கூகுளில் இருந்து உங்கள் தகவல்களை முழுமையாக நீக்குவது எப்படி?

Google Latest News : எதற்கெடுத்தாலும் கூகுள் வெப் பிரவுசரை பயன்படுத்தும் நம்முடைய தனிப்பட்ட தகவல்கள் நிறைய ஆன்லைனில் நிச்சயம் இருக்கும். இது மோசடி செய்பவர்களால் தவறாகப் பயன்படுத்தப்படலாம். எனவே, Google தேடலில் இருந்து உங்கள் தகவல்களை அகற்றுவது எப்படி, இதற்கு Google உதவியை பெறுவது எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் தனிப்பட்ட தகவல்கள் எப்போது தெரியும்? முதலில், உங்கள் தகவல் கூகிள் தேடலில் (Google Search) தெரிகிறதா இல்லையா என்பதை அறிந்து கொள்வது … Read more

இஸ்ரேலிய தூதரக ஊழியர்கள் 2 பேர் வாஷிங்டனில் உள்ள யூத அருங்காட்சியகம் அருகே சுட்டுக் கொலை

வாஷிங்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தின் இரண்டு ஊழியர்கள் புதன்கிழமை மாலை அங்குள்ள யூத அருங்காட்சியகத்தில் இருந்து வெளியே வந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர் உடனடியாக கைது செய்யப்பட்ட நிலையில் “சுதந்திரம், சுதந்திரம் பாலஸ்தீனம்” என்று அவர் கத்தியதாக போலீசார் தெரிவித்தனர். யாரோன் லிஷின்ஸ்கி மற்றும் சாரா மில்கிரிம் ஆகிய இரண்டு இஸ்ரேல் தூதரக ஊழியர்கள் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் கிதியோன் சார் உறுதிப்படுத்தினார். இந்த சம்பவம் தொடர்பாக சிகாகோவைச் … Read more

கனிமொழி எம்.பி. தலைமையிலான எம்.பி.க்கள் குழு ரஷியா பயணம்

புதுடெல்லி, பாகிஸ்தானில் இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடர்பாக வெளிநாடுகளுக்கு விவரிக்கும் வகையில், ரஷியா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லும் குழுவின் தலைவராக தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதியை மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில், கனிமொழி கருணாநிதி எம்.பி. தலைமையிலான குழு இன்று ரஷியாவுக்கு புறப்பட்டனர். அந்நாட்டு வெளியுறவுத் துறை மந்திரி மற்றும் அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை நடத்தவுள்ளனர். தொடர்ந்து, லாத்வியா, சிலோவேனியா, கிரீஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கும் … Read more

விராட் ஓய்வை அறிவித்ததும் அவருக்கு நான் அனுப்பிய மெசேஜ் இதுதான் – ஸ்டோக்ஸ்

லண்டன், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து சமீபத்தில் விடைபெற்றார். இந்திய அணிக்காக கடந்த 2011-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆன அவர் 123 போட்டிகளில் விளையாடி அதில் 30 சதம் உட்பட 9,230 ரன்கள் குவித்துள்ளார். மேலும் 68 போட்டிகளில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ள விராட் அதில் 40 போட்டிகளை வென்று கொடுத்து இந்திய அணிக்காக அதிக வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டனாகவும் வரலாறு … Read more

கிரீசில் பயங்கர நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

ஏதென்ஸ், கிரீசில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 8.49 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 104 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 35.96 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 25.79 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. இந்த நிலையில் … Read more

மஹாமிருத்யுஞ்ஜய ஹோமம்: ஆண்டுக்கு ஒருமுறையாவது சங்கல்பம் செய்துகொள்ள வேண்டும் ஏன் தெரியுமா?

மஹாமிருத்யுஞ்ஜய ஹோமம் உங்கள் ராசிக்கேற்ப ஆயுளும் ஆரோக்கியமும் அருளும் வழிபாடு, 26-5-2025 அமாவாசை நன்னாளில் சென்னை மேலக்கோட்டையூர் மேகநாதேஸ்வரர் ஆலயத்தில் மஹாமிருத்யுஞ்ஜய ஹோமமும் சிறப்புப் பூஜையும் நடைபெற உள்ளது. பதிவு செய்யுங்கள். முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07 முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும். மிருத்யுஞ்ஜய ஹோமம் ம்ருத்யு என்றால் யமன். ஈசன் மார்க்கண்டேயனைக் காக்க யமனை வென்றதால், அவரே மிருத்யுஞ்ஜயர் என்றானார். அப்போது ஈசனைத் துதித்து மார்க்கண்டேயர் பாடியதே மஹாமிருத்யுஞ்சய மந்திரம். உயிருக்குக் கவசமாக … Read more

“தமிழக உரிமையை முதல்வர் ஸ்டாலின் ஒருபோதும் விட்டுத்தர மாட்டார்” – அமைச்சர் மனோ தங்கராஜ் 

கோவை: “தமிழக உரிமையை முதல்வர் ஸ்டாலின் ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டார். அதில் சமரசமும் செய்து கொள்ள மாட்டார். டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் தமிழகத்தின் தேவைகளை எடுத்துக் கூறி தேவையான நிதியை பெற்றுத் தருவார்.” என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். கோவை ஆர்.எஸ்.புரம் ஆவின் விற்பனை அலுவலகத்தில் பன்னீர் சார்ந்த உணவு பொருட்கள் விற்பனையை ‘பன்னீர் ஹட்’ என்ற பெயரில், அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று (மே 22) … Read more

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கை: ஐக்கிய அமீரகம், ஜப்பான் ஆதரவு 

புதுடெல்லி: பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான் நாடுகள் தங்களின் ஆதரவினை தெரிவித்துள்ளன. ஆபரேஷன் சிந்தூரின் ஒரு பகுதியாக பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் முயற்சியை விளக்கும் விதமாக ஐக்கிய ஜனதாதளம் கட்சி எம்.பி சஞ்சய் குமார் ஜா மற்றும் சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) எம்.பி. ஸ்ரீகாந்த் ஷிண்டே தலைமையிலான அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுக்கள் முறையே ஜப்பான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பயணித்தன. அங்கு அவர்கள் இன்று பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் பாகிஸ்தானின் கொள்கைகளை … Read more

இந்தியாவுடன் வர்த்தக உறவை அதிகரிக்க விரும்பும் 50% பாகிஸ்தானியர்கள்

இஸ்லாமாபாத்: இருதரப்பு உறவுகளை இயல்பாக்குவதற்காக இந்தியாவுடனான வர்த்தக உறவுகளை அதிகரிக்க வேண்டும் என்று 49% பாகிஸ்தானியர்கள் தெரிவித்திருப்பதாக ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, இம்மாதம் 7ம் தேதி பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா ஆபரேஷன் சிந்தூர் எனும் ராணுவ நடவடிக்கையை எடுத்தது. 9 பயங்கரவாத முகாம்கள் … Read more

2026 தேர்தல்: மதுரையில் தவெக தலைவர் விஜய் போட்டியா? வெளியான சூசக தகவல்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.