டெல்லி ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி முறியடிப்பு

ஹர்டோலி நேற்று டெல்லி ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க நடந்த சதி முறியடிக்கப்பட்டுள்ளது. நேற்று தலைநகர் டெல்லியில் இருந்து அசாமின் திப்ருகட் பகுதிக்கு நேற்று ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் சென்றுகொண்டிருந்தது. அந்த ரயில் உத்தரபிரதேசத்தின் ஹர்டோலி மாவட்டம் உமர்தாலி பகுதியில் சென்றபோது தண்டவாளத்தில் மரப்பலகை வைக்கப்பட்டிருந்ததை ரயில் ஓட்டுநர் (லோகோ பைலட்) கண்டார். அவர் உடனடியாக ரயிலை நிறுத்தி விட்டு தண்டவாளத்தில் இறங்கி நடந்து சென்று பார்த்தபோது அதில் இரும்பு கம்பியால் மரப்பலகை கட்டப்படிருந்ததை கண்டுபிடித்தார்.அவர் இதுகுறித்து … Read more

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் தொடர்; அயர்லாந்து முன்னணி வீரர்கள் விலகல்

டப்ளின், வெஸ்ட் இண்டீஸ் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நாளை முதல் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக அயர்லாந்து அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அயர்லாந்து அணியில் இடம்பிடித்திருந்த முக்கிய ஆல்ரவுண்டர் கர்டிஸ் கேம்பர் மற்றும் அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் கிரேக் யங் ஆகியோர் காயமடைந்ததை … Read more

Dhoni : 'ஒரு சீசனோட விட்றாதீங்க…' – இளம் வீரர்களுக்கு தோனி அறிவுரை!

சென்னை தோல்வி! ராஜஸ்தான் ராயல்ஸூக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி தோற்றிருக்கிறது. இந்தத் தோல்விக்குப் பிறகு சென்னை அணியின் கேப்டன் தோனி சில முக்கியமான விஷயங்களை பேசியிருக்கிறார். CSK vs RR ‘தோல்விக்குப் பின் தோனி…’ தோனி பேசியதாவது, ‘நாங்கள் எடுத்த ஸ்கோர் நல்ல ஸ்கோர்தான். ஆனால், நிறைய விக்கெட்டுகளை இழந்தோம். இதனால் லோயர் மிடில் ஆர்டர் மீது நிறைய அழுத்தம் ஏற்பட்டது. டெவால்ட் ப்ரெவிஸ் ரிஸ்க் எடுத்து ஆடினார். ஆனாலும் அந்த … Read more

‘அடையாளம் தெரியாத இறந்தவரின் கைரேகையை ஆதார் தரவுடன் ஒப்பிட்டு பரிசோதிக்க இயலாது’ – ஆதார் ஆணையம்  

சென்னை: இறந்து போன அடையாளம் தெரியாத நபரின் கைரேகையை ஆதார் தரவுகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது என்பது சாத்தியமற்றது என உயர் நீதிமன்றத்தில் ஆதார் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அடையாளம் தெரியாத இறந்த நபர் ஒருவரின் அடையாளத்தை கண்டறிவதற்காக அவரது கைரேகையை ஆதார் தரவுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து விவரங்களை வழங்க ஆதார் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் டிஎஸ்பி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான … Read more

“பயங்கரவாதத்துக்கு மென்மையான இலக்குகளாக தென் மாநிலங்கள்…” – பவன் கல்யாண் கவலை

விஜயவாடா: “பயங்கரவாதத்துக்கு மென்மையான இலக்குகளாக தென் மாநிலங்கள் உள்ளன” என்று ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் கூறினார். ஹைதராபாத் மற்றும் கோயம்புத்தூரில் நடந்த கடந்த கால தாக்குதல்களை நினைவுகூர்ந்து பவன் கல்யாண் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென் மாநிலங்களில் ரோஹிங்கியா இடம்பெயர்வு மற்றும் கடலோர ஊடுருவல் அச்சுறுத்தல்கள் குறித்து அதிக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பயங்கரவாதத்துக்கு மென்மையான இலக்குகளாக தென் மாநிலங்கள் உள்ளன. எனவே எல்லைகளில் நமது ஆயுதப் படைகளைப் போலவே நமது காவல் துறையும் … Read more

IPL 2025: பிளே ஆப் போட்டிகள் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு? இந்த 2 அணிக்கு சாதகம்!

