பாஜக தலைமை, பிரதமர் பதவி… – மக்களவையில் அகிலேஷ் கலாய்ப்பும், அமித் ஷா பதிலடியும்!

புதுடெல்லி: மக்களவையில் நடந்த வக்பு சட்டத் திருத்த மசோதா குறித்த காரசாரமான விவாதத்துக்கு இடையில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் இடையே பாஜக தலைமை குறித்து ஒரு கலாய்ப்புச் சண்டை நடந்தது. மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வக்பு சட்டத் திருத்த மசோதாவை இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதா மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய சமாஜ்வாதி கட்சித் தலைவர், திடீரென விவாதத்தில் இருந்து … Read more

சிஎஸ்கேவின் 'மினி ரிஷப் பண்ட்' – இவரை சேர்த்தால் வெற்றிகளை குவிக்கலாம்!

Chennai Super Kings: ஐபிஎல் 2025 தொடரில் (IPL 2025) ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு அணிகள் விளையாடும்போதும் நிச்சயம் ஒரு இளம் வீரராவது ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தை ஈர்த்துவிடுகிறார்கள் எனலாம். IPL 2025: எக்கச்சக்க இளம் வீரர்கள்…  உதாரணத்திற்கு மும்பையில் அஷ்வனி குமார், விக்னேஷ் புத்தூர்; டெல்லியில் விப்ராஜ் நிகாம்; பஞ்சாப் அணியில் பிரியான்ஷ் ஆர்யா; லக்னோ அணியில் திக்வேஷ் சிங், பிரின்ஸ் யாதவ்; சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அனிகேத் வர்மா என சொல்லிக்கொண்டே போகலாம். IPL … Read more

இயக்குநர் மகேந்திரன் நினைவைப் போற்றும் வகையில் ஃபிலிம் & மீடியா அகாடெமி துவக்கம்!

பொதுமக்களுக்குப் பிடித்த தமிழ் சினிமா இயக்குநர்கள் சிலர் இருப்பர். ஆனால், இயக்குநர்களுக்குப் பிடித்த இயக்குநர் வெகு சிலரே. அப்படியான ஒருவர்தான் இயக்குநர் மகேந்திரன். தமிழ் சினிமாவின் திரைமொழியை மாற்றியவர்களில் குறிப்பிடத்தக்கவர். ஆரம்பத்தில் சிவாஜி கணேசனின் ‘தங்கப்பதக்கம்’ திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதி எழுத்தாளராக திரையுலகில் அறிமுகமாகி, ‘முள்ளும் மலரும்’, ‘உதிரிப்பூக்கள்’, ‘பூட்டாத பூட்டுகள்’, ‘ஜானி’, ‘நெஞ்சத்தை கிள்ளாதே’, ‘நண்டு’, ‘மெட்டி’, மற்றும் ‘அழகிய கண்ணே’ எனப் பல திரைப்படங்கள் மூலம் மனிதர்களை இயக்கியவர். இயக்குநர் மகேந்திரன் இயக்குநர் எனப் பயணித்தவர் … Read more

பல அற்புத அம்சங்களுடன் Thomson அறிமுகம் செய்தது இன்ச் கொண்ட QLED ஸ்மார்ட் டிவி

Thomson இந்தியாவில் ஒரு புதிய ஸ்மார்ட்டிவி அறிமுகம் செய்துள்ளது, இது QLED லினக்ஸ் (கூலிடா 3.0) OS ஸ்மார்ட் டிவிகள் மற்றும் ஏர் கூலர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மிக சிறப்பு என்னவென்றால், Thomson வெளியிட்டுள்ள உலகின் முதல் 24 இன்ச் ஸ்மார்ட் டிவி இதுவாகும். தாம்சனின் புதிய QLED ஸ்மார்ட் டிவிகள் 24-இன்ச், 32-இன்ச் மற்றும் 40-இன்ச் வகைகளில் வருகிறது. மேலும் இந்த மூன்று தொலைக்காட்சிகளும் மிகவும் மெல்லிய பெசல் இல்லாத வடிவமைப்பு டன் வருகின்றன. இந்நிலையில் … Read more

உலகளவில் தங்கத்தின் விலை 38% குறையும் என்று அமெரிக்க பங்குச் சந்தை நிபுணர் ஜான் மில்ஸ் கணிப்பு

