ஹைதராபாத் தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 பேர் பலியான சோகம்: நடந்தது என்ன?

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் பழைய நகரத்தில் உள்ள குல்சர் ஹவுஸ் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 8 பேர் குழந்தைகள். விபத்து நடந்த இடம் வரலாற்று நினைவுச் சின்னமான சார்மினார் அருகே இருக்கிறது. உயிரிழந்த அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீ விபத்து குறித்து தெலங்கானா பேரிடர் மீட்பு மற்றும் தீயணைப்பு சேவைகள் இயக்குநர் ஜெனரல் நாகி ரெட்டி கூறுகையில், “குல்சார் ஹவுஸ் … Read more

'ஜனாதிபதி குறிப்பின் நோக்கம்' 8 மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் எழுதிய கடிதம் – என்ன மேட்டர்?

MK Stalin Letter: குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றத்திற்கு குறிப்பை அனுப்பியிருக்கும் நிலையில், இந்தியாவின் 8 மாநில முதல்வர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

ENG vs IND: இளம் இந்திய அணியின் கேப்டன் யார்? இந்த தேதியில் அறிவிக்கும் பிசிசிஐ!

India National Cricket Team: ஐபிஎல் தொடர் நிறைவடைந்ததும் இந்திய ஆடவர் சீனியர் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இங்கிலாந்து – இந்தியா அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றன. Team India: இந்திய ஏ அணியும் பயணம் அதற்கும் முன் இந்தியா ஏ அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா ஏ அணிக்காக 20 வீரர்கள் கொண்ட ஸ்குவாட் கடந்த மே 16ஆம் … Read more

"அந்த நேர்மைதான் இந்த கதாபாத்திரத்துக்குத் தேவை!" – விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகராகும் பால் டப்பா

ரேப் இசையில் தற்போது மாஸ் காட்டி வருகிறார் பால் டப்பா. இவருடைய உண்மையான பெயர் அனிஷ். சுயாதீன பாடல்கள் மூலமாக தன்னுடைய இசைப் பயணத்தைத் தொடங்கியவர் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் ‘His name is John’ பாடலைப் பாடி தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு இவர் பாடியிருந்த ‘காத்து மேல’, ‘மக்காமிஷி’ ஆகிய பாடல்கள் இணையத்தில் தூள் கிளப்பியிருந்தன. Paal Dabba இப்படியான ஹிட் வரிசை மூலமாகப் பால் டப்பாதான் தற்போது டாப் … Read more

தமிழ்நாடு முழுவதும் சாலை ஓரங்களில் உள்ள பாதுகாப்பு இல்லாத இடங்களை ஆய்வு செய்ய முதலமைச்சர் உத்தரவு…

சென்னை:  சாத்தான்குளம் அருகே கார் சாலையோரம் உள்ள கிணற்றுக்குள் பாய்ந்த விவகாரத்தை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் சாலைகளின் ஓரங்களில் உள்ள பாதுகாப்பு இல்லாத இடங்களை ஆய்வு செய்ய  மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். சாத்தான்குளம் அருகே கிணற்றுக்குள் கார் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தை உட்பட 5 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். நேற்ற மாலை 4 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றது.   சாத்தான்குளம் அருகே சிந்தாமணிக்கும் மீரான்குளத்துக்கும் இடையே … Read more

சார்மினார் தீ விபத்து – பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு

புதுடெல்லி, தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள சார்மினார் பகுதியில் உள்ள குல்சார் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த கட்டடத்தின் முதல் மாடிக்கு தீ பரவியது. மூன்று மாடிகளை கொண்ட இந்த கட்டடத்தில் தீ மளமளவென பரவியது. நீண்ட நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த தீ விபத்தில் 17 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.மேலும் 5 … Read more

இங்கிலாந்துக்கு செல்லும் இந்திய ஏ அணிக்கு தலைமை பயிற்சியாளர் நியமனம்

மும்பை, இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற ஜூன் 20-ம் தேதி தொடங்க உள்ளது. 2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக நடைபெறும் இந்த தொடரில் வெற்றி பெற இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த தொடருக்கு முன்னதாக இந்திய ஏ அணி இங்கிலாந்தில் … Read more

அமெரிக்காவில் இருந்து தங்கள் சொந்த நாட்டுக்கு பணம் அனுப்பினால் 5 சதவீதம் வரி

வாஷிங்டன், அமெரிக்காவில் சட்டவிரோதமாக சுமார் 1.37 கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் வசிப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது. அவர்களை வெளியேற்ற ஜனாதிபதி டிரம்ப் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன்படி கடந்த ஜனவரி மாதம் முதல் சட்டவிரோத குடியேறிகள் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக சுமார் 4.78 கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் பணியாற்றி வருகின்றனர். அதிபர் டிரம்ப் பதவியேற்ற பிறகு அவர்களின் பல்வேறு உரிமைகள், சலுகைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் ‘தி ஒன் பிக் பியூட்டிபூல் பில்’ … Read more

ஊட்டி‌: 'புரோக்கோலி ரூ. 250; சுக்குனி‌ ரூ.‌ 85' – எகிறும் சைனீஸ் காய்கறிகளின் விலை; காரணம் என்ன?

இங்கிலீஷ் வெஜிடபிள்ஸ் எனப்படும் மலை காய்கறி உற்பத்தியில் சிறந்து விளங்கும் மாவட்டங்களில் ஒன்றான நீலகிரியில் சைனீஸ் ரக காய்கறிகளையும் விவசாயிகள் அதிகளவில் பயிரிட்டு வருகின்றனர். குறிப்பாக சைனீஸ் கேபேஜ், புரோக்கோலி, ஹைஸ்பெர்க், லெட்யுஸ், ஸ்பிரிங் ஆனியன், சுக்குனி, பார்சிலி, செல்லரி போன்ற சைனீஸ் ரக காய்கறிகளைப் பயிரிட அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். சைனீஸ் காய்கறிகள் நீலகிரி மலைக் கிராமங்களில் விளைவிக்கப்படும் சைனீஸ் ரக காய்கறிகளைச் சந்தைப்படுத்துவதற்காக ஊட்டி நகராட்சி சந்தையில் அரசு கூட்டுறவு மற்றும் தனியார் … Read more

தமிழ்நாடு அனைத்து போட்டி தேர்வு அமைப்பு சார்பில் சென்னையில் உண்ணாவிரத போராட்டம்

சென்னை: டிஎன்பிஎஸ்சி-யால் நடத்தப்படும் குரூப்-1 தேர்வு வயது உச்சவரம்பை மற்ற 12 மாநிலங்களில் உள்ளது போல 49 வயது வரை உயர்த்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்துப்போட்டி தேர்வு அமைப்பு சார்பில், சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. டிஎன்பிஎஸ்சி-யால் நடத்தப்படும் குரூப்-1 தேர்வு வயது உச்சவரம்பை மற்ற 12 மாநிலங்களில் உள்ளது போல 49 வயது வரை உயர்த்த வேண்டும்; வெளிப்படைத்தன்மையுடன் டிஎன்பிஎஸ்சி செயல்பட வேண்டும்; தமிழ் வழியில் முதன்மைத் தேர்வு … Read more