குடும்ப கட்சியானது தேமுதிக: விஜயபிரபாகர் இளைஞர் அணி செயலாளராக நியமனம்…

சென்னை: தேமுதிக இளைஞர் அணி செயலாளராக விஜயபிரபாகர் நியமனம் செய்யப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவித்துள்ளார்.  இதன்மூலம் திமுக, பாமக, மதிமுக வரிசையும் தேமுதிகவும் குடும்ப கட்சியாக மாறி உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு அரசியல் கட்சிகளும், கட்சியை தொடங்கும்போது, தனது குடும்ப உறுப்பினர்கள் கட்சியில் சேர மாட்டார்கள் என கூறி கட்சியை தொடங்கி மக்களின் ஆதரவை பெறுகின்றனர். பின்னர், தங்களது பொண்டாட்டி, பிள்ளை, உறவினர்களை கட்சிக்குள் கொண்டு வந்து முக்கிய  பதவிகளில் உட்கார வைத்து, கட்சியை … Read more

முஸ்லிம் நீதிமன்றங்களுக்கு சட்ட அங்கீகாரம் இல்லை: ஜீவனாம்ச வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: காஜி , காஜியத் மற்றும் ஷரியா போன்ற முஸ்லிம் நீதிமன்றங்களுக்கு சட்ட அங்கீகாரம் இல்லை எனவும், அவை பிறப்பிக்கும் உத்தரவுகள் யாரையும் கட்டுப்படுத்தாது’’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முஸ்லிம் பெண் ஒருவர் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். கணவர் மோட்டார் சைக்கிள் மற்றும் ரூ.50,000 வரதட்சனை கேட்டு தொந்தரவு செய்துள்ளார். எதுவும் கிடைக்காததால் காஜியாத் நீதிமன்றம் மூலம் தலாக் பெற்றுள்ளார். அதன்பின் விவகாரத்து பெற்ற பெண், ஜீவனாம்சம் கோரி குடும்ப நல நீதிமன்றத்தை நாடியுள்ளார். இருவருக்கும் … Read more

ஆந்திராவில் கோயில் சுவர் இடிந்து விழுந்து 7 பேர் உயிரிழப்பு, பலர் காயம்

விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிரதேசம் – விசாகப்பட்டினத்தின் சிம்மாசலம் கோயிலில் புதிதாக கட்டப்பட்ட சுவர் இடிந்து விழுந்ததில் 7 பக்தர்கள் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ளது சிம்மாசலம் கோயில். இங்கு சந்தனோத்சவம் திருவிழாவையொட்டி புதன்கிழமை அதிகாலையில் இருந்தே தரிசனதுக்காக பக்தர்கள் குவிந்திருந்தனர். அப்போது, ரூ.300 கட்டண வரிசையில் பக்தர்கள் நின்றிருந்தபோது, அருகில் இருந்த சுவர் திடீரென இடிந்து விழுந்தது. புதிதாக கட்டப்பட்டு 20 நாட்களே ஆன அந்த 20 அடி சுவர் இடிந்து விழுந்ததில், … Read more

'முப்படைகளுக்கு முழு சுதந்திரம்' பிரதமர் மோடி – பயங்கரவாதிகளுக்கு பதிலடி உறுதி!

Pahalgam News: பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுப்பதில் முப்படைகளுக்கு முழு சுதந்திரம் அளிப்பதாக பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் பயங்கரம்: பிரபல ஓட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 14 பேர் பலி

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலதலைநகர் கொல்கத்தாவில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் நள்ளிரவு பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில், தமிழ்நாட்டைச்  சேர்ந்த தொழிலதிபர் குடும்பத்தினர்  3 பேர் பலியாகி உள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கொல்கத்தா, புர்ராபஜார் மெச்சுவா பழச்சந்தை பகுதியில்  அமைந்துள்ள பிரபல  ஓட்டலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதை அறிந்த ஊழியர் ஒருவர் தப்பிக்க எண்ணி, மேலிருந்து குதித்து இறந்தார். தீ விபத்து அறிந்த தீயணைப்புத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கொளுந்துவிட்டு எரிந்த … Read more

ஐ.பி.எல்.: கொல்கத்தா அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

புதுடெல்லி, ஐ.பி.எல். தொடரில் புதுடெல்லியில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீசுவது என முடிவு செய்தது. தொடர்ந்து கொல்கத்தாவின் தொடக்க வீரர்களாக சுனில் நரைன் மற்றும் குர்பாஸ் ஆகியோர் களம் இறங்கினர். இதில் குர்பாஸ் 26 ரன்னிலும், சுனில் நரைன் 27 ரன்னிலும், அடுத்து வந்த ரஹானே 26 ரன்னிலும், வெங்கடேஷ் ஐயர் 7 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் … Read more

`மாம்பழம்' பழங்களின் அரசனாக இருப்பது ஏன்? மா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

மாம்பழத்தை பழங்களின் அரசன் என வழங்கப்படுவதற்கு முக்கிய காரணங்கள் உள்ளன. அதன் சுவை உலகம் முழுவதும் மக்களை ஈர்ப்பது மட்டும் அதற்கு காரணம் அல்ல. பல்லாயிரம் ஆண்டுகள் பரிணாம வளர்ச்சியால் தன்னை சிறந்த பழமாக மா நிலைநிறுத்திக்கொண்டுள்ளது என்றுதான் கூற வேண்டும். மரத்தில் காயாக இருக்கும்போது பச்சை நிறத்தில் அடையாளம் தெரியாமல் மறைந்துகொண்டிருக்கும். உண்பதற்கு சுவையாக இல்லாமல் துவர்ப்பாக இருக்கும். இதனால் பறவைகளும், விலங்குகளும் அதனை கண்டு கொள்ளாது. இந்த நேரத்தில் உள்ளுக்குள் இருக்கும் விதை நன்றாக … Read more

உலக நடன தினத்தை முன்னிட்டு ராமேசுவரம் அருகே கடலுக்கு அடியில் நடனம்

உலக நடன தினத்தை முன்னிட்டு ராமேசுவரத்தில் கடலுக்கு அடியில் கடல் மாசுபாடு, கடல்வாழ் உயிரினப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தம் வகையில் சிறுவர், சிறுமி நடனமாடினர். ஆண்டுதோறும் ஏப். 29-ம் தேதி உலக நடன தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு சென்னை ஓஎம்ஆர் காரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர் அரவிந்த்தின் மகள் தாரகை ஆராதனா(11), மாணவர் அஸ்வின் பாலா (14) ஆகியோர் நீருக்கடியில் நடனம் ஆடினர். இதுகுறித்து தாரகை ஆராதனா, அஸ்வின் பாலா … Read more

பஹல்காம் தீவிரவாத தாக்குதல் விவகாரம்: மத்திய அமைச்சரவை இன்று கூடுகிறது

புதுடெல்லி: பஹல்காம் தீவிரவாத தாக்குதல் விவகாரம் குறித்து ஆலோசிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை இன்று கூடுகிறது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதுதொடர்பாக கடந்த 23-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அப்போது, சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு, பாகிஸ்தானியருக்கான … Read more