2025 டாடா அல்ட்ராஸ் காரின் விலை மற்றும் சிறப்புகள்.! | Automobile Tamilan

பலேனோ, ஐ20 மற்றும் கிளான்ஸா கார்களை எதிர்கொள்ளுகின்ற 2025 டாடா அல்ட்ராஸ் காரின் ஆரம்ப விலை ரூ.6.89 லட்சம் முதல் ரூ.11.29 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், தொடர்ந்து இந்தியாவில் ஹேட்ச்பேக் சந்தையில் கிடைக்கின்ற ஒரே டீசல் எஞ்சின் கொண்ட மாடலாக உள்ளது. Tata Altroz தொடர்ந்து அல்ட்ராஸில்  1.2-லிட்டர், மூன்று சிலிண்டர் என்ஜின் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு 86hp மற்றும் 113Nm டார்க் வெளியிடுகிறது. இதில் மேனுவல், டிசிடி மற்றும் ஏஎம்டி என மூன்று … Read more

`பாஜக-வோடு கூட்டணி இல்லை என பேசிய ’சூனாபானா’ பழனிசாமி, எதற்காக…' – அமைச்சர் ரகுபதி கடும் விமர்சனம்

இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி எதிர்கட்சி தலைவர் எடப்பாடியை விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ” ரெய்டைப் பார்த்து யாருக்குப் பயம்? எனச் சூனா பானா ரேஞ்சில் கோழை பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். 2031 சட்டமன்றத் தேர்தல் வரையில் பாஜகவோடு கூட்டணி இல்லை எனப் பேசிய வீராதி வீரர் யார்? கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பாஜக கூட்டணி கிடையாது என விதவிதமான மொழிகளில் நீங்கள் பேசிய வீடியோக்கள் இன்றைக்கும் … Read more

சிங்கம்புணரி குவாரி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு

சிவகங்கை: சிங்கம்புணரி அருகே குவாரி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டையில் தனியார் கல் குவாரியில் நேற்று காலை 400 அடி ஆழ பள்ளத்தில் தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டிருந்தனர். அப்போது பாறைகள் சரிந்து விழுந்ததில் பொக்லைன் ஓட்டுநர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹர்ஜித் (28), மற்றும் முருகானந்தம் (49), ஆண்டிச்சாமி (50), ஆறுமுகம் (50), கணேசன் (43) ஆகிய 5 பேர் உயிரிழந்தனர். மைக்கேல் (43) மதுரை தனியார் … Read more

உ.பி தனியார் பல்கலை.யில் 1,400 போலிச் சான்றிதழ்கள் பறிமுதல்: தலைவர் உள்பட 11 பேர் கைது

புதுடெல்லி: உத்தரப்பிரதேசம் தனியார் பல்கலைகழகத்தில் சுமார் 1,400 போலி சான்றிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான வழக்கில் அந்நிறுவனத்தின் தலைவர் உட்பட 11 அலுவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உ.பி.யின் மேற்குப் பகுதியிலுள்ள ஹாபூரில் மோனாட் பல்கலைகழகம் உள்ளது. தனியார் பல்கலைக்கழகமான இதில் பொறியியல், அறிவியல், மருத்துவம் மற்றும் சட்டம் ஆகிய துறைகளில் பட்டப்படிப்பு, சான்றிதழ் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. சுமார் 6,000 மாணவர்கள் பயிலும் இந்த பல்கலைக்கழகத்தில் போலிச் சான்றிதழ்கள் விநியோகிக்கப்படுவதாகத் தெரியவந்துள்ளது. இந்தத் தகவலை அடுத்து அதில் … Read more

‘இந்தியா – பாக். மோதலை தீர்த்துவைத்தது நான்தான்’ – மீண்டும் மீண்டும் சொல்லும் ட்ரம்ப்

வாஷிங்டன்: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய மோதலை தீர்த்துவைத்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் கூறியுள்ளார். தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசாவுடனான சந்திப்பின் போது ஓவல் அலுவலகத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், “நாங்கள் பாகிஸ்தானுடனும் இந்தியாவுடனும் என்ன செய்தோம் என்பதைப் பார்த்தால், நாங்கள் அந்த மோதலை முழுவதுமாக தீர்த்து வைத்தோம். நான் அதை வர்த்தகத்தின் மூலம் தீர்த்து வைத்தேன். அமெரிக்கா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரண்டு நாடுகளுடனும் பெரிய ஒப்பந்தம் செய்து வருகிறது. … Read more

விஷால்-தன்ஷிகா இடையே காதல் மலர்ந்தது எப்படி? ‘இந்த’ ஒரு நடிகர்தான் காரணம்..

How Did Vishal And Sai Dhanshika Fell In Love : விஷால்-சாய் தன்ஷிகா சமீபத்தில் ‘யோகிடா’ படத்தின் விழாவில் தங்களது காதலை அறிவித்தனர். இந்த நிலையில், இவர்கள் காதலுக்கு அடித்தளமாக இருந்த விஷயம் எது என்பது குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  

100 நாள் வேலை திட்டம் குறித்து புகார் அளிக்கலாம் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

Tamil Nadu Government : மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்ட புகார்கள் தெரிவிக்க தமிழ்நாடு அரசு மொபைல் எண் கொடுத்துள்ளது. ஆனால் ஒரே ஒரு மாவட்டத்துக்காரர்கள் மட்டுமே இந்த புகார்களை தெரிவிக்க முடியும். 

அறிவாலயத்தில் ரெய்டு நடத்தபோது நீங்கள் தவழ்ந்து சென்றீர்களா? ஊர்ந்து சென்றீர்களா? எடப்பாடி எதிர்கேள்வி….

சென்னை: எடப்பாடியை புலிக்கேசி என விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலினை மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி காட்டமாக விமர்சனம் செய்துள்ளார். அறிவாலய மேல் மாடியில் CBI ரெய்டு வந்த போது, கீழ்மாடியில் நீங்களும் , உங்கள் தந்தையும் 63 தொகுதிகளை தாரைவார்த்த போது டேபிளுக்கு கீழ் தவழ்ந்து சென்றீர்களா? ஊர்ந்து சென்றீர்களா?  என கேள்வி எழுப்பி உள்ளார். இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி  தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், முந்தைய மூன்று ஆண்டுகள் #NITIAayog … Read more

`மீண்டும் ஏறுமுகம்?' உயரும் தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம்!

தங்கம் விலை… இன்று தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.45 உயர்ந்து, ஒரு பவுனுக்கு ரூ.360 உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்துள்ளது. ஒரு வாரத்திற்கு பிறகு, மீண்டும் தங்கம் விலை ஏறுமுகத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. இது தொடருமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். ஒரு கிராம் தங்கம்… இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.8,975 ஆக விற்பனை ஆகி வருகிறது. ஒரு பவுன் தங்கம்… இன்று ஒரு பவுன் தங்கம் (22K) ரூ.71,800 … Read more

37 ஆயிரம் கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்க ரூ.30.65 கோடி ஒதுக்கீடு

சென்னை: நடப்பாண்டில் 37 ஆயிரம் கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்க ரூ.30.65 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஊரக வளர்ச்சித் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் முன்னோடி வங்கிகள் மூலம் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னை தவிர 37 மாவட்டங்களிலும் ஊரக வேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனங்கள் … Read more