“தமிழ்நாடு மிகுந்த பெருமை கொள்கிறது” – பத்ம பூஷண் விருது பெற்ற அஜித்துக்கு கட்சி தலைவர்கள் வாழ்த்து!

புதுடெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (ஏப்.28) நடைபெற்றது. இவ்விழாவில்,நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருதினை குடியரசுத் தலைவர் திரவுபதி வழங்கி கவுரவித்தார். இவ்விழாவில் நடிகர் அஜித் குமாரின் மனைவி ஷாலினி மற்றும் குடும்பத்தினர் கலந்துகொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி: தன் திரைத் துறை சாதனைகளுக்காக இந்திய அரசின் உயரிய … Read more

“சமரசம் இல்லை… பாகிஸ்தான் மண்டியிடும்!” – மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி

புதுடெல்லி: “இந்த முறை சமரசம் இருக்காது. அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும். அவர்கள் மண்டியிடுவார்கள்” என்று பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தான் மீதான நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதற்கான மத்திய அரசின் நடவடிக்கைகள் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, “எனக்கு நினைவு தெரிந்ததில் இருந்து பயங்கரவாதத்தை அரசு கொள்கையின் ஒரு கருவியாகப் பயன்படுத்தி வரும் நாடு பாகிஸ்தான். இதற்கு … Read more

குஜராத் பவுலர்களுக்கு தண்ணிகாட்டிய சூர்யவன்சி.. கிறிஸ் கெயிலுக்கு அடுத்து இவர்தான்.. ராஜஸ்தான் அபார வெற்றி!

நடப்பாண்டு ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று (ஏப்ரல் 28) தொடரின் 47வது லீக் ஆட்டம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இந்த போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைடன்ஸ் அணியும் ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.  இரவு 7 மணிக்கு டாஸ் வீசப்பட்ட நிலையில், அதனை வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரியான் பராக் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி குஜ்ராத் … Read more

பாகிஸ்தானின் இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும்… பஹல்காம் தாக்குதல் குறித்து நியாயமான விசாரணைக்கு சீனா அழைப்பு

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து “விரைவான மற்றும் நியாயமான விசாரணை” உட்பட, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான தற்போதைய சூழ்நிலையை “குளிர்விக்க” அனைத்து நடவடிக்கைகளையும் வரவேற்பதாக சீனா திங்களன்று கூறியது. மேலும் அனைத்து காலங்களிலும் தனது நட்பு நாடான பாகிஸ்தானின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பைப் பாதுகாப்பதற்கு சீனா ஆதரவளிக்கும் என்றும் தெரிவித்துள்ளது. “தற்போதைய சூழ்நிலையைத் தணிக்க உதவும் அனைத்து நடவடிக்கைகளையும் சீனா வரவேற்கிறது மற்றும் ஆரம்பத்திலேயே நேர்மையான மற்றும் நியாயமான விசாரணைகளை ஆதரிக்கிறது” என்று சீன வெளியுறவு அமைச்சக … Read more

DMK : நேரம் பார்த்து பொன்முடியை தூக்கிய MK Stalin | Vijay Vs Udhayanidhi | Imperfect Show 28.4.2025

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,  * செந்தில் பாலாஜி, பொன்முடி ராஜினாமா; மீண்டும் அமைச்சராகும்..! – அமைச்சரவை மாற்றங்கள் என்னென்ன? * “கரூர்- திருச்சி மாவட்டங்களை இணைக்கும் பாலம் என் கனவுத் திட்டம்” – செந்தில் பாலாஜி * தமிழக அரசு ஊழியர்களுக்காக 9 புதிய அறிவிப்புகள்… – சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் * சட்டமன்றத்தில் நடந்தது என்ன? * வழக்கறிஞர்களுக்கு ஸ்டாலின் கொடுத்த டீ பார்ட்டி! * “உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு துணைவேந்தர் மாநாட்டை நடத்துவது … Read more

“வெறுப்பு அரசியலின் மூலதனமே திராவிட இயக்கங்கள் தான்!” – ஹெச்.ராஜா

மதுரை: வெறுப்பு அரசியலின் மூலதனமாக இருப்பது திராவிட இயக்கங்கள் தான் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். மதுரையில் பாஜக சார்பில் அம்பேத்கர் ஜெயந்தி விழா கருத்தரங்கு இன்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் மாரி சக்கரவர்த்தி தலைமை வகித்தார். பெருங்கோட்டப் பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள், முன்னாள் மாவட்ட தலைவர்கள் மகா சுசீந்திரன், சசிராமன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் பாஜக தலைவர் ஹெச்.ராஜா சிறப்புரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “காஷ்மீர் தீவிரவாத தாக்குதலுக்கு … Read more

ஓடிடி தளங்களில் ஆபாசங்களை கட்டுப்படுத்த மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

புதுடெல்லி: ஓடிடி, சமூக வலைதளங்களில் நிலவும் கட்டுப்பாடற்ற ஆபாசங்களை தடுக்க ஏதேனும் நடவடிக்கை எடுக்கலாமே என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக, பத்திரிகையாளரும், முன்னாள் தகவல் ஆணையருமான உதய் மஹுர்கர் மற்றும் பிறர் தொடர்ந்த பொதுநல வழக்கு இன்று (ஏப்.28) நீதிபதிகள் பி.ஆர்.கவாய், ஏஜி மாஷிஷ் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, மத்திய அரசுக்கும், நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஆல்ட்பாலாஜி, முபி, உல்லு டிஜிட்டல் … Read more

‘CMF போன் 2 புரோ’ இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்தியாவில் ‘CMF போன் 2 புரோ’ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது நத்திங் நிறுவனம். முதல் முறையாக இந்த போனுடன் சார்ஜரையும் வழங்குகிறது நத்திங். இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது நத்திங் நிறுவனம். தொழில்நுட்ப சாதன உற்பத்தி நிறுவனமான நத்திங், ஹெட்செட் விற்பனை மூலம் சந்தையில் களம் கண்டது. தொடர்ந்து ஸ்மார்ட்போன் விற்பனையை 2022-ம் ஆண்டில் தொடங்கியது. இது ஸ்மார்ட்போன் ஆர்வலர்கள் மத்தியில் … Read more

அகமதாபாத் சர்வதேசத் திரைப்பட விழா: இரண்டு விருதுகளை வென்ற ‘வேம்பு’ படம்

மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷ் மற்றும் S.விஜயலட்சுமி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேம்பு’.  

பாதிக்கு பாதி விலையில் விற்பனையாகும் 2 டன் ஏசி.. உடனே வாங்கிடுங்க

Split ACs under 40,000: இந்த கடுமையான வெயிலில் நீங்களும் உங்களின் வீட்டில் ஏசி வாங்க திட்டமிட்டிருந்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது. உங்கள் பட்ஜெட் ரூ.40,000மாக இருந்தால், உங்களுக்காக ஏசிகளின் பட்டியலை இங்கே நாங்கள் கொண்டு வந்துள்ளோம். இ-காமர்ஸ் தளமான Amazon மற்றும் Flipkart தளத்தில் ACகள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பட்டியலில் உள்ள அனைத்து ஏசிகளும் 2 டன் எடை கொண்டவை, இதில் சிறந்த சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் வங்கப்பட்டுள்ளது. வங்கிச் … Read more