LeT தலைவரின் நெருங்கிய கூட்டாளி… அமீர் ஹம்சாவை சுட்ட மர்ம நபர்கள்… யார் இவர்?

Amir Hamza Attacked: லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் இணை நிறுவனரான அமீர் ஹம்சா இன்று பாகிஸ்தானில் சுடப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Qatar: 'ட்ரம்புக்கு ஜெட் வழங்கியது லஞ்சமா?' – விமர்சனங்கள் குறித்து கத்தார் பிரதமர் விளக்கம்!

சமீபத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கத்தார் சென்றிருந்தார். அங்கு கத்தாரின் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானியைச் சந்தித்துப் பேசினார். அப்போது அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு 400 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஜெட் அன்பளிப்பாக வழங்கவிருப்பதாகத் தெரிவித்தார். தொடர்ந்து, “நட்பு நாடுகளுக்கு இடையே நடக்கும் இது போன்ற அன்பளிப்பெல்லாம் ஒரு சாதாரண விஷயம்” எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த விவகாரம் இரு நாடுகளிலும் பேசுபொருளானது. இது குறித்து விளக்கமளித்த ட்ரம்ப், “இப்படிப்பட்ட பரிசை முட்டாள் … Read more

மதுரை அருகே கனமழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழப்பு

மதுரை: திருப்பரங்குன்றம் அருகே கனமழை காரணமாக வீட்டுதிண்ணையின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். மதுரை திருப்பரங்குன்றம் அருகேயுள்ள வலையங்குளம் பகுதியில் திங்கள்கிழமை இரவு கனமழை பெய்தது. அந்த சமயத்தில் முத்தாலம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த அம்மாபிள்ளை (65), அவரது பேரன் வீரமணி (10) மற்றும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த வீரணன் மனைவி வெங்கட்டி (55) ஆகியோர் அம்மாபிள்ளையின் வீட்டு திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். எதிர்பாராதவிதமாக திண்ணையின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில் 3 … Read more

யூடியூபர் ஜோதியிடம் என்ஐஏ, ஐபி அதிதீவிர விசாரணை: அதிகாரிகள் சொல்வது என்ன?

புதுடெல்லி: பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஹரியானா யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவிடம் தேசிய புலனாய்வு அமைப்பு, புலனாய்வுப் பிரிவு மற்றும் ராணுவ புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜோதியின் நிதி பரிவர்த்தனைகள் மற்றும் பயண விவரங்கள் குறித்தும் அதிதீவிர விசாரணை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘டிராவல் வித் ஜோ’ என்ற யூடியூப் சேனலை நடத்தி வந்த ஹிசாரைச் சேர்ந்த ஜோதி மல்ஹோத்ரா (33), பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் மே 16 … Read more

விஜய் ஆண்டனி நடிப்பில், உருவாகும் புதிய படம் “லாயர்”

விஜய் ஆண்டனி நடிப்பில், “ஜென்டில்வுமன்” பட இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன் இயக்கும் “லாயர்” டைட்டில் லுக் வெளியானது.

தவெக: யாருடன் கூட்டணி.. ஆதவ் ஆர்ஜுனா சொல்வது என்ன?

திமுக, பாஜகவுடன் கூட்டணி இல்லை என தவெக தலைவர் விஜய் ஏற்கெனவே தெரிவித்தார் என்றும் அந்த நிலைபாட்டில் அவர் தெளிவாக உள்ளார் என்றும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். 

ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனை.. தவிர்ப்பாரா ரிஷப் பண்ட்!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சிறப்பாகவே விளையாடி வந்தது. விளையாடிய 6 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்று டாப் 4 அணிகளில் இருந்துக்கொண்டு வந்தது. ஆனால் தொடரின் பாதிக்கு பிறகு இது அனைத்தும் தலைகீழாக மாறியது. அடுத்த 6 போட்டிகளில் வெறும் 1 வெற்றியை மட்டுமே பதிவு செய்து, தற்போது தொடரில் இருந்து எலிமினேட் ஆகி உள்ளது.  இதற்கு அந்த அணியில் இருக்கும் ஒரு சில வீரர்களை தவிர்த்து மற்ற வீரர்களின் … Read more

ரோபோ மருத்துவர்கள் : AI மூலம் இயங்கும் உலகின் முதல் மருத்துவமனை சீனா அறிமுகம்

உலகின் முதல் முழுமையாக AI மூலம் இயங்கும் மருத்துவமனையை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மருத்துவ பாதுகாப்பில் அடுத்த அத்தியாயத்தை துவக்கியுள்ளதுடன் மருத்துவக் கல்வியில் ஒரு குறிப்பிடத்தக்க புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏஜென்ட் மருத்துவமனை என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த மருத்துவமனை முற்றிலும் செயற்கை நுண்ணறிவால் பணியாற்றும் ஒரு மெய்நிகர் மருத்துவ வசதி கொண்டது. இந்த AI மருத்துவமனை நவீன மருத்துவத்தை மறுவரையறை செய்யக்கூடிய ஒரு நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. சிங்குவா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்ட இந்த முயற்சி, ஒரு … Read more

நீதித்துறை பணிக்கு 3 ஆண்டு கால பணி அனுபவம் கட்டாயம்: சுப்ரீம் கோர்ட்டு

புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட்டு இன்று வெளியிட்ட தீர்ப்பு ஒன்றில், முன்சீப், மாஜிஸ்திரேட் போன்ற நீதித்துறை பணிகளுக்கு விண்ணப்பிக்க 3 ஆண்டு வழக்கறிஞர் அனுபவம் கட்டாயம் என தெரிவித்து உள்ளது. 2002-ம் ஆண்டில் இந்த விதியில் தளர்வு அறிவிக்கப்பட்டது. இந்த தளர்வின்படி, புதிதாக சட்டப்படிப்பு படித்தவர்களும் இந்த பதவிகளுக்கு போட்டியிடலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அப்போது, புதிதாக பணியில் சேர்பவர்களுக்கு குறைந்தபட்சம் ஓராண்டு சிறந்த பயிற்சி வழங்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது. 3 ஆண்டு கால அனுபவம் என்பது … Read more

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: தகுதி சுற்றில் வெற்றி கண்ட ஸ்ரீகாந்த்

கோலாலம்பூர், பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்ட மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் இன்று தொடங்கியது. இந்த தொடர் வரும் 25ம் தேதி வரை நடக்கிறது. இந்த தொடரில் இன்று தகுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற தகுதி சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், தைவானின் ஹூவாங் யு காய் உடன் மோதினார். இந்த போட்டியின் முதல் செட்டை 9-21 என்ற … Read more