உலக அளவில் தங்கத்தின் விலை அதிரடியாக குறையக் கூடும் என பங்குச் சந்தை நிபுணர்கள் கூறியுள்ளனர். ஒரு அவுன்ஸ் தங்கம் $3,080-க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் அது $3,300 ஐ எட்டும் என்றும் இரண்டு ஆண்டுகளில் $3,500 ஆக உயரும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் மில்ஸ் என்ற பங்குச் சந்தை நிபுணரின் கணிப்புப்படி தற்போது உச்சத்தில் இருக்கும் தங்கத்தின் விலை சட்டென்று அதிரடியாக 38% வீழ்ச்சி … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; அரையிறுதியில் கோவா – பெங்களூரு அணிகள் இன்று மோதல்

பெங்களூரு, 13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் லீக் மற்றும் பிளே-ஆப் சுற்று முடிவில் மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட்ஸ், எப்.சி. கோவா, பெங்களூரு எப்.சி., ஜாம்ஷெட்பூர் எப்.சி. ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. ஒவ்வொரு அரையிறுதியும் இரண்டு ஆட்டங்கள் (உள்ளூர், வெளியூர்) கொண்டதாக நடத்தப்படுகிறது. இந்த நிலையில் பெங்களூருவில் இன்று நடைபெறும் அரையிறுதியின் முதலாவது சுற்றில் பெங்களூரு அணி, எப்.சி. கோவாவை எதிர்கொள்கிறது. இந்த தொடரில், ஏற்கனவே லீக் … Read more

பணத்தகராறு… பெற்ற தந்தையை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மகன் – நெல்லையில் பயங்கரம்!

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை அருகில் உள்ள சிவந்திபட்டியைச் சேர்ந்தவர் பூலையா. இவருக்கும், இவருடைய மகன் கணேசனுக்கும் சொத்துத் தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில், பூலையா கடந்த 20 நாட்களுக்கு முன்பு தனக்கு சொந்தமான நிலத்தை ரூ.1 கோடியே 50 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளார். இதில், ரூ.50 லட்சம் பணத்தை பூலையா, தன் மகன் கணேசனுக்கு பங்காகக்  கொடுத்துள்ளார். தந்தை பூலையா- மகன் கணேசன் இந்த நிலையில், கணேசன் அவரது வீட்டின் அருகில் புதிகாக வேறொரு வீடு … Read more

“பாஜகவுக்கு எதிராக மதச்சார்பற்ற சக்திகளை அணி திரட்ட வேண்டும்!” – மதுரை மார்க்சிஸ்ட் மாநாட்டில் பிரகாஷ் காரத் முழக்கம்

மதுரை: “பாஜவுக்கு எதிராக அனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் அணி திரட்ட வேண்டும்” என மதுரை அகில இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் அக்கட்சியின் அரசியல் பணியக ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் முழங்கினார். மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 5 நாள் அகில இந்திய 24-வது மாநாடு தமுக்கம் மைதானத்தில் இன்று (ஏப்.2) காலை தொடங்கியது. மாநாட்டில் அரசியல் பணியக ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் பேசியது: “பழந்தமிழ் இலக்கியம், கலாச்சாரத்தின் பண்பாட்டின் செழுமையும், தொழிலாளி வர்க்கம், கம்யூனிஸ்ட் … Read more

‘வக்பு நிலங்களில் மருத்துவமனை, பள்ளிகள் கட்ட வேண்டும்’ – பிரதமருக்கு மதுரா துறவி கடிதம்

புதுடெல்லி: வக்பு நிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் கட்டப்பட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவைச் சேர்ந்த இந்து மதத் துறவி தினேஷ் ஃபலாஹரி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். தனது ரத்தத்தால் அந்தக் கடிதத்தை அவர் எழுதியிருக்கிறார். மதுராவின்ஸ்ரீ கிருஷ்ணஜென்மபூமி கோயிலை ஒட்டியுள்ள கியான்வாபி மசூதியை அகற்றுவதற்கான போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர் துறவி தினேஷ் ஃபலாஹரி. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு செய்த ஒரு சபதத்தின்படி, இவர் காலணி அணிவதில்லை. மதுராவைச் சேர்ந்த துறவியான … Read more