IPL 2025: ஐபிஎல் 2025 தொடர் தற்போது அதன் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. 5 அணிகள் பிளேஆப் ரேஸில் இருந்து வெளியேறிவிட்டன. குஜராத், ஆர்சிபி, பஞ்சாப் ஆகிய அணிகள் ஏற்கெனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டன.  IPL 2025: 4வது அணி எது? இன்னும் ஒரே ஒரு இடத்திற்கு மட்டும் மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே கடுமையான மோதல் நிலவுகிறது. நாளை (மே 21) மும்பையில் நடைபெறும் இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் மும்பை வெற்றிபெற்றால், … Read more

இல்ல, நமக்கு சரியா விளங்கல..

இல்ல, நமக்கு சரியா விளங்கல.. சிறப்பு கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் பல்வேறு மாநிலங்களில் 25 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார் 23 வயது அனுராதா பஸ்வான். அதுவும் ஏழே மாதங்களில்.. உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பீகார், மத்திய பிரதேசம் என சூறாவளியாய் சுழன்று ஆண்களை வீழ்த்தியிருக்கிறார். மணம் முடிந்து அதிகபட்சம் இரண்டு முதல் ஐந்து நாட்கள் வரை ‘குடும்பம்’ நடத்திவிட்டு பணம் நகை மற்றும் விலை உயர்ந்த பொருட்களுடன் எஸ்கேப். பெரும்பாலான திருமணங்கள் அவசர கதியில் நடத்தப்பட்டாலும் சந்தேகம் … Read more

வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான மனுக்கள்: சுப்ரீம் கோர்ட்டில் காரசார விவாதம்

புதுடெல்லி, வக்பு திருத்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. கடந்த 5-ந்தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதலுடன் சட்டம் ஆனது. அந்த சட்டத்தை செல்லாது என்று அறிவிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க., த.வெ.க. உள்ளிட்ட கட்சிகளும், தொண்டு நிறுவனங்களும் என 70-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் கடந்த மாதம் 17-ந்தேதி நடந்த விசாரணையின்போது 5 மனுக்களை மட்டும் விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது. இதனையடுத்து இந்த வழக்கை கடந்த 15-ந் … Read more

ஐ.பி.எல்-ல் அசத்தும் கே.எல்.ராகுல்… இந்திய அணியில் இடம் பெற வாய்ப்பு..? – வெளியான தகவல்

புதுடெல்லி, 10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் பெங்களூரு, குஜராத், பஞ்சாப் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன. லக்னோ, கொல்கத்தா, சென்னை, ராஜஸ்தான், ஐதராபாத் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின. மீதமுள்ள ஒரு இடத்திற்கு மும்பை மற்றும் டெல்லி இடையே போட்டி நிலவுகிறது. நடப்பு ஐ.பி.எல். தொடரில் டெல்லி அணிக்காக ஆடி வரும் கே.எல்.ராகுல் … Read more

"விசா முடிந்தும் வெளியேறாவிட்டால்.." – இந்தியர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு, நாட்டில் வசித்து வரும் வெளிநாட்டவர்களின் பல்வேறு உரிமைகள், சலுகைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், விசா முடிந்தும் வெளியேறாவிட்டால் நாடு கடத்தப்படுவீர்கள் என இந்தியர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி விசா காலத்தை விட அதிகமாக தங்கியிருப்பது நாடுகடத்தலுக்கும், விசா முடிந்தும் வெளியேறாத இந்தியர்களுக்கு மீண்டும் அமெரிக்காவுக்கு வர நிரந்தர தடை விதிக்கப்படும் என்றும் அமெரிக்கா அரசு எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் … Read more