அகதிகள் பிரச்சனையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலையிட வேண்டும்: மார்க்சிஸ்ட்

சென்னை: “தர்ம சத்திரம், இன்னொரு நாட்டுக்கு போ என்பதெல்லாம் சட்டத்துக்கும், மனித மாண்புகளுக்கும் கொஞ்சமும் பொருந்தாத வார்த்தைகள்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிருப்தி தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “இலங்கை தமிழர் ஒருவர் தன் குடும்பத்தினர் நோய் வாய்ப்பட்டிருப்பதாகவும், இலங்கைக்கு சென்றால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அதனால் இந்தியாவில் தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தை நாடியிருந்த வழக்கில் நீதிமன்றத்தின் வார்த்தைகள் மனிதாபிமானமற்ற தன்மையுடன் … Read more

அட்டாரி – வாகா எல்லையில் மீண்டும் கொடியிறக்க நிகழ்வு – மே 21 முதல் பொது மக்களுக்கு அனுமதி

அட்டாரி: போர் பதற்றம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்திய – பாகிஸ்தான் எல்லைகளின் மூன்று நிலைகளில் நடத்தப்படும் கொடியிறக்க நிகழ்வு (Retreat ceremony) இன்று மாலை முதல் மீண்டும் தொடங்கும் எனவும், நாளை முதல் பொதுமக்கள் இதனைக் காண அனுமதிக்கப்படுவர் என்றும் எல்லைப் பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது. பஞ்சாப்பின் ஜலந்தர் நகரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் எல்லைப் பாதுகாப்புப் படைப்பிரிவு, “இந்த பின்வாங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை மாலை முதல் மீண்டும் நடைபெறும். இன்று ஊடகங்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. … Read more

Zee News மீது சைபர் தாக்குதல் முயற்சி முறியடிப்பு – பாகிஸ்தானுக்கு நோஸ் கட்!

Cyber Attack on Zee News: நமது ஜீ நியூஸ் ஊடகத்தின் மீது பாகிஸ்தான் மேற்கொண்ட நேரடி சைபர் தாக்குதல் முற்றிலும் முறியடிக்கப்பட்டுள்ளது.  

துளசி கழுத்தில் தாலி.. லக்ஷ்மிக்கு காத்திருந்த அதிர்ச்சி, அடுத்து நடந்தது என்ன? – கெட்டிமேளம் இன்றைய எபிசோட் அப்டேட்

Kettimelam Today’s Episode Update: முருகன் லக்ஷ்மியை கடைக்கு கூட்டி செல்ல அப்போது கையில் காப்பு இருப்பதை கவனித்து இது என்னடா புதுசா இருக்கு என்று கேட்கிறாள். முருகன் ரேவதி வாங்கி கொடுத்ததாக சைகையில் சொல்கிறான். பிறகு ரேவதிக்காக ஒரு கொலுசு எடுத்து கொடுக்க சொல்லி கேட்க லட்சுமி ஒரு கொலுசை தேர்வு செய்து கொடுக்கிறாள். 

முன்னாள் அதிபருக்கு தீவிர புற்று நோய் : இந்நாள் அதிபர் துயரம்

வாஷிங்டன் அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன் தீவிர புற்று நோயால் பாதிக்கப்பட்டதற்கு இந்நாள் அதிபர் டிரம்ப் துயரம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடன் (வயது 82) கடந்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் முன்கூட்டியே போட்டியிலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக போட்டியிட்ட துணை அதிபர் கமலா ஹாரிஸ், தற்போதைய அதிபர் டிரம்பிடம் தோல்வி அடைந்தார். 4 ஆண்டு பதவிக்காலத்திலேயே பைடனின் உடல் நலம் மற்றும் அவரது வயது மிகுந்த விவாதப் பொருளாக இருந்து … Read more

பஞ்சாப் பொற்கோவிலில் வான் பாதுகாப்பு அமைப்பு அமைக்க அனுமதி

சண்டிகர், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா தலத்தில் கடந்த மாதம் 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டஸ் பிரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த 7ம் தேதி பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை … Read more

இந்தோனேசியாவில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்து 19 தொழிலாளர்கள் பலி

ஜகர்த்தா, தெற்காசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேசியா அதிக அளவில் கனிம வளங்கள் கொண்டது. ஆசிய நாடுகளிலேயே தங்க உற்பத்தியில் முன்னணி நாடாக இருந்து வருகிறது. கடந்த 2024-ம் ஆண்டு இந்தோனேசியாவில் இருந்து மட்டும் சுமார் 100 டன் அளவில் உலக நாடுகளுக்கு தங்கம் ஏற்றுமதி ஆனது. வடக்கு சுலேவேசியில் உள்ள டோகா திண்டுங் தங்க சுரங்கம் மிகப்பெரிய தங்க சுரங்கங்களில் ஒன்றாகும். மேலும் கிழக்கு ஜாவாவில் உள்ள சும்பெராகுங் தங்க சுரங்கம், தும்பாங் தங்க சுரங்கம் என … Read more

4 மனைவிகள், 38 விமானங்கள்… உலகின் பணக்கார மன்னரின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா?

World Richest King: உலகின் மிகப் பணக்கார மன்னர் தற்போது யார், அவரின் சொத்து மதிப்பு என்ன என்பதை இங்கு அறிந்துகொள்ளலாம். 

டெல்லி செல்வதாகத்தான் சொன்னார்; ஆனால் பாகிஸ்தான் சென்றது பற்றி… – யூடியூபர் ஜோதியின் தந்தை தகவல்

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக ஹரியானாவைச் சேர்ந்த ஜோதி மல்ஹோத்ரா என்ற பெண் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். யூடியூப் சேனல் நடத்தும் அவர் பாகிஸ்தான் தூதர அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததோடு, பாகிஸ்தானுக்கும் மூன்று முறை சென்று வந்ததாகவும் கைது செய்தபின் அதிகாரிகள் தெரிவித்தனர். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜோதி மல்ஹோத்ராவின் தந்தை ஹரீஷ் மல்ஹோத்ரா இது குறித்து அளித்த பேட்டியில்,”என் மகள் டெல்லி செல்வதாகச் சொல்லிவிட்டுதான் சென்றார். அவர் எங்களிடம் எதையும் பகிர்ந்து … Read more

சிங்கம்புணரி அருகே குவாரியில் கல் சரிந்து 5 பேர் உயிரிழப்பு?

சிங்கம்புணரி: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கல் குவாரியில் கல் சரிந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டையில் தனியார் கல் குவாரி இயங்கி வருகிறது. இன்று காலை குவாரி பள்ளத்தில் கல் சரிந்ததில் 7 பேர் சிக்கி கொண்டனர். இவர்களில் 3 பேர் புதைந்தனர். மேலும் 4 பேர் மீட்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் 2 பேர் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் … Read more