வாடிக்கையாளரிடம் கன்னடத்தில் பேச மேலாளர் மறுப்பு; முதல்-மந்திரி சித்தராமையா கண்டனம்

பெங்களூரு, கர்நாடகாவில் பெங்களூரு நகருக்கு உட்பட்ட சூரியா நகர் எஸ்.பி.ஐ.யின் கிளை மேலாளர் ஒருவர் வாடிக்கையாளரிடம் கன்னடத்தில் பேச மறுப்பு தெரிவித்து உள்ளார். வாடிக்கையாளர் வேண்டுகோளாக கேட்டு கொண்டபோதும் அவர் கன்னடத்தில் பேசவில்லை என கூறப்படுகிறது. இதனை கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கடுமையாக விமர்சித்து உள்ளார். அவர் வெளியிட்ட எக்ஸ் ஊடக பதிவில், அனிகல் தாலுகாவுக்கு உட்பட்ட சூரியா நகர் பகுதியில் அமைந்த எஸ்.பி.ஐ.யின் கிளை மேலாளர் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் பேச மறுத்ததும், குடிமக்களை கவனத்தில் … Read more

கடைசி போட்டியில் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி – சஞ்சு சாம்சன்

டெல்லி, ஐ.பி.எல். தொடரில் டெல்லியில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை – ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவரில் 187 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 188 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் 17.1 ஓவரில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 188 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் ராஜஸ்தான் … Read more

வீட்டில் இருந்து மர்மமான முறையில் கீழே விழுந்த லஷ்கர் பயங்கரவாதி; தீவிர சிகிச்சை

லாகூர், பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த பயங்கரவாத அமைப்பு இந்தியாவுக்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது. இந்த அமைப்பின் தலைவராக ஹபீஸ் சயது செயல்பட்டு வருகிறார். இந்த அமைப்பை இந்தியா பயங்கரவாத இயக்கமாக அறிவித்துள்ளது. இதனிடையே லஷ்கர் அமைப்பின் இணை நிறுவனர் அமீர் ஹம்சா. இவரை இந்தியா பயங்கரவாதியாக அறிவித்துள்ளது. இந்நிலையில், லஷ்கர் இணை நிறுவனரான பயங்கரவாதி அமீர் ஹம்சா லாகூரில் உள்ள வீட்டில் வசித்து … Read more

Thug Life: "நாங்களே Gen Z தான்!" – மணிரத்னம் கொடுத்த தக் பதில்

மணிரத்னம் இயக்கியிருக்கும் ‘தக் லைஃப்’ ஜூன் 5-ம் தேதி வெளியாகிறது. கமல் ஹாசன் சொன்ன ஒரு வரி ஐடியாவிலிருந்து இந்தப் படத்தின் கதையை விரித்திருக்கிறார் மணிரத்னம். படத்தின் ப்ரோமோஷனுக்காக ‘தக் லைஃப்’ குழுவினர் இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கும் சுற்றி வருகின்றனர். Thug Life நேற்று (20.5.25) மும்பையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் திரைப்படம் தொடர்பாகச் சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார் மணிரத்னம். பேசத் தொடங்கிய அவர், “முதன் முதலில் இந்தப் படத்திற்கு வந்தவர் கமல் ஹாசன்தான். அதன் பிறகுதான் … Read more

‘ஏன் நடவடிக்கை இல்லை?’ – அரக்கோணம் திமுக முன்னாள் நிர்வாகி விவகாரத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம்

அரக்கோணம்: அரக்கோணம் திமுக முன்னாள் நிர்வாகி தெய்வச்செயலைக் கண்டித்து, அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பருத்திபுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் 21 வயது கல்லூரி மாணவி . தனது கணவரும் அரக்கோணம் திமுக இளைஞர் அணி முன்னாள் துணை அமைப்பாளருமான தெய்வச்செயல் மீது அரக்கோணம் மகளிர் காவல் நிலையத்தில் மாணவி சமீபத்தில் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து காவல் துறையினர் முறையாக விசாரிக்கவில்லை என்று மாணவி தரப்பில் குற்றசம் சாட்டப்பட்டது. இந்நிலையில், … Read more

சர்வதேச புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட எழுத்தாளர்: யார் இந்த பானு முஷ்டாக்?

புதுடெல்லி: ஹார்ட் லாம்ப் என்ற தனது சிறுகதைத் தொகுப்புக்காக ‘சர்வதேச புக்கர் பரிசு வென்ற கன்னட மொழி எழுத்தாளர்’ என்ற பெருமையை பானு முஷ்டாக் பெற்றுள்ளார். புக்கர் பரிசு வென்ற முதல் சிறுகதை தொகுப்பு இதுவாகும். கன்னட எழுத்தாளர் பானு முஷ்டாக் மற்றும் மொழிபெயர்ப்பாளர் தீபா பாஸ்தி ஆகியோர் சிறுகதைக்கான சர்வதேச புக்கர் பரிசை வென்றனர். லண்டனின் டேட் மாடர்னில் நடந்த விழாவில், ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட குழுவின் தலைவராக உள்ள எழுத்தாளர் மேக்ஸ் போர்ட்டர் இந்த … Read more

தமிழகத்தின் இந்த 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை ஆய்வு மையம்!

TN Rain Update: இன்று (மே 21) தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. 

வயதாகிவிட்டது போது.. அணியை விட்டு வெளியேறுங்கள்.. தோனியை அட்டாக் செய்த சீக்கா!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடுமையாக சொதப்பி உள்ளது. 13 போட்டிகளில் வெறும் 3ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இத்தொடரில் பிளே ஆஃப் சுற்றை முதலில் இழந்த அணியும் சென்னை தான். ஐபிஎல் தொடரில் சென்னை அணி தொடர்ந்து இரண்டு முறை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறுவது இதுவே முதல் முறையும் ஆகும்.  அதேபோல், புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தில் நிறைவு செய்வதும் இதுவே முதல் முறை ஆகும். நேற்றைய ராஜஸ்தான் … Read more

ஜப்பான் வேளாண் துறை அமைச்சர் திடீர் ராஜினாமா

டோக்கியோ ஜப்பான் வேளாண் துறை அமைச்சர் திடீர் என ராஜினாமா செய்துள்ளார்.   கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜப்பான் வேளாண் துறை அமைச்சர் டகு இடொ. இவர் கியூஷா தீவில் உள்ள சாஹா மாகாணத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், நான் எப்போதும் கடைக்கு சென்று அரிசி வாங்குவதில்லை. எனது ஆதரவாளர்கள், கட்சிக்காரர்கள் எனக்கு அரியை பரிசாக கொடுப்பார்கள் என்றார். ஜப்பானில் அரிசி விலை உயர்ந்து வரும் நிலையில் மந்திரியின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. … Read more

சத்தீஷ்காரில் பாதுகாப்பு படையினர் என்கவுன்ட்டர் – 27 நக்சல்கள் சுட்டுக்கொலை

ராய்ப்பூர், சத்தீஷ்கார் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள அபுஜ்மத் பகுதியில் அமைந்திருக்கும் வனப்பகுதியில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த பகுதி நக்சல்களின் ஒரு முக்கிய மையமாக அறியப்படுகிறது. இதையடுத்து அந்த பகுதியில் மாவட்ட ரிசர்வ் போலீசார், சி.ஆர்.பி.எப். வீரர்கள், சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அவர்களோடு தெலுங்கானா காவல்துறையினரும் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இந்த … Read more