தஞ்சை அரசு மருத்துவமனை தீ விபத்து: ”உயிரைப் பணயம் வச்சு காப்பாத்தினோம்; ஆனா..”- கொதிக்கும் ஊழியர்கள்

தஞ்சாவூர் இராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் கடந்த 24-ம் தேதி மகப்பேறு சிகிச்சைப் பிரிவு வார்டில் ஏசி இயந்திரத்தில் ஏற்பட்ட மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் வார்டு முழுவதும் புகை சூழ்ந்தது. வார்டில் குழந்தை பெற்ற பெண்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மருத்துவமனை வளாகத்தில் காத்திருந்த, சிகிச்சையிலிருந்தவர்களின் உறவினர்கள் அச்சமடைந்தனர். சிகிச்சையில் இருக்கும் அரசு மருத்துவமனை ஊழியர்கள் இந்த நிலையில், மருத்துவமனையில் பணியிலிருந்த தற்காலிகப் பணியாளர்களான தூய்மைப் பணியாளர்கள், … Read more

“நேற்று வரை இலையாக இருந்தவர்கள் இன்று களையாக எப்படி மாறினார்கள்?” – சீமானுக்கு எதிராக சீறும் காளியம்மாள் நேர்காணல்

நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறையின் ஒருங்கிணைப்பாளர் பி.காளியம்மாள் கடந்த பிப்ரவரியில் அந்தக் கட்சியிலிருந்து விலகினார். அப்போது, “தமிழ்த் தேசியத்தை விதைக்கும் வகையில் எம் பயணம் தொடரும்” என அறிவித்திருந்தவர், இதுவரை எந்தக் கட்சியிலும் இணையாமல் இருக்கிறார். இந்த நிலையில், நாதக-வில் தனக்கு என்ன நடந்தது… விலகலுக்கான காரணம்… எதிர்கால திட்டம் உள்ளிட்டவை குறித்து ‘இந்து தமிழ் திசை’யிடம் மனம்திறந்து பேசினார் காளியம்மாள். மீனவக் குடும்பத்தில் பிறந்து ஒரு சமூக செயல்பாட்டாளராக வளர்ந்த உங்களுக்கு நாதக அறிமுகம் … Read more

பஹல்​காம் தாக்​குதலை தொடர்ந்து கிஷ்த்வாரில் ராணுவ உடைகளை விற்க, இருப்பு வைக்க தடை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து கிஷ்த்வாரில் ராணுவ உடைகளை விற்பதற்கும், இருப்பு வைப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கிஷ்த்வார் துணை ஆணையர் ராஜேஷ் குமார் ஷவான் வெளியிட்ட உத்தரவில், “ பாதுகாப்பு மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க நாசகார சக்திகள் முயன்று வருகின்றன. இந்த ஆபத்திலிருந்து தற்காத்துக்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்துள்ளார். அதன் ஒரு பகுதியாக கிஷ்த்வாரில் ராணுவ உடைகளை தைப்பதற்கும், விற்பதற்கும், இருப்பு வைப்பதற்கும் தடைவிதித்துள்ளது. … Read more

டிவியில் வருவதற்கு என்ன வேணாலும் பேசலாமா? திருமாவை கண்டித்த நயினார்!

தொலைக்காட்சியில் வர வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசக்கூடாது என்று திருமாவளவனை சுட்டி காமித்து நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்துள்ளார்.

போருக்கு ஆயத்தம் : அரபிக் கடலில் இந்திய ஏவுகணை சோதனை

டெல்லி பாகிஸ்தானுடன் போர் புரிய ஆயத்தமாக அரபிக்கடலில் இந்திய போர் கப்பல்களில் இருந்து ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது/ காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப்பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக மத்திய அரசு குற்றம்சாட்டி பாகிஸ்தானுக்கு எதிராக பல அதிரடி நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. பாகிஸ்தான் உடனான சிந்துநதி நீர் ஒப்பந்தம் ரத்து, நாட்டில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவு, அட்டாரி-வாகா எல்லை மூடல் உள்ளிட்ட … Read more

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆக்கி: இந்திய பெண்கள் அணி மீண்டும் தோல்வி

பெர்த், இந்திய பெண்கள் ஆக்கி அணி 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாட ஆஸ்திரேலியா சென்றுள்ளது.இதில் முதல் 2 ஆட்டங்களில் ஆஸ்திரேலிய ‘ஏ’ அணியுடனும், அடுத்த மூன்று ஆட்டங்களில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய சீனியர் அணியுடனும் மோதுகிறது. இந்திய பெண்கள் ஆக்கி அணி, ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் 3-5 என்ற கணக்கில் தோற்றிருந்தது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஆட்டம் நேற்று நடைபெற்றது. விறுவிறுப்பான இந்த … Read more

TVK: "சமரசத்திற்கு இடமில்லை.. எந்த எல்லைக்கும் செல்வோம்" – தவெக தலைவர் விஜய் பேசியது என்ன?

த.வெ.க மேற்கு மண்டல பூத் கமிட்டி முகவர்கள் கருத்தரங்கம் இரண்டாவது நாளாக நேற்றும் கோவை தனியார் கல்லூரியில் நடைபெற்றது. நேற்றைய தினம் கோவை, திருப்பூர், நீலகிரி, கரூர் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஹோட்டலில் இருந்து விஜய் கேரவன் மூலம் ரோட் ஷோவாக நிகழ்ச்சி அரங்கத்துக்கு வந்தார். விஜய் கூட்டத்தில் பேசிய அக்கட்சி பொதுச்செயலாளர் என். ஆனந்த், “கோவையே சும்மா அதிருதுல. இங்கு வந்துள்ள 8,500 பேர் 8.50 லட்சம் வாக்குக்குச் சமம். இங்கேயே நமக்கு 50 … Read more

இந்திய ராணுவ முன்னாள் துணை தளபதி உடலுக்கு 42 குண்டுகள் முழங்க வீரர்கள் அஞ்சலி

குன்னூர்: இந்திய ராணுவ முன்னாள் துணைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் எஸ். பட்டாபிராமன்(78) குன்னூரில் காலமானார். இவருக்கு 42 குண்டுகள் முழங்க, ராணுவ அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த லெப்டினன்ட் ஜெனரல் பட்டாபிராமன், ராணுவத்தில் பல முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். பாம்பே சாப்பர்ஸின் கர்னல் கமாண்டராகப் பணியாற்றியுள்ள இவர், இந்திய ராணுவத்தின் தகவல் அமைப்புகளின் முதல் இயக்குநராகவும், மேற்கு கட்டளையின் ராணுவ தளபதியாகவும் சிறப்பாக பணியாற்றியுள்ளார். 40 ஆண்டு … Read more

பாகிஸ்தானுக்கு ஒரு சொட்டு தண்ணீர் விடுவிக்கப்பட மாட்டாது: ஜல் சக்தி துறை அமைச்சர் தகவல்

பாகிஸ்தானுக்கு ஒரு சொட்டு நீர் கூட விடுவிக்கப்படமாட்டாது என மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதையடுத்து, பாகிஸ்தானுடனான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது உட்பட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. இந்நிலையில், மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். … Read more

விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இடையே மோதல்? வைரலாகும் வீடியோ!

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டெல்லி கேப்பிடல்ஸ் மட்டும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் நடைபெற்றது. இந்த போட்டியின் போது இந்திய அணியின் முன்னணி வீரர்களான விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது தற்போது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இரண்டாவது இன்னிங்சின் போது விராட் கோலி பேட்டிங் செய்ய, கேஎல் ராகுல் விக்கெட் … Read more