“பெருமித இந்தியர்களாக செல்கிறோம்” – தூதுக் குழுவுடன் வெளிநாடு செல்லும் சுப்ரியா சுலே கருத்து

மும்பை: “பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராட விரும்பும் பெருமைமிக்க இந்தியர்களான நாங்கள் செல்கிறோம். நாங்கள் கட்சியின் சார்பாகப் போகவில்லை. இந்தியா சார்பாக மற்ற நாடுகளுக்குச் செல்கிறோம்” என்று தேசியவாத காங்கிரஸ் (எஸ்பி) எம்.பி சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார். எல்லை தாண்​டிய பயங்கர​வாதத்தை ஊக்​கு​வித்து வரும் பாகிஸ்​தான் குறித்​து, உலக நாடுகளின் தலைவர்களிடம் ஆதா​ரத்துடன் விளக்கும் விதமாக ரவிசங்​கர் பிர​சாத், சசிதரூர், கனி​மொழி, சுப்ரியா சுலே உட்பட 7 பேர் தலை​மை​யில் எம்​.பி.க்​கள் அடங்கிய தூதுக் குழுக்​களை மத்​திய அரசு … Read more

அதிமுகவின் அந்த அந்தஸ்தும் இருக்கக்கூடாது.. அமைச்சர் ஐ. பெரியசாமி!

வரும் 2026 தேர்தலில் அதிமுக என்ற கட்சி எதிர்கட்சியாக கூட இருக்கக்கூடாது. அதுவே நமது குறிக்கோள் என தேனியில் அமைச்சர் ஜ. பெரியசாமி பேசி உள்ளார்.   

ரிஷப் பண்ட் இதை செய்தால், பழைய நிலைக்கு திரும்பலாம்.. பிரச்சனையை சொன்ன யோக்ராஜ் சிங்!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் கடுமையாக சொதப்பி உள்ளார். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் ரூ. 27 கோடிக்கு வாங்கப்பட்ட ரிஷப் பண்ட் அந்த அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். அவர் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் எந்த ஆண்டு இல்லாத வகையில், இந்த ஆண்டு மிக மோசமாக விளையாடி இருக்கிறார்.  இதுவரை 12 போட்டிகளில் பேட்டிங் செய்து வெறும் 135 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். அவரது பேட்டிங் சராசை 12.27 ஆக உள்ளது. இது … Read more

வடக்கு காசாவில் இயங்கிவரும் கடைசி இரண்டு மருத்துவமனைகளை இஸ்ரேல் ராணுவம் சுற்றிவளைத்தது

ஹமாஸ் படையினருக்கு நெருக்கடியை கொடுக்கும் வகையில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல் ராணுவம் வடக்கு காசாவில் இயங்கிவரும் கடைசி இரண்டு மருத்துவமனைகளை சுற்றிவளைத்துள்ளது. இதனால் யாரும் அந்த மருத்துவமனைகளை விட்டு வெளியேறவோ அல்லது உள்ளே நுழையவோ முடியாது என்று மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் உதவி குழுக்கள் தெரிவித்துள்ளனர். பேரழிவிற்குள்ளான பாலஸ்தீன பிரதேசத்திற்குள் இஸ்ரேல் தனது தாக்குதல் எல்லையை விரிவுபடுத்தி வரும் நிலையில் இந்தோனேசிய மருத்துவமனை மற்றும் அல்-அவ்தா மருத்துவமனை ஆகிய இரண்டு மருத்துவமனைகளும் சுற்றிவளைக்கப்பட்டு இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் … Read more

"மோடி அரசு கவர்னர்களை தவறாக பயன்படுத்துகிறது.." – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி, மக்களவை எதிர்கட்சி தலைவரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான ராகுல் காந்தி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- இந்தியாவின் பலம் அதன் பன்முகத்தன்மையில் உள்ளது – ஒவ்வொன்றும் அதன் சொந்தக் குரலைக் கொண்ட மாநிலங்களின் ஒன்றியம். மோடி அரசாங்கம் கவர்னர்களை தவறாகப் பயன்படுத்தி அந்தக் குரல்களை நசுக்கி, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைத் தடுக்கிறது. இது கூட்டாட்சியின் மீதான ஆபத்தான தாக்குதல், இதை எதிர்க்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த … Read more

