சூரப்பட்டில் ரூ.146 கோடியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அரசு அனுமதி

சூரப்பட்டு பகுதியில் ரூ.146.62 கோடியில், நாளொன்றுக்கு 47 மில்லியன் லிட்டர் குடிநீரை சுத்திகரிக்கும் நிலையத்தை அமைக்க சென்னை குடிநீர் வாரியத்துக்கு நிர்வாக அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை மாதவரம் அடுத்த சூரப்பட்டு கிராமத்தில், நாளொன்றுக்கு 14 மில்லியன் லிட்டர் குடிநீரை சுத்திகரிக்கும் திறன் கொண்ட நிலையம், கடந்த 1965ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்நிலையம், பின்னர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2009ம் ஆண்டு, சுத்திகரிப்பு நிலையம் சென்னை குடிநீர் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது. … Read more

இண்டியா கூட்டணி பலவீனமாக இருக்கிறது: காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கருத்து

இண்டியா கூட்டணி பலவீனமாக இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் மற்றும் மிருதுஞ்சய் சிங் யாதவ் ஆகியோர் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ப. சிதம்பரம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது: இண்டியா கூட்டணி வலுவாக இருப்பதாக மிருதுஞ்சய் சிங் கூறுகிறார். ஆனால், அவர் கூறியதுபோல் இண்டியா கூட்டணியின் எதிர்காலம் … Read more

பிரபல நடிகருடன் உறவில் ஆர்த்தி ரவி? உண்மை வெளிவருவது எப்போது? பிரபலம் சொன்ன தகவல்!

Jayam Ravi Wife Aarti Relationship With Famous Actor : ஆர்த்தி-ரவி மோகன் பிரச்சனை குறித்து ஊரே பேசி வரும் நிலையில், தற்போது ஒரு பிரபலம், வெளியிட்டிருக்கும் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.  

பிஎம் கிசான் திட்டம் : விவசாயி இறந்துவிட்டால் அவரது வாரிசு கிசான் தொகையை பெறுவது எப்படி?

Tamilnadu Government : பிஎம் கிசான் தொகை திட்டத்தில் பயனாளியாக உள்ள விவசாயி இறந்துவிட்டால் அவரது வாரிசு அந்த திட்டத்தில் சேருவது எப்படி? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

சாத்தான்குளம் அருகே பரிதாபம்: சாலையோர கிணற்றில் கார் பாய்ந்து 5 பேர் பலி…

சாத்தான்குளம்: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே சாலையோர கிணற்றில் கார் மூழ்கிய சம்பவத்தில், கோவையைச் சேர்ந்த ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திருச்செந்தூர்  அருகே உள்ள பரமன்குறிச்சி  வெள்ளாளன் விளையில் உள்ள கிறிஸ்தவ ஆலய  பிரதிஷ்டை விழாவில் கலந்துகெலாள்வதற்காக  கோயம்புத்தூரில் இருந்து குடும்பத்துடன் காரில் வந்த இவர்கள், சாத்தான்குளம் அருகே உள்ள மீரான்குளம் பகுதியில் சாலையோரத்தில் இருந்த கிணற்றுக்குள்  கார் பாய்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று  காலை  (மே 17) அன்று கோவையைச்சேர்ந்த சைனி கிருபாகரன்  குடும்பத்தினர் … Read more

ஜனாதிபதி நிதியம் வெற்றிகரமாக பிரதேசங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது

ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை தேவையுள்ள நோயாளிகளுக்காக மேலும் விரிவுப்படுத்த அர்ப்பணிப்போம் – ஜனாதிபதியின் செயலாளர் மேல் மாகாண பிரதேச செயலகங்களில் ஜனாதிபதி நிதியத்தின் செயற்பாடுகளுக்கு பொறுப்பாக செயல்படும் அதிகாரிகளுக்கான விசேட பயிற்சி செயலமர்வு இன்று (17) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி நிதியத்தின் செயல்பாடுகளை பிரதேச மட்டத்திற்கு விரிவுபடுத்துவதற்கு அமைவாக, மேல் மாகாணத்தின் கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் மேற்படி விடயத்துக்கு பொறுப்பான அதிகாரிகளுக்கு ஜனாதிபதி நிதிய செயல்பாடுகள் … Read more

திமுக கூட்டணியில் பாமக இடம்பெறுமா? – ஆர்.எஸ்.பாரதி நேர்காணல்

ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது திமுக ஆட்சி. இந்த நான்கு ஆண்டுகளில் தாங்கள் செயல்படுத்திய திட்டங்களைச் சொல்லி சாதனை விளக்கக் கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறது திமுக. அதேசமயம், ஆட்சிக்கு எதிரான அதிருப்தி அலைகளை வாக்குகளாக அறுவடை செய்ய ஆயத்தமாகிறது எதிர்க் கூட்டணி. இப்படியான சூழலில், “அதிருப்தியில் இருப்பவர்கள் 30 சதவீதம் பேர் தான்… மீதி இருக்கும் 70 சதவீத மக்கள் இந்த ஆட்சி மீண்டும் வரவேண்டும் என நினைக்கிறார்கள்” என்கிறார் திமுக-வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி. அதுகுறித்து … Read more

ரோஹிங்கியா அகதிகளை நாடு கடத்துவதை நிறுத்தக் கோரி மீண்டும் பொதுநல மனு: உச்ச நீதிமன்றம் அதிருப்தி

ரோஹிங்கியா அகதிகளை நாடு கடத்துவதை நிறுத்தக் கோரி மீண்டும் பொதுநல மனு தாக்கல் செய்ததற்கு உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது. மியான்மரை சேர்ந்த ரோஹிங்கியா அகதிகள் 8,000-க்கும் மேற்பட்டோர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கின்றனர். இவர்கள் நாடு கடத்தப்படுவதை நிறுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை நீதிபதிகள் சூர்யகாந்த், தீபங்கர் தத்தா, என்.கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 8-ம் தேதி விசாரித்தது. அப்போது மூத்த வழக்கறிஞர்கள் … Read more

நுர் கான் விமானப்படை தளம் மீது இந்தியா தாக்குதல்: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் ஒப்புதல்

பாகிஸ்தானின் நுர் கான் விமானப்படை தளம் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதை அந்நாட்டு பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் ஒப்பு கொண்டுள்ளார். பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய பாதுகாப்புப் படை கடந்த 7-ம் தேதி நள்ளிரவில் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ராணுவம் அடுத்தடுத்த நாட்களில் இந்தியா மீது ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. ஆனால் இவற்றை இந்திய பாதுகாப்புப் படையின் வான் தடுப்பு … Read more