Maanan: "பலே பாண்டியா… அப்படிச் சொல்வதற்குத் துணிச்சல் வேண்டும்" – சூரியைப் புகழும் வைரமுத்து

சூரி, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடிப்பில், பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவான ‘மாமன்’ திரைப்படம் நேற்று (மே 16) வெளியானது. காமெடி கலந்த எமோஷனல் திரைப்படமான `மாமன்’, திரையரங்குகளில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. இவ்வாறிருக்க, சூரியின் ரசிகர்கள் சிலர் மாமன் திரைப்படம் வெற்றியடைய வேண்டுமென மண் சோறு சாப்பிட்டிருக்கிறார்கள். மாமன் இதையறிந்த சூரி, “ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டது முட்டாள்தனமானது. ஒரு படத்தோட கதை நன்றாக இருந்தால் அது ஓடப் போகுது. மண் சோறு சாப்பிட்டால் படம் … Read more

சாட்ஜிபிடி மூலம் மியூசிக் கற்றுக் கொள்வது எப்படி? இசை உருவாக்குவது எப்படி?

Technology News : உங்களுக்கு தனித்திறமை வளர்த்துக்கொள்ளும் ஆர்வம் இருந்தால், சாட்ஜிபிடி, டீப் சீக் போன்ற ஏஐ தொழில் நுட்பங்கள் மூலம் இலவசமாக கற்றுக்கொள்ளலாம். தொலைபேசி மட்டும் இணைய வசதியுடன் இருந்தால் நீங்கள் விரும்பும் தனித்திறமையை வளர்த்துக் கொள்ளலாம். மியூசிக், பல மொழிகளை கற்பது உள்ளிட்ட பல வித்தைகளை அது கற்றுக்கொடுக்கும். அந்தவகையில் இசையை கற்றுக்கொள்வது குறித்து சாட்ஜிபிடியிடம் என்னென்ன கேள்விகளை கேட்டால் எப்படி பதில் கிடைக்கும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் 1. அடிப்படை இசை … Read more

ஜெகன்ஆட்சியின் ரூ.1000 கோடி மதுபான கொள்கை ஊழல்: ஆந்திராவில் இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி கைது….

அமராவதி: ஆந்திராவில், முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சியில் நடைபெற்ற  ரூ.1,000 கோடி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே டெல்லியில் ஆட்சி செய்த  ஆம்ஆத்மி கட்சியில் நடைபெற்ற மதுபான கொள்கை முறைகேடு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அப்போது டெல்லி முதல்வராக இருந்த கெஜ்ரிவால், துணைமுதல்வர் சிசோடியா உள்பட பலர் கைது செய்யப்பட்ட நிலையில், அடுத்து … Read more

கோலார் தங்கவயலில் புதிய நடைபாதை அமைப்பு

பெங்களூரு, கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் நகரசபைக்கு உட்பட்ட ஆண்டர்சன்பேட்டை சர்க்கிள் முதல் சாம்பியன்ரீப் ரெயில் நிலையம் வரை செல்லும் சாலையில் குண்டும், குழியுமாக இருந்தது. மேலும், அப்பகுதியில் நடைபாதை சாலை இல்லாமல் வியாபாரிகள் அவதி அடைந்து வந்தனர். இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டுனர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. எனவே புதிய நடைபாதை அமைக்க வேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள் நகரசபை நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். மேலும், இதுதொடர்பான ‘தினத்தந்தி’ நாளிதழில் கடந்த 13ம் தேதி … Read more

ஜூனியர் தெற்காசிய கால்பந்து: இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

யூபியா, 7-வது ஜூனியர் (19 வயதுக்கு உட்பட்டோர்) தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி அருணாசலபிரதேசத்தில் உள்ள யூபியாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, மாலத்தீவை எதிர்கொண்டது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் மாலத்தீவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. முன்னதாக நடந்த மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் வங்காளதேச அணி 2-1 என்ற கோல் கணக்கில் நேபாளத்தை வீழ்த்தியது. நாளை நடக்கும் … Read more

10 லட்சம் பாலஸ்தீனியர்களை நிரந்தரமாக லிபியாவில் குடியமர்த்த டிரம்ப் திட்டம்

வாஷிங்டன், காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி .இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ … Read more

என் காதலே ..என் காதலே – சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் நிலவுப் பெண் புவிக்கோளத்தில் மறுபுறத்திற்கு தன் பயணத்தை துவக்கிய நேரம்.. வந்து சேர்ந்த சூரியன், தன் பயணக் களைப்பையும் மறந்து வானத்தின் இருட்டுக்கு வெள்ளை அடிக்க யத்தனித்துக் கொண்டிருந்தான். ‘வெள்ளை நிறத்திற்கும், ஆரஞ்சு நிறத்திற்கும் வித்தியாசம் தெரியவில்லையா சூரியனே’ என்று பறவைகள் கேலி பேசி … Read more

டாஸ்மாக் ஊழல், முறைகேடு வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்ற அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: டாஸ்மாக் ஊழல் தொடர்பான மூல வழக்குகளை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை விசாரித்தால், தவறு செய்தவர்கள் தப்ப வைக்கப்பட்டு விடுவார்கள். அந்த வழக்குகளில் நீதி கிடைக்காது. எனவே, டாஸ்மாக் நிறுவனத்தில் நிகழ்ந்த ஊழல்கள், முறைகேடுகள் தொடர்பான 40-க்கும் மேற்பட்ட வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு ஆணையிட வேண்டும்,” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழக அரசின் மது வணிக … Read more

மத்திய குழுவுக்கு 4 எம்.பி.க்களை பரிந்துரைத்த காங்கிரஸ்; சசி தரூரை தேர்வு செய்த மத்திய அரசு! 

புதுடெல்லி: பாகிஸ்தான் மோதல் தொடர்பாக வெளிநாட்டு அரசுகளுக்கு விளக்கமளிக்க அமைக்கப்பட்டுள்ள குழுவுக்கு காங்கிரஸ் பரிந்துரைத்த 4 எம்பிகளைத் தவிர்த்து, மத்திய அரசு சசி தரூரின் பெயரை தேர்வு செய்துள்ளது. இதனால் திருவனந்தபுரம் எம்.பி.க்கும் காங்கிரஸ் தலைமைக்கும் இடையே மோதல் வெளிப்படையாக வெளிச்சத்துக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து பயங்கரவாதத்துக்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை நிலைப்பாடு குறித்து வெளிநாடுகளுக்கு விளக்கம் அளிக்க அமைக்கப்பட்டிருக்கும் அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் குழுவினை வழிநடத்த இருக்கும் ஏழு எம்பிகளில் … Read more

இந்த வீரரை கேப்டனாக தேர்வு செய்யலாம்.. ரவி சாஸ்திரி!

India Next Test Captain: ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாட உள்ளது. இச்சூழலில் இத்தொடருக்கு முன்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலி ஓய்வை அறிவித்துள்ளனர். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக விராட் கோலி இன்னும் 2 முதல் 3 ஆண்டுகள் வரை விளையாடுவார் … Read more