BSNL வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் அறிவிப்பு.. மலிவான விலையில் ரீசார்ஜ் திட்டங்கள்

BSNL Recharge Plans Offers: இந்திய அரசாங்கத்தின் தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கு பல வித மலிவான ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. பிஎஸ்என்எல் இன் திட்டங்கள் மிக மலிவான விலையில் கிடைத்தாலும், இவற்றில் பல நல்ல அம்சங்களும் வசதிகளும் உள்ளன. இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் பல தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இருந்தாலும், பிஎஸ்என்எல் மீது பயனர்களுக்கு அதிகப்படியான நம்பிக்கை உள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனம் ஏர்டெல், ஜியோ மற்றும் விஐ போன்ற தனியார் நிறுவனங்களுக்கு ஈடாக பல ரீசார்ஜ் திட்டங்களை அடுத்தடுத்து அளித்து வருகின்றது. பிஎஸ்என்எல் சாமானியர்களுக்கு ஏற்ற பல மலிவு விலை திட்டங்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக, இந்தியாவின் கிராமப்புறங்களில் இந்த திட்டங்களுக்கு அதிக வரவேற்பு இருக்கின்றது. மிகக்குறைந்த விலையில், பல வித நன்மைகளை அளிக்கும் பிஎஸ்என்எல் ரீசார்ஜ் திட்டம் பற்றி இந்த பதிவில் காணலாம்.

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறப்பு பரிசை வழங்கியுள்ளது. அன்னையர் தினத்தை முன்னிட்டு, பிஎஸ்என்எல் ஒரு சிறப்பு சலுகையைத் அறிவித்துள்ளது, இதன் கீழ் மக்கள் மலிவான விலையில் ரீசார்ஜ் திட்டத்தை பெறலாம். நீங்களும் BSNL பயனராக இருந்தால், இந்த மலிவான திட்டத்தை பற்றி முழு தகவலை இங்கே பெறுங்கள்.

இந்த மலிவு விலை ரீசார்ஜ் திட்டம் எப்போது வரை கிடைக்கும்?
பிஎஸ்என்எல் 3 நீண்ட கால ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் விலைகளில் தற்போது தள்ளுபடியை அறிவித்துள்ளது. இந்த சலுகையின் பலனை நீங்கள் மே 11, ஞாயிற்றுக்கிழமை முதல் அதாவது இன்று முதல் பெறலாம். மேலும் வரும் புதன்கிழமை, அதாவது மே 14 வரை இன்த சிறப்பு சலுகையின் பலனைப் பெறலாம்.

எந்த 3 ரீசார்ஜ் திட்டங்களில் தள்ளுபடி உள்ளது?
ரூ.599 ரீசார்ஜ் திட்டம் ரூ.569 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
ரூ.997 ரீசார்ஜ் திட்டம் ரூ.947 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
ரூ.2399 திட்டம் ரூ.2279 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று ரீசார்ஜ் திட்டங்களின் விலையிலும் 5 சதவீத வரை குறைக்கப்பட்டுள்ளது. இந்தச் சலுகையின் விவரத்தை BSNL அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது. மூன்று ரீசார்ஜ் திட்டங்களும் வெவ்வேறு விலைகளில் வெவ்வேறு செல்லுபடியாகும் காலம் மற்றும் அம்சங்களுடன் வருகிறது.

BSNL ரூ.569 திட்டம்:
சலுகைகளின் கீழ், நீங்கள் இதை ரூ.599க்கு பதிலாக ரூ.569க்கு பெறலாம். இந்த திட்டத்தின் வேலிடிட்டி காலம் 84 நாட்கள் ஆகும். இது அன்லிமிடெட் அழைப்பு, 100 எஸ்எம்எஸ் மற்றும் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மற்றொரு அம்சம் என்னவென்றால், இந்த திட்டத்துடன் BiTV-க்கான இலவச அணுகலும் பெறலாம். 

BSNL ரூ.947 திட்டம்:
BSNL-ன் ரூ.997 ரீசார்ஜ் திட்டம் ரூ.947-க்கு பெறலாம். இதில் அன்லிமிடெட் அழைப்பு, தினசரி 100 SMS மற்றும் ஒரு நாளைக்கு 2GB டேட்டாவை பெறலாம். இந்த திட்டத்தின் வேலிடிட்டி காலம் 160 நாட்கள் ஆகும். இதனுடன், BiTV சந்தாவை முற்றிலும் இலவசமாக பெறலாம்.

BSNL ரூ.2279 ரீசார்ஜ் திட்டம்:
ரூ.2399 திட்டத்தை ரூ.2279க்கு பெறலாம். இந்த திட்டம் 395 நாட்கள் வேலிடிட்டி ஆகும். இது அன்லிமிடெட் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஒவ்வொரு நாளும் 2 ஜிபி அதிவேக டேட்டாவின் நன்மையை பெறலாம். மேலும் ஸ்மார்ட்போனில் 350+ நேரடி தொலைக்காட்சி சேனல்களைப் பார்க்க BiTV சந்தா முற்றிலும் இலவசம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.