உள்ளாட்சி அமைப்பு இடைத்தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை

மதுரை மதுரை உயர்நீதிமன்றக் கிளை உள்ளாட்சி அமைப்புகளில் இடைத் தேஎர்தல் நடத்த தடை விதித்துள்ளது. மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  அந்த மனுவில் உள்ளாட்சி அமைப்புகளின்ன் இடைதேர்தலை புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று அந்த மனு மதுரை உயர்நீதிமன்றக்கிளைஇயில் விசாரணைக்கு வந்தது.  அப்போது உள்ளாட்சி அமைப்புகளில் காலியாகவுள்ள தலைவர் கவுன்சிலர் பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்து உத்தரவ்ட்டுள்ளது.

MI vs DC: `நாங்க வர்றோம்' – சூர்யாவின் பக்குவம்; சாண்ட்னரின் மாஸ்டர் க்ளாஸ் – ப்ளே ஆப்ஸில் மும்பை

‘மும்பை வெற்றி!’ டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி ப்ளே ஆப்ஸூக்கு தகுதிபெற்றிருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி. சூர்யாவின் பக்குவமான பேட்டிங்காலும் சாண்ட்னரின் அற்புதமான பௌலிங்காலும் இதை சாதித்திருக்கிறது மும்பை அணி. போட்டி எப்படி மும்பைக்கு சாதகமாக மாறியது? டெல்லி எங்கே சறுக்கியது? Mumbai Indians ‘மும்பையின் கம்பேக்!’ மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனை மோசமாகத்தான் தொடங்கியிருந்தது. ஆடிய போட்டிகள் அத்தனையிலும் தோற்றிருந்தது. அப்போது டெல்லிக்கு எதிரான போட்டி ஒன்றில்தான் மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் பார்முக்கு … Read more

எண்ணூர் குடியிருப்பு பகுதியில் ராணுவத்தில் பயன்படுத்தும் வெடிகுண்டு கண்டெடுப்பு!

சென்னை: சென்னை – எண்ணூரில் வீட்டின் சுற்றுச் சுவர் அமைக்க பள்ளம் தோண்டும் பணியின்போது, ராணுவத்தில் பயன்படுத்தும் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மண்ணடி பகுதியை சேர்ந்த முஸ்தபா என்பவர் சென்னை, எண்ணூர் ராமகிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள பழைய வீட்டை, சமீபத்தில் வாங்கினார். இதையடுத்து, அந்த வீட்டில் சுற்றுச் சுவர் அமைப்பதற்காக பள்ளம் தோண்டும் பணி புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, ராணுவத்தில் பயன்படுத்தும் வெடிகுண்டு ஒன்று வெடிக்காத நிலையில் மண்ணில் புதைந்து இருந்தது தெரிய வந்தது. … Read more

‘கன்னடம் பேச முடியாது’ என வாக்குவாதம் செய்த வங்கி அதிகாரி பணியிட மாற்றம் – சித்தராமையா ‘அதிரடி’ எதிர்வினை

பெங்களூரு: கன்னடம் பேச மறுத்த பெங்களூருவைச் சேர்ந்த எஸ்பிஐ வங்கி அதிகாரியின் வீடியோ வைரலான நிலையில், அவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். சூர்யா நகராவில் உள்ள எஸ்பிஐ கிளை மேலாளரின் நடத்தை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும் அவர் காட்டமாக குறிப்பிட்டுள்ளார். இது குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அனேகல் தாலுகா, சூர்யா நகராவில் உள்ள எஸ்பிஐ கிளை மேலாளர் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் பேச மறுத்து மக்களை … Read more

"ஏக்கருக்கு ரூ. 5,000 மானியம் வழங்க வேண்டும்" – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

தெலுங்கானா மாநிலத்தில் வழங்கப்படுவதை போல ஏக்கருக்கு ரூ. 5,000 ஊக்குவிப்பு மானியம் வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 

பிளே ஆப் சுற்றில் மும்பை… ஐபிஎல் வரலாற்றில் 11வது முறை – சுருண்டது டெல்லி!

