ஏமனில் அமெரிக்கா வான்வழி தாக்குதல்; 2 பேர் பலி

சனா, இஸ்ரேல் , ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்குமேல் நடைபெற்று வருகிறது. இந்த போரில் 51 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர் ஆதரவு அளித்து வருகின்றனர். ஹமாசுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அரபிக்கடல், செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும், இஸ்ரேல் மீதும் அவ்வப்போது ஏவுகணை, … Read more

MI vs LSG: “பூரான், பண்ட் விக்கெட் எவ்வளவு முக்கியம் என்று தெரியும்'' – ஆட்ட நாயகன் வில் ஜேக்ஸ்

ஐபிஎல்லில் இன்று (ஏப்ரல் 27) வான்கடேவில் நடைபெற்ற மும்பை vs லக்னோ போட்டியில் அணி வெற்றிபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் குவித்தது. அதையடுத்து களமிறங்கிய லக்னோ அணி, ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையுமிழந்து தோல்வியடைந்தது. வில் ஜேக்ஸ் இப்போட்டியில் முக்கியமான நேரத்தில் நிக்கோலஸ் பூரான், பண்ட் விக்கெட் வீழ்த்திய வில் ஜேக்ஸ் ஆட்ட நாயகன் விருது வென்றார். அதைத்தொடர்ந்து பேசிய வில் ஜேக்ஸ், … Read more

''நமது ஆட்சி சிறுவாணி தண்ணீரை போல சுத்தமானதாக இருக்கும்; ஊழல் இருக்காது'' – கோவையில் விஜய் பேச்சு

கோவை: தவெக-வின் ஆட்சி சிறுவாணி தண்ணீரை போல் சுத்தமான ஆட்சியாக அமையும் என, அக்கட்சித் தலைவர் விஜய் பேசினார். தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி முகவர்களுக்கான இரண்டாம் நாள் பயிற்சி பட்டறை நிகழ்வு கோவை எஸ்.என்.எஸ் கல்லூரி வளாகத்தில் இன்று (ஏப்.27) நடந்தது. அதில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பேசியதாவது: பயிற்சி பட்டறை முதல் நாள் நிகழ்வில் நான் பேசும்போது இந்த நிகழ்வு ஓட்டுக்காக மட்டும் நடத்தப்படுவது அல்ல என்று கூறினேன். … Read more

'10 ஆண்டுகளில் 300க்கும் மேற்பட்ட விண்வெளி ஸ்டார்ட் அப்புகள்!' – மனதின் குரலில் பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: இந்தியா தனது விண்வெளித் துறையை தனியார் துறைக்கும் திறந்து விட்டதை அடுத்து, கடந்த 10 ஆண்டுகளில் 300கும் மேற்பட்ட விண்வெளி ஸ்டார்ட் அப்புகள் செயலாற்றி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி மூலம் இது தொடர்பாக பேசிய அவர், “இரண்டு நாட்கள் முன்பாக மகத்தான அறிவியலாளரான டாக்டர். கே. கஸ்தூரிரங்கன் அவர்களை நாம் இழந்துவிட்டோம். கஸ்தூரிரங்கன் அவர்களை சந்தித்த போதெல்லாம், நாங்கள் பாரத நாட்டு இளைஞர்களின் திறன்கள், நவீன கல்வி, … Read more

மீண்டும் அமைச்சராகிறார் மனோ தங்கராஜ்….

