யோகாவில் ஆந்திரா உலக சாதனை படைக்க வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு

அமராவதி, ஆந்திர பிரதேச மாநிலம் அமராவதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 58 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி பேசினார். அவர் அமராவதியில் நடந்த பொது கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது, ஆந்திரா சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்றும் வளர்ச்சிக்கான சரியான வேகத்தில் செல்கிறது என்றும் நம்பிக்கை வெளியிட்டார். அவர் தொடர்ந்து பேசும்போது, நாட்டின் முக்கிய நிகழ்ச்சியான ஜூன் 21-ஐ சர்வதேச யோகா நாளாக கடைப்பிடிக்க அழைப்பு விடுத்த ஆந்திர பிரதேசத்தின் … Read more

சி.எஸ்.கே போல ராஜஸ்தானும் இந்த தவறை செய்துவிட்டது – ஆஸி. முன்னாள் வீரர் விமர்சனம்

மும்பை, 10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 50 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின. இந்நிலையில், சி.எஸ்.கே. மெகா ஏலத்தில் தவறு செய்தது போல ராஜஸ்தானும் தவறு செய்ததே அந்த அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணம் … Read more

பயங்கரவாதம் எங்கள் நாட்டின் துரதிர்ஷ்டமான வரலாறு – பாகிஸ்தான் முன்னாள் மந்திரி பேட்டி

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் ராணுவ மந்திரி கவாஜா ஆசிப், சமீபத்தில் அளித்த பேட்டியில், பயங்கரவாத அமைப்புகளுடன் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருந்தது என்றும், நிதி உதவி அளித்தது உண்மை என்றும் ஒப்புக்கொண்டுள்ளார். இந்தநிலையில் பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியும் பெனாசிர் பூட்டோவின் மகனுமான பிலாவல் பூட்டோ (35) அளித்த பேட்டியில் கூறியதாவது:- பாகிஸ்தான் கடந்த காலத்தில் பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்து இருந்தது என்பதில் ரகசியம் எதுவும் கிடையாது. அந்த தொடர்பின் காரணமாக பாகிஸ்தான் கடுமையாக பாதிக்கப்பட்டது. அப்படி பாதிக்கப்பட்டதால் நாங்கள் … Read more

டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் எக்ஸ்குளூசிவ் எடிசன் சிறப்புகள் | Automobile Tamilan

விற்பனையில் உள்ள ZX(O) வேரியண்ட்டை விட ரூ.1.24 லட்சம் விலை அதிகரிக்கப்பட்டு ரூ.32.58 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் இன்னோவா ஹைகிராஸ் எக்ஸ்குளூசிவ் எடிசனை டூயல் டோன் கொண்டதாக டொயோட்டா வெளியிட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள புதிய எக்ஸ்குளூசிவ் எடிசன் சிறப்புகள்..! மே முதல் ஜூலை 2025 வரை மட்டும் கிடைக்க உள்ளது. வெள்ளை நிறத்தில் சூப்பர் வெள்ளை, பேரல் வெள்ளை இரு நிறங்களுடன் மேற்கூறை கருப்பு நிறத்தை பெற்றதாக அமைந்துள்ளது. கிரில், கார்னிஷ், வீல் ஆர்ச் உட்பட ஒரு சில … Read more

சாதி சான்றிதழ்கள் விவகாரத்தில் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: முழுமையான விசாரணைக்குப்பிறகே சாதிச் சான்றிதழ்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலி சாதிச் சான்றிதழ்கள் அளித்து வேலைவாய்ப்பு பெற்றதாக குற்றச்சாட்டுக்குள்ளான ஊழியர்களின் சாதி சான்றிதழ்களின் உண்மைத்தன்மை குறித்த விசாரணையை குறித்த காலத்துக்குள் முடிக்க மாநில அளவிலான குழுவுக்கு உத்தரவிடக்கோரி பாங்க் ஆப் பரோடா வங்கி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு … Read more

பஹல்காம் தாக்குதல்: உச்ச நீதிமன்ற உத்தரவால் நாடு கடத்தப்படுவதில் இருந்து தப்பித்த பாக். குடும்பம்!

புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு நாடுகடத்தப்பட இருந்த 6 பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் ஆவணங்களை சரிபார்க்குமாறு அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அகமது தாரெக் பட் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தாங்கள் காஷ்மீரில் வசித்து வருவதாகவும், தங்கள் மகன் பெங்களூருவில் பணிபுரிவதாகவும் ஆனால், விசா காலம் முடிந்துவிட்டதாகக் கூறி வாகா எல்லை வழியாக பாகிஸ்தானுக்கு நாடு கடத்த அதிகாரிகள் தங்களை தடுத்து வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த … Read more

ரசவாதி: அர்ஜுன் தாஸுக்கு `தாதா சாகேப் பால்கே' திரைப்பட விழாவில் சிறந்த நடிகர் விருது!

ரசவாதி திரைப்படத்துக்காக 15-வது தாதா சாகேப் பால்கே திரைப்படவிழாவில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெறுகிறார் நடிகர் அர்ஜுன் தாஸ். திரைப்படத் துறையினர் மற்றும் விமர்சகர்களால் பாராட்டப்பட்ட ரொமாண்டிக் – டிராமா திரைப்படம் ரசவாதி. இந்த படத்துக்காக அர்ஜுன் தாஸ் பெறும் 3-வது விருது இதுவாகும். ரசவாதி இந்த விருது குறித்த செய்தியை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார் இயக்குநர் சாந்த குமார், “ரசவாதி திரைப்படத்தில் சதாசிவம் பாத்திரத்துக்காக தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான … Read more

இமாசல பிரதேசம்: அரசு அலுவலகங்களில் நாளை குண்டு வெடிக்கும் என மிரட்டல்

குல்லு, இமாசல பிரதேசத்தின் குல்லு மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்து இன்று மாலை இ-மெயில் வந்துள்ளது. இதன்படி, அடுத்த 24 மணிநேரத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடப்பட்டு உள்ளது என குல்லு மாவட்ட பேரிடர் மேலாண் கழக தலைவர் தெரிவித்து உள்ளார். இதனை தொடர்ந்து, போலீசார் உள்பட அனைத்து அதிகாரிகளும் உஷார்படுத்தப்பட்டனர். குல்லு முழுவதும் வெடிகுண்டு செயலிழப்பு … Read more

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை கைப்பற்ற வேண்டும்: வங்காளதேச முன்னாள் ராணுவ தலைவர் சொல்கிறார்

டாக்கா, ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலையடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் வங்காளதேசத்தில் செயல்பட்டு வரும் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸுக்கு நெருக்கமானவரும் வங்கதேச ராணுவ ரைபிள்ஸ் படையின் முன்னாள் தலைவருமான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஏ.எல்.எம். பஸ்லுர் ரஹ்மான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார். பஸ்லூர் ரஹ்மான் கூறுகையில், “பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால், இந்தியாவின் 7 வடகிழக்கு மாநிலங்களையும் வங்கதேசம் ஆக்கிரமிக்க … Read more

மருத்துவமனை இணைப்பு கட்டிடங்கள் கட்டுவதற்கு ரூ.119 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை

தமிழகத்தில் ஒருங்கிணைந்த சுகாதார ஆய்வகங்கள், மருத்துவமனை இணைப்புக் கட்டிங்கள் கட்ட ரூ.119 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதுதொடர்பாக அரசாணைகளில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் இணைப்புக் கட்டிடங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக தேசிய சுகாதாரத் திட்ட இயக்குநர் ஆய்வு செய்து அரசுக்கு சில பரிந்துரைகளை அனுப்பியிருந்தார். அதன்படி, அதில் 7 மருத்துவமனைகள் ஊரக வளர்ச்சி இயக்குநரகத்துக்கு கீழும், 11 மருத்துவமனைகள் நகராட்சி ஆணையரகத்தின் கீழும் வருகின்றன. அங்கு பொதுப்பணித்துறை மூலம் … Read more