‘இந்த மாப்பிள்ளை ஊர்வலத்தை இண்டியா கூட்டணி புறக்கணிக்க வேண்டும்’ – சஞ்சய் ரவுத்

மும்பை: பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டினை விளக்குவதற்காக பல்வேறு வெளிநாடுகளுக்குச் செல்ல இருக்கும் பிரதிநிதிகள் குழுவினை மாப்பிள்ளை ஊர்வலத்துடன் ஒப்பிட்டுள்ள சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) எம்.பி. சஞ்சய் ரவுத், இண்டியா கூட்டணி இதனைப் புறக்கணிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். மேலும், சிவ சேனா (ஷிண்டே பிரிவு) ஸ்ரீகாந்த் ஷிண்டே எதனைப் பிரதிநிதித்துவப்படுத்துவார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். சமீபத்திய இந்தியா – பாகிஸ்தான் மோதலில், இந்தியாவின் நிலைப்பாட்டினை விளக்கவும், பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக குற்றம்சாட்டி பாகிஸ்தான் மீதான அழுத்தத்தை … Read more

GBU – இளையராஜா விவகாரம்: "ஜி.வி.பிரகாஷ் 7 கோடி வாங்குறதுல கங்கை அமரனுக்கு இதான் பிரச்னை" – தேனப்பன்

அஜித் குமார் நடித்திருந்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் கடந்த ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகியிருந்தது. இப்படத்தில் அஜித்தின் சில மாஸ் காட்சிகளுக்கு இளையராஜாவின் சில பாடல்களைப் பயன்படுத்தியிருந்தனர். அந்தப் பாடல்களுக்கு முறையான உரிமத்தைப் பெறவில்லை என இளையராஜா ராயல்டி கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார். Ilaiyaraja Copyrights – Gangai Amaran இந்த விவகாரம் தொடர்பாக அப்போது கங்கை அமரன் ஜி.வி.பிரகாஷ் குறித்து காட்டமாகப் பேசியிருந்தார். சமீபத்திய நிகழ்வு ஒன்றில் தயாரிப்பாளர் பி.எல். தேனப்பன், கங்கை அமரன் … Read more

இனி ஏசி தாராளமா யூஸ் பண்ணுங்க; மின்சார கட்டணம் பற்றி கவலை வேண்டாம்

Air Conditioner Tips: கோடை காலம் தொடங்கி வெயில் வாட்டி வருவதால், ஏர் கண்டிஷனர் (ஏசி) தேவையும் தற்போது அதிகரித்துள்ளது. கூலர், பேன் கொடுக்காத குளிர்ந்த காற்றை ஏசி தருகிறது. மேலும் ஏசி போட்ட சில மணி நேரங்களில் நமது அறை குளிர்விடும். அதுமட்டுமின்றி இந்த ஏசி மக்களுக்கு வெப்பத்திலிருந்து நிவாரணம் அளிக்கவும் உதவுகிறது. ஆனால் நம்மில் பெரும்பாலானோர் மின்சாரக் கட்டணத்தை குறித்த கவலைப்பட்டு ஏசியை சரியாக நமது தேவைக்கேற்ப பயன்படுத்தத் தயங்குகிறோம். நீங்கள் மின்சாரக் கட்டணத்தைக் … Read more

தமிழ்நாடு அரசு மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்த கூடாது! பாமக நிறுவனர் ராமதாஸ்

சென்னை: தமிழ்நாடு அரசு மீண்டும் மின்கட்டணத்தை உயர்த்த கூடாது. மின்கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்  என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முதலமைச்சர் ஸ்டாலினை வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாட்டில் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டது. மின்வாரியத்தின் இழப்புக்குக் காரணம் தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கப்படுவது தான் என்று குற்றம் சாட்டி உள்ளார். தமிழ்நாட்டில் மீண்டும் மின் கட்டணம் உயரப்போவதாக செய்திகள் பரவி வரும் நிலையில், பாமக தலைவர் … Read more

