கார் விபத்தில் அதிமுக முன்னாள் எம் எல் ஏ ராசு படுகாயம்’

புதுக்கோட்டை நேற்றிரவு நடந்த கார் விபத்தில் சிக்கிய அதிமுக முன்னாள் எம் எல் ஏ ராசு படுகாயம் அடைந்துள்ளார். தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் பங்கேற்பதற்காக முன்னாள் அமைசர் சி விஜயபாஸ்கர் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது கெண்டையன்பட்டி அருகே முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் காரை பின்தொடர்ந்து சென்ற கார் விபத்தில் சிக்கியது. அதாவது முன்னாள் எம்எல்ஏ நெடுஞ்செழியன் சென்ற கார், மீன் வியாபாரி … Read more

'மிகவும் மோசமான அனுபவம்..'- இந்திய ரெயில் பயணம் குறித்து அமெரிக்க சுற்றுலா பயணி வீடியோ

லக்னோ, அமெரிக்காவை சேர்ந்த நிக் மேடாக் என்பவர் உலகின் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டு, தனது அனுபவங்களை இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார். அந்த வகையில், இந்தியாவிற்கு சுற்றுலா வந்திருந்த நிக் மேடாக், உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து மேற்கு வங்காள மாநிலம் நியூ ஜல்பைகுரி வரை செல்லும் ரெயிலில் 3-ம் வகுப்பு ஏ.சி. பெட்டியில் பயணம் செய்துள்ளார். இந்த பயணம் குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை … Read more

பாக். ராணுவ தளபதியுடன் ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி சந்திப்பு

லாகூர், ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள சுற்றுலா தலத்தில் கடந்த மாதம் 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டண்ட் பிரண்ட் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா , பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ளது. போர் பதற்றத்தை தணிக்க பல்வேறு நாடுகள் … Read more

மணல் லாரிகளை இயக்காமல் மே 23 முதல் காத்திருப்பு போராட்டம்: உரிமையாளர்கள் அறிவிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் வரும் 23-ம் தேதி முதல் மணல் லாரிகள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் யுவராஜ் வெளியிட்ட அறிக்கை: தமிழகம் முழுவதும் இயங்கி வந்த அரசு மணல் குவாரிகளிலும் அரசு மணல் விற்பனை கிடங்குகளிலும் முறைகேடு நடந்ததாக கடந்த 2023-ம் ஆண்டு செப்.12-ம் தேதி அமலாக்கத் துறையினர் சோதனையிட்டு வழக்கு பதிவு செய்தனர். அப்போது முதல் அனைத்து அரசு மணல் விற்பனை கிடங்குகளும் கடந்த … Read more

‘பயங்கரவாதத்தை ஒழிக்க பிரதமர் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவு’ – தேவகவுடா உறுதி

புதுடெல்லி: பயங்கரவாதத்தை ஒழிக்க பிரதமர் நரேந்திர மோடி எத்தகைய நடவடிக்கைகளை எடுத்தாலும் அதற்கு எங்கள் ஆதரவு உண்டு என்று முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான ஹெச்.டி. தேவகவுடா உறுதிபட தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தேவகவுடா, “ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளைக் கொன்ற பயங்கரவாதிகளுக்கு எதிராக பிரதமர் உறுதியான முடிவை எடுத்துள்ளார். எந்த நடவடிக்கையும் எடுக்க ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளித்துள்ளார். கடினமான நடவடிக்கைகளை எடுத்ததற்காக பிரதமரை நான் வாழ்த்துகிறேன். பயங்கரவாதத்தை ஒழிக்க … Read more

 மதுரை எம் பி வெங்கடேசன் இந்திய ரயில்வேக்கு கண்டனம்

மதுரை மதுரை எம் பி வெங்கடேசன் இந்திய ரயில்வேக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அண்மையில் இந்திய ரயில்வே நிர்வாகம் பயணக் கட்டுரைகளுக்கான போட்டியை அறிவித்துள்ளது. ஆனால் இந்த போட்டியை இந்தியில் மட்டும்தான் எழுத வேண்டும் என்ற விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். சு வெங்கடேசன் எம் பி,எக்ஸ் தளத்தில் ”இந்திய ரயில்வேயா? இந்தி ரயில்வேயா? இந்திய ரயில்வே பயணக் கட்டுரைகளுக்கான போட்டியை அறிவித்துள்ளது. ஆனால் இந்தியில்தான் எழுதப்பட வேண்டும் என்று நிபந்தனை. இவர்களின் நோக்கம் … Read more

உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றிய இருவர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்பு

சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றிய 2 பேர் நிரந்தர நீதிபதிகளாக நேற்று பதவியேற்றுக் கொண்டனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வந்த சி.குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார். அதன்படி சக நீதிபதிகள் முன்னிலையில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், அவர்களுக்கு நி்ரந்தர நீதிபதிகளாக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இவர்கள் இருவரும் கடந்த 2023-ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டிருந்தனர். கடந்த … Read more

பஹல்காம் தாக்குதல் எதிரொலி | பாக்லிஹார் அணையிலிருந்து பாக். செல்லும் தண்ணீர் நிறுத்தம்

புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து சிந்து நதியில் இருந்து பாகிஸ்தானுக்குச் செல்லும் தண்ணீர் நிறுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்த நிலையில், செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாக்லிஹார் அணையில் இருந்து பாகிஸ்தானுக்குச் செல்லும் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்குள் சிந்து நதி நீர் தடையின்றி செல்வதற்காக இரு நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்படுவதாக … Read more

மோடி- பாதுகாப்புத்துறை செயலர் சந்திப்பு

டெல்லி இன்று பிரதமர்  மோடி பாதுகாப்பு செயலரை  சந்தித்துள்ளார். கடந்த 22 ஆம்ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில், 26 சுற்றுலாப் ணிகள் கொல்லப்பட்டனர். இதை தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்தியா  பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பாதுகாப்புத்துறை உயரதிகாரிகளுடன் பிரதமர் மோடி தொடர்ந்து … Read more

தமிழகத்தில் கோடை மழையால் தணிந்தது வெப்பம்: 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

கோடை மழையால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக வெப்பம் தணிந்துள்ளது. கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென் தமிழகம், அதை ஒட்டிய பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தென்னிந்திய பகுதிகளின்மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு – மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, … Read more