‘மோடி அரசின் நேர்மையின்மை’ – எம்.பி.க்கள் குழு பரிந்துரை நிராகரிப்புக்கு காங்கிரஸ் கண்டனம்

புதுடெல்லி: “முக்கியமான தேசிய பிரச்சினையில் மத்திய பாஜக அரசு, நேர்மையின்மை மற்றும் மலிவான அரசியல் விளையாட்டை விளையாடுகிறது.” என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: மே 16-ம் தேதி காலையில் மோடி அரசு, பாகிஸ்தான் பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட இருக்கும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவுக்கு காங்கிரஸ் சார்பில் 4 உறுப்பினர்கள் அல்லது தலைவர்கள் பெயர்களை தெரிவிக்கும் படி கேட்டிருந்தது. … Read more

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியின் ACE பட பத்திரிக்கையாளர் சந்திப்பு

‘ஏஸ்’ ( ACE) திரைப்படம் வரும் 23ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

அடுத்த 2 மணி நேரம்.. இந்த மாவட்டங்களில் மழை பெய்யும்!

தமிழகத்தில் இரவு 10 மணி வரை 31 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

பஞ்சாப் கிங்ஸ் மிரட்டல் வெற்றி… ராஜஸ்தான் படுமோசம் – பிளே ஆப் ரேஸ் எப்படி இருக்கு?

IPL 2025, RR vs PBKS: ஐபிஎல் 2025 தொடர் 10 நாள்கள் இடைவேளைக்கு பின்னர் நேற்று (மே 17) தொடங்கியது. ஆனால், நேற்றைய ஆர்சிபி – கேகேஆர் போட்டி மழையால் டாஸ் கூட போடப்படாமல் ரத்தாகியது. இரண்டு அணிகளுக்கும் தலா 1 புள்ளி கொடுக்கப்பட்டது.  இதனால், ஆர்சிபி 17 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியது. கேகேஆர் அணி 12 புள்ளிகளுடன் தொடரில் இருந்து வெளியேறியது. இருப்பினும் இன்னும் பிளே ஆப் சுற்றுக்கு எந்தவொரு அணிகளும் இன்னும் தகுதிபெறவில்லை. … Read more

தமிழ்நாடு அரசு அதிக விலை கொடுத்து ரூ.13,179 கோடிக்கு மின்சாரம் வாங்கியது ஏன்? அன்புமணி கேள்வி

சென்னை: தமிழ்நாடு அரசு,  யூனிட் ரூ.14.36 வீதம் ரூ.13,179 கோடிக்கு கூடுதலாக மின்சாரம் வாங்கியது ஏன்? என  கேள்வி எழுப்பி உள்ள பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், இதுவே முறைகேட்டுக்கு காரணம் என்று குற்றம் சாட்டி உள்ளார். தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவது தான் அவர்களுக்கு இலாபம் என்பதால் அந்த வழக்கத்தையே அவர்கள் தொடர்கின்றனர். இது தான் மின்சார வாரியத்தின் இழப்புக்குக் காரணமாகும் என கூறி உள்ளார். இதுதொடர்பாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் … Read more

அருங்காட்சியகங்கள், தொல்லியல் நினைவிடங்களை இன்று பொதுமக்கள் கட்டணமின்றி பார்வையிடலாம்

புதுடெல்லி, சர்வதேச அருங்காட்சியக தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 18-ம்தேதி கொண்டாடப்படுகிறது. சர்வதேச அருங்காட்சியக கவுன்சில் (International Council of Museums-ICOM) இந்த தினத்தை ஏற்பாடு செய்கிறது. இந்த நாளில் அருங்காட்சியகங்கள் மற்றும் அவற்றின் கலைப்பொருட்கள் பற்றி மக்களுக்குக் கற்பிப்பதற்காகவும், அருங்காட்சியகங்களின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கும் விதமாகவும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. இந்ந நிலையில் சர்வதேச அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள அருங்காட்சியகங்கள் மற்றும் தொல்லியல் நினைவிடங்களை இன்று (மே 18) பொதுமக்கள் கட்டணமின்றி … Read more

கொல்கத்தா அணியிலிருந்து விலகிய ரோவ்மேன் பவல்… மாற்று வீரர் அறிவிப்பு

கொல்கத்தா, 10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா – பாகிஸ்தான் போர்ப்பதற்றம் காரணமாக ஒரு வார காலம் நிறுத்தி வைக்கப்பட்ட ஐ.பி.எல். தொடர் மீண்டும் நேற்று தொடங்கியது. இருப்பினும் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற இருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையிலான ஆட்டம் மழை காரணமாக டாஸ் கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து … Read more

அமெரிக்காவில் பயங்கர சூறாவளி: 27 பேர் பலி

வாஷிங்டன்: அமெரிக்காவின் மத்தியப் பகுதியில் திடீரென பயங்கர சூறாவளி ஏற்பட்டது. இந்த சூறாவளியின் தாக்கத்தால் கென்டக்கி, மிசோரி மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. மிசோரி மாகாணத்தில் செயின்ட் லூயிஸ் நகரில் மட்டும் 5 ஆயிரம் கட்டிடங்கள் சேதம் அடைந்தன. சூறாவளி தாக்கியதில் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. மரங்கள் முறிந்து விழுந்ததில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் சேதம் அடைந்தன. பல இடங்களில் மின்சாரம் பாதிக்கப்பட்டது. மின்சார விநியோகத்தில் ஏற்பட்ட தடையால் 300,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். இதனால் மீட்பு … Read more

`ஒரு வருடத்துக்கு லீவ்; ஆனா, முழு சம்பளம்' – சீன நபருக்கு அடித்த ஜாக்பாட்; எப்படி தெரியுமா?

தான் வேலை செய்யும் நிறுவனத்தில் 365 நாட்கள் ஊதியத்துடன் சேர்ந்த விடுப்பை குலுக்கலில் வென்றுள்ளார் ஒருவர். சீனாவைச் சேர்ந்த அவர், நிறுவனத்தின் நிர்வாகி பொறுப்பில் இருக்கிறார். ‘365 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு’ என்ற ஒரு பெரிய காசோலையுடன் அவர் போஸ் கொடுக்கும் வீடியோ சமீபத்தில் வைரலானது. அவர் பணிபுரியும் நிறுவனம் ஏற்பாடு செய்த இரவு விருந்தில் கலந்துகொண்டுள்ளார். அங்கே நடந்த குலுக்கல் விளையாட்டில் தான் அவருக்கு இந்த லாட்டரி அடித்துள்ளது. ‘இது சும்மா விளையாட்டு தான்… … Read more

தொப்புள்கொடி உறவுகளுக்கு நல்லுறவுகளாக இருப்போம்: விஜய்

சென்னை: உலகெங்கும் வசிக்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் என்று முள்ளிவாய்க்கால் நினைவு தினமான இன்று உறுதி ஏற்போம் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். மே 18 ஆம் தேதி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு தினம் தமிழகம் முழுவதும் அனுசரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் இது குறித்து தனது எக்ஸ் தளத்தில், … Read more