அனைத்துக்கட்சி தூதுக்குழுவில் இடம்பெற்றதில் அரசியல் இல்லை; சசிதரூர்

டெல்லி, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு தெரியப்படுத்தவும், பாகிஸ்தானின் பயங்கரவாத செயல்பாடுகளை வெளிப்படுத்தவும், பயங்கரவாதத்திற்கு எதிராக நட்பு நாடுகளை ஒன்றிணைக்கவும் 7 குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது. அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் சசி தரூர்( காங்கிரஸ்) ரவி சங்கர் பிரசாத் (பாஜக) , சஞ்சய் குமார் ஜா (ஜேடியு), பைஜயந்த் பாண்டா (பாஜக) , கனிமொழி கருணாநிதி (திமுக) , சுப்ரியா சுலே (என்சிபி), ஸ்ரீகாந்த் ஏக்நாத் … Read more

பெங்களூருவுக்கு எதிரான ஆட்டம் ரத்து; பிளே ஆப் வாய்ப்பை இழந்த கொல்கத்தா

பெங்களூரு, இந்தியா, பாகிஸ்தான் இடையேயான மோதலால் தடைபட்ட நடப்பு ஐ.பி.எல். தொடர் நேற்று மீண்டும் தொடங்கியது. பெங்களூருவில் நேற்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவிருந்த 58வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதவிருந்தன. ஆனால், பெங்களூருவில் நேற்று கனமழை பெய்தது. இதன் காரணமாக டாஸ் சுண்டப்படாமல் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இரு அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. நடப்பு ஐ.பி.எல். தொடர்பில் பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க … Read more

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவு

காபுல், ஆப்கானிஸ்தானில் இன்று மாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. காலை 11.43 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் 150 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் 36.44 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 71.07 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக … Read more

'நிர்வாணப் படங்கள்' 11 வயது மாணவனிடம் அத்துமீறிய பெண் – ஆசிரியர் செய்யும் வேலையா இது?

World Bizarre News: 11 வயது மாணவனுக்கு நிர்வாணப் புகைப்படங்களை அனுப்பியது மட்டுமின்றி தனது அந்தரங்க உறுப்புகளை கட்டாயப்படுத்தி தொட வைத்த பெண் ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.

பெரம்பலூர்: வீட்டு ரசீது வழங்க ரூ.25,000 லஞ்சம்; நகராட்சி வருவாய் ஆய்வாளர் சிக்கிய எப்படி?

பெரம்பலூர், ஆலம்பாடி ரோடு அன்பு நகரைச் சேர்ந்த முத்துசாமி என்பவரது மனைவி மகேஸ்வரி. இவர், தற்போது பெரம்பலூர் நகர்ப்பகுதியில் புதிதாக வீடு கட்டியிருக்கிறார். அந்த வீட்டிற்கு நகராட்சியில் ரசீது போடுவதற்காக மகேஸ்வரி தனது உறவினரான பெரம்பலூர் சங்குப்பேட்டையைச் சேர்ந்த மெய்யன் என்பவர் மூலம் நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்திருக்கிறார். இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், சின்ன அய்யன் வயல் பகுதியைச் சேர்ந்த 53 வயதாகும் கண்ணன் என்பவர் பெரம்பலூர் நகராட்சி வருவாய் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். இவர், தற்போது பெரம்பலூர் … Read more

‘திமுக கூட்டணியில் சில ஏமாற்றங்கள் இருப்பதை மறுப்பதற்கில்லை, ஆனால்…’ – துரை வைகோ

தென்காசி: “மதவாத சக்திகளை உறுதியாக எதிர்க்கும் தலைமையாக திமுக உள்ளது. அதனால் திமுக கூட்டணியில் உள்ளோம். கூட்டணியில் சில ஏமாற்றங்கள் இருப்பதை மறுப்பதற்கில்லை. தமிழகத்தின் எதிர்காலம் கருதி திமுக கூட்டணியில் உள்ளோம்.” என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளோம். தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ வீரகேரளம்புதூர் அருகே உள்ள கலிங்கப்பட்டியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மத்திய அரசு நெடுஞ்சாலைகளில் உள்ள … Read more