காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவு

புதுடெல்லி, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 40வது கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக மற்றும் கர்நாடக மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளில் நீர் இருப்பு, சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு கர்நாடகா காவிரியில் இருந்து தரவேண்டிய நீர் விவகாரம், நீர்த் திறப்பு தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பின்படி காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு ஜூன் மாதம் திறந்துவிட வேண்டிய 9.19 டி.எம்.சி தண்ணீரையும், ஜூலை மாதத்திற்கு … Read more

பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய மும்பை: கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியது என்ன..?

மும்பை, ஐ.பி.எல். தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 63-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 180 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 73 ரன்கள் அடித்தார். டெல்லி தரப்பில் முகேஷ்குமார் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பின்னர் 181 ரன் அடித்தால் வெற்றி … Read more

'வெறுப்புக்கும், பயங்கரவாதத்திற்கும் அமெரிக்காவில் இடமில்லை' – டிரம்ப் ஆவேசம்

வாஷிங்டன், அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ள இஸ்ரேல் தூதரகத்தில், யூத அருங்காட்சியகத்திற்கு அருகே நடந்த தாக்குதலில் இஸ்ரேல் தூதரகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாலஸ்தீன ஆதரவு நபர் இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்படும் நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;- “யூத எதிர்ப்பு பயங்கரவாதம் உடனடியாக முடிவுக்கு வர வேண்டும். வெறுப்புக்கும், பயங்கரவாதத்திற்கும் அமெரிக்காவில் இடமில்லை. … Read more

நாடு முழுவதும் 500 ஹைலெண்ட் விற்பனை நிலையங்கள் இன்று (22) முதல் ஆரம்பம்

மில்கோ (தனியார்) வரையறுக்கப்பட்ட நிறுவனமாக ஹைலெண்ட் உற்பத்திகளை வாடிக்கையாளர்களிடம் பிரபலப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் 500 ஹைலெண்ட் விற்பனை நிலையங்களை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று (22) கமனல கேந்திர நிலைய கேட்போர் கூடத்தில் விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்ச கே.டி லால் காந்த தலைமையில் நடைபெற்றது . 

Jobs: உலகில் மகிழ்ச்சியான, மகிழ்ச்சியற்ற வேலைகள் எது… எது? – ஆராய்ச்சி முடிவுகள் கூறுவதென்ன?

பிறப்புக்கும், இறப்புக்கும் மத்தியிலான நீண்ட காலம்தான் ஒருவரை யார் என்று தீர்மானிக்கிறது. அந்த இடைப்பட்ட காலத்தில் வெறுமனே இருத்தலுக்கும், வாழ்தலுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. அதை, நாம் என்ன வேலை செய்கிறோம் என்பதுதான் முடிவுசெய்கிறது. ஒவ்வொருவருக்கும், நான் மக்களுக்காக சேவை செய்ய வேண்டும், லாபமோ நஷ்டமோ எனக்குப் பிடித்த பிசினஸ் வேலை செய்ய வேண்டும், அதிக சம்பளமோ குறைவான சம்பளமோ பிடித்த வேலையைச் செய்ய வேண்டும். கலையின் ஊடாக மக்களை மகிழ்விப்பது என ஒவ்வொரு இலக்கு இருக்கும். … Read more

துணைவேந்தர் நியமன திருத்த சட்டத்துக்கு இடைக்கால தடை தீர்ப்புக்கு CPI எதிர்ப்பு

சென்னை: நீதி பரிபாலன வரலாற்றில், சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை தீரா களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது என துணைவேந்தர் நியமன திருத்த சட்டத்துக்கு தடை விதிக்கப்பட்ட சம்பவம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பில் நியமனம் பெற்ற ஆரம்ப நாளிலிருந்து ஆர்.என்.ரவி மலிவான அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி, ஒப்புதலுக்கு அனுப்பிய 10-க்கும் மேற்பட்ட மசோதாக்களை கிடப்பில் … Read more

''ஆபரேஷன் சிந்தூர் மூலம் 3 முக்கிய கொள்கைகளை இந்தியா நிறுவியுள்ளது'': பிரதமர் மோடி

பிகானிர்: பாகிஸ்தானுடன் வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று உறுதிபடத் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, ஆபரேஷன் சிந்தூர் மூலம் 3 முக்கிய கொள்கைகளை இந்தியா நிறுவியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். ராஜஸ்தானின் பிகானிரில் ரூ. 26,000 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டிய பிரதமர் நரேந்திர மோடி, நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்து, வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், “ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று நடந்த … Read more

மோகன்லால் நடிக்கும் ' விருஷபா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

‘விருஷபா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பகிர்ந்து கொண்ட மோகன்லால், ”இது சிறப்பு வாய்ந்தது. இதை எனது எல்லா ரசிகர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்” என குறிப்பிட்டிருக்கிறார்.

"விராட்டுக்கு எதிராக விளையாட முடியாமல் போவது அவமானம்" – பென் ஸ்டோக்ஸ்!

2025 ஐபிஎல் தொடர் முடிவடைந்ததும் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இந்த சுற்றுப்பயணத்தில் இங்கிலாந்துடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாட உள்ளது. இத்தொடருக்கு முன்பாக இந்திய அணியின் இரு வீரர்கள் ஓய்வை அறிவித்துள்ளனர். கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்ததை அடுத்து விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.  விராட் கோலி இன்னும் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், … Read more

Thug Life: "'மருதநாயகம்' திரைப்படம் வந்திருந்தால், இந்நேரம்…" – கேரளத்தில் கமல் ஹாசன்

‘தக் லைஃப்’ திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்காக கமல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் சுற்றி வருகிறார். பல இடங்களில் ‘தக் லைஃப்’ குழுவினர் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து வருகின்றனர். Thug Life Stills நேற்று கொச்சியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கமல் ஹாசன் பேசுகையில், ” ‘தக் லைஃப்’ திரைப்படத்தில் நிறைய திறமையான ஆட்கள் வேலை பார்த்திருக்கிறார்கள். முக்கியமாக, ரஹ்மான், ரவி.கே. சந்திரன் போன்ற பலரும் இருக்கிறார்கள். “மருதநாயகம்’ திரைப்படம் வந்திருந்தால், இந்நேரம் ரவி இங்கு இருந்திருக்க மாட்டார். … Read more