Month: May 2025
மீண்டும் உயிர்பெறும் திண்டுக்கல் – சபரிமலை ரயில் பாதை திட்டம்!
திண்டுக்கல்: திண்டுக்கல் – சபரிமலை ரயில் பாதை திட்ட ஆய்வுக்காக ரயில்வே நிர்வாகம் ரூ.46 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. கேரளப் பகுதியில் புலிகள் சரணாலயம், முல்லை பெரியாறு அணை, அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளதால் 2 கட்டங்களாக இத்திட்டத்தை செயல்படுத்துவது எளிதாக இருக்கும் என்று பொதுமக்களும், வர்த்தகர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கையாக திண்டுக்கல்-சபரிமலை ரயில் பாதைத் திட்டம் இருந்து வருகிறது. சபரிமலை பக்தர்கள் மட்டுமல்லாது, இடுக்கி மாவட்ட வர்த்தகர்கள், இருமாநில சுற்றுலா பயணிகளும் … Read more
பாகிஸ்தானின் 600 ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியது எப்படி? – வெளிவந்த புதிய தகவல்கள்
புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், 600-க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ட்ரோன்களை இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகள் சுட்டு வீழ்த்தின. இதுகுறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் ராணுவம் இந்திய நகரங்களை குறிவைக்க முயன்றபோது, 600க்கும் மேற்பட்ட அந்நாட்டு ட்ரோன்கள் இந்திய பாதுகாப்புப் படைகளால் … Read more
இந்தியா – பாகிஸ்தான் அமைதிக்காக அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட பிரிட்டன் விருப்பம்
இஸ்லாமாபாத்: இந்தியா – பாகிஸ்தான் இடையே நீடித்த போர் நிறுத்தம், பேச்சுவார்த்தை மற்றும் நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகளை உறுதி செய்ய அமெரிக்காவுடன் இணைந்து பிரிட்டன் பணியாற்றி வருவதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் லாம்மி தெரிவித்துள்ளார். மேலும் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் கீழ் தங்களின் கடமைகளை நிறைவேற்ற அனைத்து தரப்பையும் அவர் வலியுறுத்தினார். இரண்டு நாள் பாகிஸ்தான் பயணத்தின் இறுதி நாளில் சர்வதேச ஊடகத்திடம் பேசிய டேவிட் லாம்மி கூறுகையில், “நீடித்த போர் நிறுத்தம் ஏற்படுவதற்கும், பேச்சுவார்த்தை நடப்பதை … Read more
விஜயகாந்தின் கடின உழைப்பு அவரது மகனுக்கும் வேண்டும்-ஏ.ஆர்.முருகதாஸ் பேச்சு!
Padai Thalaivan Movie Audio Launch : கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில், காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் படமாக உருவாகியுள்ள திரைப்படம் படம் “படை தலைவன்”.
ஜீ தமிழ் நியூஸ் எதிரொலி: 'ரூ.150 கோடி நிலம்' போலி பத்திரப்பதிவு ரத்து; அரசு அதிகாரியும் சஸ்பெண்ட்!
Zee Exclusive: ஓசூரில் ரூ.150 கோடி மதிப்பிலான அரசு நிலம் பத்திரப்பதிவு செய்த விவகாரம் ஜீ தமிழ் நியூஸ் செய்தி எதிரொலியாக சார் பதிவாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
Thug Life: 'எமனுக்கும் எனக்கும் நடக்குற கதை இது' – மிரட்டும் கமல், சிம்பு | வெளியானது டிரெய்லர்
மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி, ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தக் லைப்’. இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். ஜூன் 5-ம் தேதி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி இருக்கிறது. Source link
பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக ஹரியானாவைச் சேர்ந்த பிரபல யூடியூபர் ‘ஜோ’ கைது
பாகிஸ்தான் உளவுத்துறை வலையமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு முக்கியமான தகவல்களை அனுப்பியதாகவும் ஹரியானாவைச் சேர்ந்த பயண யூடியூபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏப்ரல் 22ம் தேதி பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டிருப்பது இந்த வழக்கில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானாவின் ஹிசாரில் வசிக்கும் ஹரிஸ் குமாரின் மகள் ஜோதி, ‘டிராவல் வித் ஜோ’ என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். அதற்காக … Read more
வாகா எல்லையில் பறக்க விடப்பட்டுள்ள புதிய இந்திய தேசிய கொடி
சண்டிகர், பஞ்சாப் மாநிலம் பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது. அம்மாநிலத்தின் அம்ரித்சர் மாவட்டம் அடாரி எல்லைப்பகுதி பாகிஸ்தானின் வாகா எல்லை அருகே அமைந்துள்ளது. இருநாட்டு படையினரும் இந்த எல்லைப்பகுதியில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த எல்லைப்பகுதியில் தினமும் காலை இருநாட்டு பாதுகாப்புப்படையினரும் அவரவர் நாட்டு தேசியக்கொடியை ஏற்றுவது வழக்கம். அந்த தேசியக்கொடியை மாலை இறக்கும் நிகழ்வு உலக அளவில் மிகவும் பிரபலமாகும். குறிப்பாக, இந்திய சுதந்திர தினம், குடியரசு தினங்களில் அடாரி – வாகா எல்லையில் ஆயிரக்கணக்கானோர் குவிந்து … Read more
பெங்களூரு – கொல்கத்தா ஆட்டம் ; மழை பெய்ய வாய்ப்பா?
பெங்களூரு, இந்தியா – பாகிஸ்தான் மோதல் காரணமாக ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது. தற்போது இருநாடுகளுக்கும் இடையே அமைதி திரும்பியுள்ள நிலையில் ஐ.பி.எல். தொடர் இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது. பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் இன்று நடைபெறும் 58வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. இந்நிலையில், பெங்களூருவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இன்று ஆட்டம் நடைபெற்றும் … Read more