சென்னை:  முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜுக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது. நாளை மாலை மனோதங்கராஜ் மீண்டும் அமைச்சராகிறார். பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் பொன்முடிக்கு மக்களிடையே கடுமையான எதிர்ப்பு எழுந்த நிலையில்,   அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு உள்ளது. அதுபோல,  சட்டவிரோத பணி மாற்ற வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய ஜாமின் காரணமாக மீண்டும் அமைச்சராக செந்தில் பாலாஜி,  தனது அமைச்சர் பதவியை ரத்து செய்ய வேண்டும்  இல்லையேல் ஜாமின் ரத்து செய்யப்படும் என … Read more

`மகனுக்கு, BJP தந்த பிரஷர்! கூட்டணிக்கு EPS ஓகே' – Ramasubramanian Interview | Amitshah, Modi | DMK

‘டாக்டர் ராமசுப்பிரமணியன்’ மிக முக்கியமான அரசியல் விமர்சகர். அ.தி.மு.க ஏன் பா.ஜ.க-வுடன் கூட்டணிக்கு ஒப்புக்கொண்டது, எந்த இடத்தில் எடப்பாடி சிக்கிக்கொண்டார், எதை வைத்து அமித்ஷா கூட்டணி எனும் வலைக்கு கொண்டு வந்தார் என விரிவாகவே தனது பார்வைகளை முன் வைக்கிறார். அ.தி.மு.க-வுடன், விஜய் கூட்டணி சேராதது, அவருக்கு மிகப்பெரிய மைனஸ். தி.மு.க அரசு மீது இருக்கக்கூடிய விமர்சனங்கள், அதே நேரத்தில் பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் உள்ள சிக்கல்கள் என ஒப்பீடு செய்தும், தமது பார்வைகளை முன் வைத்துள்ளார் … Read more

அமைச்சர்கள் பொன்முடி, செந்தில் பாலாஜி ராஜினாமா – மீண்டும் அமைச்சராகிறார் மனோ தங்கராஜ்

சென்னை: அமைச்சர்கள் பொன்முடி, செந்தில்பாலாஜி ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மனோ தங்கராஜ் நாளை (ஏப். 28) மீண்டும் அமைச்சராகிறார். அமைச்சரவை மாற்றம் குறித்து ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மின்சாரம், மதுவிலக்கு மற்றும் கலால் துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி மற்றும் வனத்துறை அமைச்சர் கே. பொன்முடி ஆகியோரின் ராஜினாமாவை ஏற்குமாறு முதல்வர், ஆளுநருக்கு பரிந்துரைத்தார். ஆளுநர் இந்தப் பரிந்துரையை அங்கீகரித்துள்ளார். அதோடு, அமைச்சர்களின் இலாகா மாற்றம் மற்றும் … Read more

“பிரதமர் மோடி இல்லையென்றால் வேறு யார்?” – இளையராஜா புகழாரம்!

புதுடெல்லி: “ஒருவேளை நமக்கு பிரதமர் மோடி தேவை இல்லையென்றால், அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வேறு ஒரு தலைவரின் பெயரை சொல்லுங்கள்” என்று இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார். யூடியூப் சேனல் ஒன்றுக்கு இளையராஜா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: “இதுவரை இந்தியாவை ஆட்சி செய்த அனைத்து பிரதமர்களின் பெயர்களையும் எழுதுங்கள். மவுன்ட்பேட்டன் ஆட்சிகாலத்தில் இருந்து அவர்கள் அனைவரும் தங்களுடைய ஆட்சிகாலத்தில் இந்தியாவுக்காக என்ன செய்தார்கள் என்று பாருங்கள். இன்னொரு பக்கம் பிரதமர் மோடிக்காக ஒரு பட்டியலையும் தயார் … Read more

130 அணுஆயுதங்களை வைத்துள்ளோம்.. இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் அமைச்சர்!

இந்தியாவை நோக்கி மட்டும் 130 அணு ஆயுதங்களை வைத்துள்ளோம் என பாகிஸ்தான் அமைச்சர் மிரட்டல் விடுத்துள்ளார். 

பொன்முடி, செந்தில் பாலாஜி விடுவிப்பு.. வெளியான புதிய அமைச்சர்களின் லிஸ்ட்!

புதிய அமைச்சர்கள் பதவியேற்கும் விழா நாளை (ஏப்ரல் 28) மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ளது.