாமி கோர்ட்டில் 2012-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை அசோசியேடெட் ஜர்னல் லிமிடெட் நிறுவனம் நடத்தி வந்தது. அந்நிறுவனத்திற்கு 2000 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து இருந்தது. அந்த சொத்துகளை காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் 2010-ம் ஆண்டு சட்டவிரோதமாக யங் இந்தியன் … Read more

6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள் இல்லாத காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருபத்தூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். காஞ்சிபுரம் ஒன்றியம் திருப்புட்குழி ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.4.80 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 9 புதிய கட்டிடங்கள் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஆட்சியர் கலைச்செல்வி தலைமை தாங்கினார். மக்கள் … Read more

நேஷனல் ஹெரால்டு வழக்கில் ரூ.700 கோடி சொத்துகளை முடக்க நடவடிக்கை

நேஷனல் ஹெரால்டு வழக்கில் ரூ.700 கோடி சொத்துகளை முடக்க அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 1937-ம் ஆண்டில் நேருவால் தொடங்கப்பட்ட அசோசியேட்டட் ஐர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் (ஏஜேஎல்) சார்பில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வெளியிடப்பட்டு வந்தது. இதில் 5,000-க்கும் மேற்பட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் பங்குதாரர்களாக இருந்தனர். கடந்த 2008-ம் ஆண்டில் நேஷனல் ஹெரால்டு மூடப்பட்டது. அப்போது காங்கிரஸ் கட்சிக்கு, ஏஜேஎல் நிறுவனம் ரூ.90 கோடி கடன்பட்டிருந்தது. இந்த சூழலில் சோனியா காந்தி, ராகுல் … Read more

பாலியல் வழக்கு: சிக்கினார் மத போதகர் ஜான் ஜெபராஜ்… மடக்கி பிடித்த கோவை போலீசார்!

John Jebaraj Arrested: இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், கிறிஸ்தவ மத போதகர் ஜான் ஜெபராஜ் இன்று கைது செய்யப்பட்டார்.

அபிஷேக் சர்மா 6 மேட்சுகளாக அந்த பொக்கிஷத்தை வைத்திருந்தார் – டிராவிஸ் ஹெட்

Abhishek Sharma : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா பற்றிய ரகசியத்தை முதன்முறையாக டிராவிஸ் ஹெட் ஓபனாக தெரிவித்துள்ளார். ஐபிஎல் 2025 தொடரின் 27வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை பதற வைத்து அபார வெற்றியை பெற்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. பஞ்சாப் முதல் பேட்டிங் ஆடி 245 ரன்கள் குவித்த நிலையில், 2வது பேட்டிங் ஆடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 18.3 ஓவர்களிலேயே அந்த இலக்கை எட்டி வரலாற்று வெற்றியை … Read more

எண்ணூர் அதானி துறைமுகத்தில் ரூ. 9 கோடி மதிப்புள்ள வெள்ளிக் கட்டிகள் அபேஸ்… துறைமுக ஊழியர்கள் உள்ளிட்ட 7 பேர் கைது

10 நாட்களுக்கு முன்பு எண்ணூர் அருகே உள்ள அதானி காட்டுப்பள்ளி துறைமுகத்தில் இரண்டு கன்டெய்னர்களில் இருந்து ரூ.9 கோடி மதிப்புள்ள வெள்ளிக் கட்டிகளைக் கொள்ளையடித்த வழக்கில் ஏழு பேர் கொண்ட கும்பலை ஆவடி நகர காவல்துறை கைது செய்துள்ளனர். மார்ச் 30 அன்று லண்டனில் இருந்து சென்னை வந்திறங்கிய இந்த கன்டெய்னர்களை இறக்குமதி செய்த நிறுவனம், ஏப்ரல் 3ம் தேதி ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தங்கள் கிடங்கிற்கு கொண்டு சென்ற நிலையில் அதன் சீல் அடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. … Read more