ஐ.பி.எல்.: அஸ்வின், ஜடேஜா சாதனையை முறியடித்த நூர் அகமது

டெல்லி, ஐ.பி.எல். தொடரில் டெல்லியில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை – ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவரில் 187 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 188 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் 17.1 ஓவரில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 188 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியைத் … Read more

பாகிஸ்தான்: பள்ளி பஸ்சை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல் – 5 பேர் பலி

லாகூர், பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணம் குர்ஷ்தர் மாவட்டம் ராணுவ பள்ளிக்கூடம் உள்ளது. இதில் ராணுவத்தில் பணியாற்றும் வீரர்களின் குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், இந்த பள்ளிக்கூடத்திற்கு குழந்தைகளை ஏற்றிக்கொண்டு பஸ் சென்றுகொண்டிருந்தது. மலைப்பகுதி அருகே உள்ள சாலையில் சென்றுகொண்டிருந்தபோது பஸ்சை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் பஸ் வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் 3 பள்ளிக்குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 38 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த … Read more

Virat Kohli : 'அது ஒரு அவமானம்…' – விராட் கோலியின் ஓய்வு குறித்து பென் ஸ்டோக்ஸ்!

‘கோலி பற்றி பென் ஸ்டோக்ஸ்!’ இந்திய அணியின் சூப்பர் சீனியர் வீரரான விராட் கோலி சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்திருந்தார். இந்நிலையில், விராட் கோலியின் ஓய்வு குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேசியிருக்கிறார். Virat Kohli – விராட் கோலி ‘அது ஒரு அவமானம்…’ அவர் பேசியதாவது, ‘விராட் கோலி ஓய்வு முடிவை அறிவித்தவுடன் அவருக்கு மெசேஜ் செய்திருந்தேன். இங்கிலாந்தில் உங்களுக்கு எதிராக ஆடுவதை தவறவிடுவது அவமானம் என்றேன். எனக்கு விராட் கோலிக்கு … Read more

மதுரை மாநகராட்சி வாகனங்கள் பராமரிப்பில் அலட்சியம்: உதவி பொறியாளர் சஸ்பெண்ட்

மதுரை: மாநகராட்சி வாகனங்களை முறையாக பராமரிக்காததால் தூய்மைப் பணி பாதிக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், வாகன பராமரிப்பு உதவிப் பொறியாளரை பணியிடை நீக்கம் செய்து ஆணையர் சித்ரா உத்தரவிட்டார். மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் தூய்மைப் பணியை மேற்கொள்ளும் ஒப்பந்தத்தை ‘அவர் லேண்ட்’ நிறுவனம் பெற்றுள்ளது. மாநகராட்சியில் தூய்மைப் பணிக்கு 450 முதல்நிலை குப்பை சேகரிப்பு வாகனங்கள், 15 இரண்டாம் நிலை குப்பை சேகரிப்பு வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. குப்பையை சேகரிப்பதற்கும், அவற்றை உரக்கிடங்குக்கு கொண்டு செல்வதற்கும் … Read more

‘வக்பு வாரியத்தில் முஸ்லிம் அல்லாத இருவர்…’ – தமிழகத்தை மேற்கோள் காட்டி மத்திய அரசு வாதம்

புதுடெல்லி: “வக்பு திருத்தச் சட்டத்தின்படி வக்பு வாரியத்தில் முஸ்லிம் அல்லாதவர்கள் இருவர் மட்டுமே இருப்பார்கள். அவர்கள் எப்போதும் எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இருப்பார்கள்” என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தனது வாதத்தில் தெரிவித்தார். அத்துடன், ‘தமிழகத்தில் அர்ச்சகர்கள் மாநில அரசால் நியமிக்கப்படுகிறார்கள்’ என்று அவர் தனது வாதத்தில் மேற்கோள் காட்டினார். வக்பு திருத்தச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு இடைக்கால தடை விதிப்பது தொடர்பான வாதம் உச்ச நீதிமன்றத்தில் இரண்டாவது நாளாக இன்றும் (மே 21) நடைபெற்றது. தலைமை … Read more