சென்னை தமிழக அமைச்சர் பெரிய கருப்பன் தங்க நகை கடன் விதிகள் கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது எனத் தெரிவித்துள்ளார். இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் செய்தியாளர்களிடம் இதுவரை தமிழகசட்டப்பேரவையில் கூட்டுறவுத்துறை சார்பில் 49 அறிவிப்புகள் வெளியிட்டுள்ளது, இன்று, அவற்றின் நிலைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மத்திய அரசின் ரிசர்வ் வங்கியின் நகைக்கடன் கட்டுப்பாடுகள் கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை பொறுத்தவரை, ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள் பொருந்தாது. ஏனெனில் […]
