நீலகிரி, கோவை உள்பட 7 மாவட்டங்களில் சனிக்கிழமை கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை (ஏப்.5) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கோவை மாவட்டம் மக்கினம்பட்டி, தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் தலா 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. … Read more

பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு: நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

புதுடெல்லி: நாடாளுமன்ற இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. இதையடுத்து, பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவடைந்தது. நாடாளுமன்ற மக்களவை இன்று காலை 11 மணிக்கு கூடியது. அப்போது, வக்பு மசோதா நிறைவேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். அதேபோல், வக்பு மசோதா நிறைவேற்றம் அரசியலமைப்பின் மீதான வெட்கக்கேடான தாக்குதல் என்றும், சமூகத்தை பிளவுபட்ட நிலையிலேயே வைத்திருக்க பாஜக முயலவதாகவும் குற்றம் சாட்டிய காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மன்னிப்பு கோர வலியுறுத்தி ஆளும் … Read more

ரிலீஸ்க்கு முன்பே 175 கோடி வசூல்! சாதனை படைத்த ஜனநாயகன்!

H. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியவுள்ள நிலையில், பிரீ பிஸினஸில் சாதனை படைத்துள்ளது.

சிஎஸ்கே அணியில் அதிரடி மாற்றங்கள்! மிடில் ஆர்டரில் களமிறங்கும் 2 இளம் வீரர்கள்!

ஐபிஎல் 2025 சென்னை அணிக்கு அவ்வளவு சிறப்பாக தொடங்கவில்லை.  முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற்றிருந்தாலும் அடுத்த இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. ஆர்சிபி அணிக்கு எதிராக சென்னையில் நடந்த போட்டியிலும்,  ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக குவாத்தில் நடைபெற்ற போட்டியிலும் தோல்வியை சந்தித்தனர். இதற்கு சென்னை அணியின் பேட்டிங்கும் ஒரு முக்கிய காரணம். டாப் ஆர்டர், மிடில் ஆர்டர், பினிசர் என யாருமே சொல்லிக் கொள்ளும் அளவிற்கு அவ்வளவு சிறப்பாக விளையாடவில்லை. … Read more

Vikram: “வாழ்க்கையில் எவ்வளோ பிரச்னை..!" – வருத்தத்துடன் வீடியோ வெளியிட்ட விக்ரம்!

அருண்குமார் இயக்கத்தில் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, பிருத்வி, சூரஜ் வெஞ்சாரமூடு, துஷாரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘வீர தீர சூரன் பாகம் -2’.  பல்வேறு தடைகளுக்குப் பிறகு கடந்த வியாழக்கிழமை (மார்ச் 27) மாலை வெளியாகியிருந்தது இப்படம். ஊர்த் திருவிழாவின்போது சொந்த ஊர் ரௌடி கும்பல் மற்றும் போலீஸ் இடையே மாட்டிக் கொண்டு தன் குடும்பத்தை காப்பாற்றுவதற்காவும், தன்னைச் சுற்றி இருக்கும் பிரச்னைகளை முடிவுக்குக் கொண்டுவரவும் போராடும் விக்ரமின் ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான இது, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் … Read more

சென்னை டூ மும்பை சிஎஸ்டி சூப்பர்ஃபாஸ்ட் உள்பட 3 எக்ஸ்பிரஸ் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்! தெற்கு ரயில்வே அறிவிப்பு…

சென்னை: சென்னை எழும்பூர் – மும்பை சிஎஸ்டி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் உள்பட 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மாற்றுப்பாதையில் செல்லும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. சென்னை எழும்பூர் – மும்பை சிஎஸ்டி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் மாற்றுப்பாதையில் செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தெற்க ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,  ரயில் எண் 22158 சென்னை எழும்பூர் – மும்பை சிஎஸ்எம்டி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 05 அன்று … Read more

மாட்டு சாணத்தை பல கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்யும் இந்தியா

புதுடெல்லி, இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் மாட்டு சாணம் ஏற்றுமதி வேகமாக அதிகரித்துள்ளது. பல நாடுகளுக்கு இந்திய மாட்டு சாணம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நாடுகள் பசுவின் சாணத்தை பல வழிகளில் பயன்படுத்துகின்றன. உலக அளவில் மாட்டு சாணத்தின் தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில், அதிக கால்நடைகள் கொண்ட நாடாக இந்தியா இருக்கும் நிலையில், மற்ற நாடுகளுக்கு மாட்டு சாணத்தை ஏற்றுமதி செய்து வருகிறது. இது குறித்து வணிக ஆலோசகர் சர்தக் அஹுஜா கூறுகையில், “உலகில் பசுவின் சாணத்திற்கான … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து; கடைசி நிமிட கோலால் திரில் வெற்றி பெற்ற ஜாம்ஷெட்பூர்

ஜாம்ஷெட்பூர், 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. இதில் லீக் மற்றும் பிளே-ஆப் சுற்று முடிவில் மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட்ஸ், எப்.சி. கோவா, பெங்களூரு எப்.சி., ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணிகள் அரையிறுதிக்குள் நுழைந்தன. இதில் ஜாம்ஷெட்பூரில் நேற்றிரவு நடந்த 2-வது அரையிறுதியின் முதலாவது ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி. – மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் … Read more

இந்தியா – தாய்லாந்து இடையே புதிய ஒப்பந்தங்கள்: இருநாட்டு பிரதமர்கள் முன்னிலையில் கையெழுத்து

பாங்காக், தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள இந்தியா, இலங்கை, வங்கதேசம், நேபாளம், தாய்லாந்து, மியான்மர் மற்றும் பூடான் ஆகிய 7 நாடுகள் சேர்ந்து பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பு (பிம்ஸ்டெக்) கூட்டமைப்பை உருவாக்கிஉள்ளது.ஆண்டுதோறும் இந்த கூட்டமைப்பில் உள்ள நாடுகள் இணைந்து செயல்படுவது குறித்து மாநாடு நடத்தி ஆலோசனை நடத்தப்படும். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான மாநாடு தாய்லாந்தின் பாங்காக்கில் இன்றும், நாளையும் நடக்கிறது. இந்த மாநாட்டில் கடல்சார் பாதுகாப்பு, … Read more