மலிவானது Samsung Galaxy S24 Ultra விலை, உடனே ஆர்டர் செஞ்சி வாங்கிடுங்க

Samsung Galaxy S24 Ultra Discount: சாம்சங்கின் மிகவும் விலையுயர்ந்த போன்களில் ஒன்று தான் Samsung Galaxy S24 Ultra. இந்த Samsung Galaxy S24 Ultra ஸ்மார்ட்போனை நீங்கள் வாங்க விரும்பினால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது. இந்த நேரத்தில், இந்த தொலைபேசியின் விலையில் மிகப்பெரிய குறைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சாதனத்தை நீங்கள் அமேசான் நிறுவனத்தில் இருந்து மிகக் குறைந்த விலையில் வாங்கலாம். இந்த விலையில் இந்த ஸ்மார்ட்போனை வாங்க இது ஒரு சிறந்த … Read more

ரூ. 457 கோடியில் காவலர் குடியிருப்புகள் மற்றும் சிறைச்சாலை கட்டிடங்கள்: அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை:  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று ரூ. 457 கோடி மதிப்பீட்டில் காவலர் குடியிருப்புகள் மற்றும் சிறைச்சாலை கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். செனையில் இன்று நடைபெற்ற நிகர்ச்சயில்,  காவல்துறை சார்பில் கட்டப்படவுள்ள 1,118 காவலர் குடியிருப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினர். மேலும்,  சென்னை ஆயிரம் விளக்கு மற்றும் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ரூ.457 கோடியே 14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள 1,118 காவலர் குடியிருப்புகளுக்கு காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். இதனை தொடர்ந்து … Read more

மாலத்தீவில் ரூ. 55 கோடி மதிப்பீட்டிலான திட்டங்களை மேற்கொள்ளும் இந்தியா; ஒப்பந்தம் கையெழுத்து

டெல்லி, இந்தியாவின் அண்டை நாடு மாலத்தீவு. அரபிக்கடலில் அமைந்துள்ள தீவுநாடான மாலத்தீவுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான உறவில் கடந்த ஆண்டு பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து, இரு நாடுகளும் மேற்கொண்ட பேச்சுவார்த்தையையடுத்து இருநாட்டு உறவும் மீண்டும் சுமூக நிலைக்கு திரும்பியது. இதையடுத்து, இரு தரப்பு வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் மேலும் வளர்ச்சியடைந்தது. அதேபோல், மாலத்தீவுக்கு இந்தியா நிதியுதவியுடன் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மாலத்தீவில் 55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திட்டங்களை இந்தியா மேற்கொள்ள இருநாடுகளுக்கும் இடையே … Read more

ஐ.பி.எல். வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த சுப்மன் கில் – சாய் சுதர்சன் ஜோடி

புதுடெல்லி, 10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று இரவு டெல்லி அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நடந்த 60-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் குவித்தது. லோகேஷ் ராகுல் 112 ரன்களுடனும், டிரிஸ்டான் … Read more

பாகிஸ்தானில் லஷ்கர் பயங்கரவாதி மர்ம நபர்களால் சுட்டுக்கொலை

லாகூர், பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பு இந்தியாவில் பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளது. அந்த அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் இந்தியாவில் தாக்குதல்களை அரங்கேற்றியுள்ளனர். குறிப்பாக 2005ம் ஆண்டு பெங்களூரு தாக்குதல், 2006ம் ஆண்டு நாக்பூர் தாக்குதல், 2008ம் ஆண்டு ராம்பூர் தாக்குதல்களில் மூளையாக செயல்பட்ட லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி அபு சைபுல்லா கலீத் நேபாளத்தில் போலி பெயரில் வசித்து வந்தான். இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்தனர். பாகிஸ்தானை சேர்ந்த கலீத் … Read more

திருப்பத்தூர்: விகடன் செய்தி எதிரொலி; சிதிலமடைந்த பேருந்து நிழற்குடை சீரமைப்பு!

திருப்பத்தூர் மாவட்டம், திரியாலம் கிராமத்தின் அருகே மிகவும் சிதிலமடைந்த நிலையிலிருந்த பயணியர் நிழற்குடையால், பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வந்தனர். நாட்றம்பள்ளி, பச்சூர், பர்கூர் உள்ளிட்ட ஊர்களுக்குச் செல்லும் பயணிகள் இங்கு நின்று பேருந்துகளுக்காகக் காத்திருக்கும் நிலையில், சேதமடைந்த நிழற்குடையைப் பயன்படுத்த முடியாமல் வெளியே நிற்க வேண்டிய நிலை இருந்தது. இது குறித்து பொதுமக்கள் தொடர்ந்து வேதனை தெரிவித்து வந்தனர். இப்பகுதியில் தனியார்ப் பள்ளிகள், அரசு மருத்துவமனை, வங்கிகள் போன்ற முக்கிய நிறுவனங்கள் இருந்தும், நிழற்குடையின் பரிதாப … Read more

பருவமழை முன்னேற்பாடுகள்: அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

சென்னை: தென்மேற்கு பருவமழைக்கான முன்னேற்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (திங்கள்கிழமை) காலை முக்கிய ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், விரைவில் தொடங்கவுள்ள தென்மேற்கு பருவமழைக்கான முன்னேற்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள … Read more

பயங்கரவாதத்துக்கு எதிரான சர்வதேச பிரச்சாரம்: அனைத்துக் கட்சி குழுவிலிருந்து திரிணாமூல் விலகல்

புதுடெல்லி: பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்வதற்காக பல்வேறு நாடுகளுக்குச் செல்லும் பல கட்சிக் குழுவில் இருந்து விலகுவதாக திரிணமூல் காங்கிரஸ் தலைமை, மத்திய அரசுக்குத் தெரிவித்துள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் குறித்த இந்தியாவின் செய்தியை மற்ற நாடுகளுக்கு எடுத்துச் சொல்லும் குழுக்களை மத்திய அரசு அறிவித்தது. இதில், பல கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் இடம் பெற்றுள்ளனர். திரிணமூல் காங்கிரஸ் சார்பில் கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய யூசுப் பதான் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், … Read more

இந்தியாவில் 3 பெரிய தாக்குதல்களில் தொடர்புடைய முக்கிய பயங்கரவாதி சுட்டுக் கொலை!

இந்தியாவில் பல பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் உயர்மட்டத் தலைவரான சைஃபுல்லா காலித், பாகிஸ்தானில் கொல்லப்பட்டார். சைஃபுல்லாவிடம் வெளியே செல்வதை குறைக்குமாறு லஷ்கர் அமைப்பு அவருக்கு கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியிருந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு பலத்த பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும், நேற்று மாட்லி நகரில் உள்ள தனது வீட்டை விட்டு சைஃபுல்லா வெளியே வந்தபோது, ​​சில மர்ம நபர்களால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். 2005ஆம் ஆண்டு பெங்களூருவில் நடந்த இந்திய அறிவியல் காங்கிரஸ் (ஐஎஸ்சி) … Read more