ஏமன் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல்… 2 பேர் பலி பலர் காயம்…

ஏமனில் இன்று அதிகாலை அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 10 பேர் படுகாயமடைந்தனர். இஸ்ரேல் , ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்குமேல் நடைபெற்று வருகிறது. இந்த போரில் 51 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர் ஆதரவு அளித்து வருகின்றனர். ஹமாசுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அரபிக்கடல், செங்கடலில் செல்லும் … Read more

லாரி மோதி சிங்கம் உயிரிழப்பு – டிரைவர் கைது

காந்திநகர், குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள தேவலியா கிராம அருகே அம்ரேலி-சவர்குண்ட்லா நெடுஞ்சாலையில் கடந்த 24-ந்தேதி அதிகாலை அதிவேகமாக வந்த லாரி மோதி பெண் சிங்கம் ஒன்று உயிரிழந்தது. லாரியை ஓட்டிய டிரைவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச்சென்ற நிலையில், போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து சம்பந்தப்பட்ட நபரை தீவிரமாக தேடி வந்தனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரியை கண்டறிந்த போலீசார், அதன் டிரைவரான ராஜேஷ் பதாரியாவை … Read more

ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூரு அணிக்கு 163 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது டெல்லி

புதுடெல்லி, ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அபிஷேக் போரல், பாப் டு பிளஸ்சிஸ் இருவரும் சிறப்பாக விளையாடி அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்துக் … Read more

ஈரான் துறைமுக வெடி விபத்து – மேலும் உயர்ந்த பலி எண்ணிக்கை

தெஹ்ரான், ஈரான் நாட்டின் பாந்தர் அப்பாஸ் நகரில் துறைமுகம் உள்ளது. இது ஈரானின் மிகப்பெரிய வர்த்தக துறைமுகம் ஆகும். இந்த துறைமுகத்தில் நேற்று மிகப்பெரிய வெடி விபத்து ஏற்பட்டது. துறைமுகத்தில் கண்டெய்னர்கள் நிறுத்தி வைத்திருந்த பகுதியில் இந்த வெடி விபத்து ஏற்பட்டது. எரிபொருள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர்களை சரிவர கையாளாததால் இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்ததாக முதற்கட்டமாக தகவல் வெளியான நிலையில் பலி எண்ணிக்கை தற்போது உயர்ந்துள்ளது. … Read more

MI vs LSG: மீண்டும் ஏமாற்றிய பண்ட்; ஹர்திக் செய்த 2 மேஜிக் மூவ்; மும்பை வென்றது எப்படி?

வான்கடே மைதானத்தில் மும்பை அணியும், லக்னோ அணியும் இன்று (ஏப்ரல் 27) மோதின. தொடர்ச்சியாக 5-வது வெற்றியைப் பதிவுசெய்யும் நோக்கில் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா களமிறங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சைத் தேர்வுசெய்தார். ஹர்திக் – பண்ட் மும்பைக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மயங்க்… லக்னோவை அசரடித்த ரிக்கிள்டன்! காயத்துக்குப் பிறகு பாதி சீசனில் லக்னோவில் இணைந்த இளம் வேகம் மயங்க் யாதவ் முதல் ஓவரிலேயே தன்னுடைய பொட்டன்ஷியலை வெளிப்படுத்தி முதல் … Read more

தமிழகத்தில் மே 2 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்றுமுதல் மே 2-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னிந்திய பகுதிகளின்மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று (ஏப்.27) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏப்.29 முதல் மே 2-ம் … Read more

பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகளுக்கு மிக கடுமையான தண்டனை: ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் உறுதி

காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல் தொடர்புடையவர்கள், சதித் திட்டம் தீட்டியவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே பிரதமர் உரையாற்றி வருகிறார். இதன்படி 121-வது மனதின் குரல் நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது: கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலால் நாட்டு மக்கள் அனைவரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். பாதிக்கப்பட்ட … Read more

DC vs RCB: சம்பவம் செய்த குர்னால் பாண்டியா.. ஆர்சிபி அபார வெற்றி!

நடப்பாண்டு ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று (ஏப்ரல் 27) டெல்லியில் தொடரின் 46வது லீக் ஆட்டம் நடைபெற்றது. இதில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின. போட்டிக்கான டாஸ் இரவு 7 மணிக்கு வீசப்பட்டது. டாஸை வென்ற பெங்களூரு அணி கேப்டன் படிதார் பந்து வீச்சை தேர்வு செய்தார்.  அதன்படி டெல்லி கேபிடல்ஸ் … Read more

விசா காலம் முடிந்தும் 46 ஆயிரம் வெளிநாட்டினர் உள்ளனர்… பாகிஸ்தானியர்களுக்கு விதிக்கப்பட்ட கெடு இன்றுடன் முடிவு…

விசாகாலம் முடிந்த பின்னரும் பாகிஸ்தானியர்கள், வங்கதேசத்தினர், மியான்மர் நாட்டினர் ஆப்பிரிக்கர்கள் என 46 ஆயிரம் வெளி நாட்டினர் உள்ளனர் என்றும் அதில் பலர் தமிழ்நாட்டில் தங்கியுள்ளனர் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம். தண்டபாணி கூறியுள்ளார். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க எத்தகைய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது தொடர்பாக கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியபோது அவர் இவ்வாறு கூறினார். காஷ்மீரிலுள்ள பஹல்காமில் இம்மாதம் 22-ஆம் தேதி பிற்பகல் எல்லை தாண்டி வந்த பயங்கரவாதிகள் … Read more

கட்டுப்பாட்டை இழந்து கிணற்றுக்குள் விழுந்த வேன் – 10 பேர் பலியான சோகம்

போபால், மத்திய பிரதேசம் மாநிலம் மாண்ட்சவுர் மாவட்டம், நாராயண்கர் போலீஸ் நிலையம் எல்லைக்குட்பட்ட கிராமத்தில் இன்று 14 பேருடன் சென்று கொண்டிருந்த வேன் ஒன்று, பைக் ஒன்று குறுக்கே வந்ததால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள திறந்த வெளி கிணற்றில் விழுந்தது. தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் உள்ளிட்டோர் மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இந்த விபத்தில் சிக்கி 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சம்பவம் குறித்து மண்ட்சவுர் … Read more