”பெற்றோர் இல்லாத பிள்ளைக படிப்பு பாதியில் நின்னுடக்கூடாது”- வழிகாட்டும் தஞ்சை கலெக்டர்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், பெற்றோர் இல்லாத குழந்தைகள் குறித்து கணக்கெடுக்கும் படி வருவாய் துறையினருக்கு உத்தரவிட்டார். அதன்படி கடந்த சில தினங்களாக கும்பகோணம், பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் அனைத்து தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட வருவாய் துறை அலுவலர்கள் நகரம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் பெற்றோர் இல்லாத பள்ளிக் குழந்தைகள் குறித்துக் கணக்கெடுப்பு நடத்தினார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் இதில், அம்மா, அப்பா இருவரும் இல்லாத மாணவ, … Read more

மதுரை அரசு மருத்துவமனை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் ‘துயர்நிலை ஆலோசகர்’ உதவி மையம்

மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மாநிலத்திலேயே முதல் முயற்சியாக விபத்து அவசர சிகிச்சை பிரிவு மற்றும் தலைக்காய தீவிர சிகிச்சை பிரிவில் நோயாளிகளின் நிலைமை குறித்து பயம், பதற்றத்துடன் இருக்கும் உறவினர்களுக்கு முழுமையாக விளக்கும் வகையில் ‘துயர்நிலை ஆலோசர்’ உதவி மையம் நாளை (மே 22) துவக்கப்படுகிறது. விபத்து உள்ளிட்ட காரணங்களால் உயிர் காக்கும் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு தினசரி ஏராளமான நோயாளிகள் வருகிறார்கள். நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை அளிக்க தீவிர சிகிச்சை … Read more

‘தலைக்கு ரூ.1.5 கோடி’ – என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் தலைவர் பசவராஜு பின்னணி என்ன?

ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் அபுஜ்மத் காடுகளில் நடந்த ஒரு தீவிர மோதலில் பசவராஜு என்று அழைக்கப்படும் மாவோயிஸ்ட் தலைவர் நம்பலா கேசவ் ராவ் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போராட்டத்தில் பாதுகாப்புப் படையினர் முக்கிய திருப்புமுனை நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. தடைசெய்யப்பட்ட சிபிஐ (மாவோயிஸ்ட்) அமைப்பின் பொதுச் செயலாளர் பசவராஜு, அபுஜ்மத் காடுகளில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கையின்போது கொல்லப்பட்ட 26 மாவோயிஸ்டுகளில் இவரும் ஒருவர். இது சமீபத்திய ஆண்டுகளில் மிகவும் … Read more

பண மோசடி புகார்.. இசையமைப்பாளர் சாம் சி.எஸ் பரபரப்பு அறிக்கை

இசையமைப்பாளர் சாம் சி.எஸ் மீது தயாரிப்பாளர் சமீர் அலிகான் சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில் பண மோசடி புகார் அளித்துள்ள நிலையில், தற்போது இசையமைப்பாளர் சாம் சி.எஸ் பரபரப்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

"ஈபிஎஸ் பொய் கூறி வருகிறார்".. உளறிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்!

7.5% இட ஒதுக்கீடு நாங்கள் தான் கொண்டு வந்தோம் என்று ஈபிஎஸ் பொய் கூறி வருகிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உளறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   

"சிஎஸ்கே அணி தானாக முன்னேறும்".. தோனி ஓய்வு குறித்து சஞ்சய் பங்கர்!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி கடுமையாக சொதப்பி இருக்கும் நிலையில், பலரும் அந்த அணியை விமர்சித்து வருவதோடு,தோனியின் ஓய்வு குறித்தும் பேசி வருகின்றனர். அந்த வகையில், முன்னாள் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் தோனியின் ஓய்வு குறித்து பேசியிருப்பது அவரது ரசிகர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.  தோனி இடத்தில் நான் இருந்திருந்தால், சிஎஸ்கே அணி தானாக முன்னேறும் என நினைத்து ஓய்வை அறிவித்திருப்பேன் என அவர் கூறி உள்ளார். கடந்த இரண்டு … Read more

போலி ஐபோன் கண்டுபிடிப்பது எப்படி? நிஜ ஐபோனுக்கு உள்ள வித்தியாசம் என்ன?

உலகளவில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன்களில் ஐபோன்களும் ஒன்று. ஆப்பிளின் இந்த முதன்மை ஸ்மார்ட்போன்கள் சிறந்த அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகளுடன் வருவது மட்டுமல்லாமல், சிலருக்கு அந்தஸ்தின் சின்னமாகவும் உள்ளன. Statista.com -இன் படி, ஆப்பிள் 2024 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் ஐபோன்களின் விற்பனையிலிருந்து தோராயமாக US$39 பில்லியன் வருவாய் ஈட்டியுள்ளது. இருப்பினும், ஐபோன்களுக்கு மார்க்கெட்டில் இருக்கும் டிமாண்ட் காரணமாக போலி மாடல்களின் பெருக்கத்திற்கும் வழிவகுத்தது. நீங்கள் ஆப்பிள் ஸ்டோர் போன்ற நம்பகமான இடங்களிலிருந்து ஐபோன் வாங்கினால், கவலைப்பட … Read more

அனகாபுத்தூர் அடையாறு ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்… மாற்று இடங்களில் இலவச வீடு வழங்கப்படும் தமிழக அரசு அறிவிப்பு

சென்னையை அடுத்த அனகாபுத்தூரில் அடையார் ஆற்றங்கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று முதல் நடைபெற்றது வருகிறது. அங்கு ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக கூறப்படும் பொதுமக்களின் குடியிருப்புகளும் அகற்றப்படுகின்றன. மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பலத்த போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் நடைபெறுகின்றன. இதற்கு அப்பகுதி மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த நிலையில், அனகாபுத்துரில் அடையாறு ஆற்றங்கரையோரம் காயிதே மில்லத் நகர், தாய் மூகாம்பிகை நகர், சாந்தி நகர், … Read more

'அவர் கொலை செய்துவிட்டாரா?' – பூஜா கேத்கருக்கு முன்ஜாமீன் வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு

புதுடெல்லி, மராட்டிய மாநிலம் புனே கலெக்டர் அலுவலகத்தில் உதவி கலெக்டர் அந்தஸ்தில் பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றி வந்தவர் பூஜா கேத்கர் (வயது 34). விதிமுறையை மீறி தனது சொகுசு காரில் சிவப்பு சுழல் விளக்கு பொருத்தியது, அலுவலகத்தில் தனியறை கேட்டு அடம் பிடித்தது, கூடுதல் கலெக்டரின் அறையை ஆக்கிரமித்தது போன்ற வெவ்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். இதையடுத்து வாசிம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு அதிரடியாக மாற்றப்பட்டார். சர்ச்சைகளுக்கு மத்தியில் பூஜா கேத்கர் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி … Read more

வங்காளதேசத்திற்கு எதிரான டி20 தொடர்; பாகிஸ்தான் அணி அறிவிப்பு

கராச்சி, வங்காளதேச கிரிக்கெட் அணி தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் வங்காளதேச அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. இந்நிலையில், இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு சல்மான் அலி ஆஹா கேப்டனாகவும், ஷதாப் கான் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த அணியில் முன்னணி வீரர்களான பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஷாகின் ஷா … Read more