பொற்கோயிலில் வான்பாதுகாப்பு அமைப்பை நிறுவ அனுமதி – பாக். ட்ரோன்களை எதிர்கொள்ள நடவடிக்கை!

அமிர்தசரஸ்: பாகிஸ்தானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைத் தாக்குதலை எதிர்கொள்வதற்காக அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலின் புனித வளாகத்தினுள் வான்பாதுகாப்பு அமைப்பினை நிறுவ கோயிலின் தலைமை கிராந்தி சிறப்பு அனுமதி வழங்கியுள்ளதாக ராணுவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவால் தொடங்கப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பின்பு பொற்கோயிலைக் குறிவைத்து பாகிஸ்தான் பலமுறை ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ராணுவ அதிகாரி ஒருவர் உறுதிபடுத்தினார். ராணுவ வான்பாதுகாப்பு இயக்குநர் ஜெனரல் சுமர் இவான் டி … Read more

எங்கள் பிரிவுக்கு அவரே காரணம்: ஆர்த்தி ரவி பரபரப்பு அறிக்கை

எங்கள் பிரிவுக்கு 3வது நபரே காரணம் என ஆர்த்தி ரவி அறிக்கை வெளியிட்டுள்ளது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா? தமிழகத்தில் இந்த 3 மாவட்டங்களில் பாதிப்பு அதிகம்?

கொரோனா பற்றிய சமீபத்திய தகவல்கள் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் மீண்டும் கொரோனா தொற்றுநோய்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது.

CSK புள்ளிப்பட்டியலில் முன்னேற இதுதான் ஒரே வழி..

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மிகவும் மோசமாக விளையாடி உள்ளது சென்னை சூப்பர் கிப்ஸ் அணி. அந்த அணி விளையாடிய 12 போட்டிகளில் வெறும் 3ல் மட்டும் வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. சென்னை அணி பிளே ஆஃப் சுற்றைவிட்டு வெளியேறிய நிலையில், தொடரை முடிக்கும்போது, குறைந்தபட்சம் கடைசி இடத்தில் முடிகாமலாவது இருக்க வேண்டும் என அந்த அணியின் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.  சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் மீதமுள்ளன. ஒன்று ராஜஸ்தானுடனும், … Read more

ஆதார் தரவுகளை எப்படி பாதுகாப்பது? ஆன்லைனில் இப்படி ‘லாக்’ செய்தால் போதும்

Aadhaar Card: இந்திய குடிமக்களுக்கு ஆதார் அட்டை மிக முக்கியமான ஒரு அடையாள ஆவணமாக உள்ளது. ஆகையால், இதில் உள்ள தகவலை சரியாகவும் பாதுகாப்பாகவும் வைப்பது மிக அவசியமாகும்.  உங்கள் ஆதார் தகவல்கள், ஆதார் அட்டை விவரங்கள் திருடப்படக்கூடும் அல்லது கசியக்கூடும் என்ற கவலை உங்களுக்கு உள்ளதா? ஆதார் அட்டையின் பாதுகாப்பை உறுதி செய்ய விரும்புகிறீர்களா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். இப்போது உங்கள் ஆதாரை டிஜிட்டல் முறையில் லாக் செய்ய முடியும். … Read more

நாளை ரயில்கள் நேரம் மாற்றம்

சென்னை நாளை சில ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”திருவனந்தபுரம் கோட்டத்தில் காயங்குளம் யார்டில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் வண்டி எண்: 16127 சென்னை எழும்பூர்- குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) சென்னை எழும்பூரில் இருந்து காலை 10.20 மணிக்கு புறப்பட்டு வழியில் வசதியான இடத்தில் 45 நிமிட நேரம் நிறுத்தப்படும். வண்டி எண்: 16187 காரைக்கால்- எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் மே 24ந்தேதி காரைக்காலில் இருந்து மாலை … Read more

பொலிரோ, பொலிரோ நியோ என இரண்டிலும் போல்டு எடிசனை வெளியிட்ட மஹிந்திரா

மஹிந்திரா நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற பொலிரோ மற்றும் பொலிரோ நியோ என இரு வாகனங்களிலும் போல்டு எடிசன் என்ற பெயரில் கூடுதல் ஆக்செரீஸ் வசதிகளை பெற்றதாக விற்பனைக்கு கிடைக்க துவங்கியுள்ளது.  வழக்கமான மாடலை விட கூடுதலாக ஆக்செரீஸ் சேர்க்கப்பட்டுள்ள பொலிரோ மற்றும் பொலிரோ நியோவில் எவ்விதமான எஞ்சின் மற்றும் வசதிகள் சார்ந்தவற்றில் எந்த மாற்றமும் இல்லாமல் அமைந்துள்ளது. Mahindra Bolero Bold Edition வழக்கமான மாடலில் இருந்து வேறுபடுத்தி டிசைன் வடிவமைப்பினை கொண்ட புதிய போல்டு பொலிரோ … Read more

“25 ஆண்டுகள் கிடப்பில் உள்ள பாதாள சாக்கடை திட்டம்..'' – வெள்ளி விழா கேக் வெட்டிய சி.பி.ஐ கட்சி!

புனித தலமாக விளங்கும் ராமேஸ்வரத்திற்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அமாவாசை தினங்கள் மற்றும் முக்கிய திருவிழா நாள்களின் போதும், கோடை விடுமுறையின் போதும் இந்த எண்ணிக்கை லட்சத்தை தொடும். இதையொட்டி கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் நூற்றுக்கணக்கான தனியார் தங்கும் விடுதிகள் உருவாகின. இவ்வாறு உருவாகியுள்ள தங்கும் விடுதிகள், உள்ளூரில் வசிக்கும் மக்களின் வீடுகளில் பயன்படுத்தும் கழிவு நீர்கள் உள்ளிட்டவை நேரடியாக அக்னி தீர்தகடலில் விடப்படுகிறது. மேலும் கோயிலில் … Read more

இட ஒதுக்கீட்டால் சமுதாயங்கள் பெற்ற பலன்கள் குறித்து வெள்ளை அறிக்கை – அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: இட ஒதுக்கீடு மூலம் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்பில் எவ்வளவு பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது என்பது குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் தன்னாட்சி உரிமை, மத்திய, மாநில அரசுகளின் உறவுகளை மேம்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைப்பதற்காக உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில் … Read more

''சிவில் நீதிபதிக்கான தேர்வு எழுத 3 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றியிருக்க வேண்டும்'': உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: நீதித்துறைப் பணியில் சேர குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்றியிருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதிகள் ஏ.ஜி. மசிஹ் மற்றும் கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பில், “சிவில் நீதிபதிகள் (ஜூனியர் பிரிவு) தேர்வு எழுதுவதற்கு குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் வழக்கறிஞராக பயிற்சி தேவை என்று நாங்கள் கருதுகிறோம்” என்று தெரிவித்துள்ளனர். இருப்பினும், இந்த உத்தரவு நடந்து கொண்டிருக்கும் நீதித்துறை ஆட்சேர்ப்புக்கு … Read more