Mumbai Indians Qualified For IPL 2025 Playoffs: ஐபிஎல் 2025 தொடரின் லீக் சுற்று போட்டிகள் இன்னும் ஒரு வார காலத்தில் நிறைவடைய உள்ளன. தற்போதைக்கு குஜராத், ஆர்சிபி, பஞ்சாப் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன. 5 அணிகள் பிளே ஆப் ரேஸில் இருந்தும் வெளியேறிவிட்டன. அந்த வகையில் பிளே ஆப் சுற்றுக்கு செல்லக்கூடிய 4வது அணி யார் என்பதை தீர்மானிக்கும் போட்டியாகவே இன்றைய மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான … Read more

அனைத்து தாலுகா அலுவலகங்களும் சனிக்கிழமை இயங்கும் : புதுச்சேரி அர்சு

புதுச்சேரி புதுச்சேரி அரசு அனத்து தாலுகா அலுவலகங்களும் சனிக்கிழமை இயங்கும் என உத்தரவிட்டுள்ளது. இன்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ”2025-26 கல்வியாண்டிற்கான பள்ளி மற்றும் கல்லூரி சேர்க்கை பருவத்தை முன்னிட்டு, குடியிருப்பு, வருமானம் மற்றும் சாதி சான்றிதழ்களுக்கு விண்ணப்பங்கள் பெருமளவில் பெறப்பட்டு வருகின்றன. இதனால் மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் தாலுகா அலுவலகங்களில் சான்றிதழ்கள் பெறும் போது சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இந்த நிலையில், மாணவர்களின் விண்ணப்பங்கள் சரியான நேரத்தில் பரிசீலிக்கப்பட்டு, தேவையான சான்றிதழ்கள் வழங்கப்படுவதை உறுதி … Read more

ராஜஸ்தானுக்கு எதிரான தோல்வி… சி.எஸ்.கே பயிற்சியாளர் கூறியது என்ன..?

டெல்லி, ஐ.பி.எல். தொடரில் டெல்லியில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை – ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவரில் 187 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 188 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் 17.1 ஓவரில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 188 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த தொடரில் இதுவரை 13 ஆட்டங்களில் ஆடியுள்ள சென்னை … Read more

கரூர்: ரூ. 12 லட்சம் செக் மோசடி வழக்கில் அ.தி.மு.க நிர்வாகி கைது… ஜாமீன்! – நடந்தது என்ன?

அ.தி.மு.க கரூர் மாவட்ட கலை இலக்கிய பிரிவு இணைச்செயலாளராக சுரேகா கே பாலச்சந்தர் என்பவர் பொறுப்பு வகித்து வருகிறார். இவர், கடந்த 2012 – ம் ஆண்டு தனது குடும்பத் தேவைக்காக, தனது நெருங்கிய உறவினர் அசோக்குமாரிடம் காசோலை கொடுத்து, ரூ. 9 லட்சம் கடன் பெற்றுள்ளார். இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக நிதி நிறுவனத்திற்கு அசல் வட்டியை சரியாக கட்டி வந்த சுரேகா பாலச்சந்தர் கடந்த ஓராண்டாக இந்த நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய அசல் மற்றும் … Read more

கோவை வன எல்லையில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டுவதை முற்றிலும் தடுக்க வானதி சீனிவாசன் கோரிக்கை

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள வன எல்லைப் பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதை முற்றிலும் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் வலியுறுத்தி உள்ளார். கோவை விமான நிலையத்தில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “ஆஸ்திரேலிய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற ‘ஸ்பெஷல் விசிட்’ என்ற நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் நான் கலந்து கொண்டேன். ஆஸ்திரேலியா அரசின் நடவடிக்கைகள் மற்றும் … Read more