"எங்க அப்பாவோட கடைசி காலத்துல தன் புள்ள உறுப்படுமானு கேட்டப்ப அந்த படத்த காட்டினேன்" – விஜய் சேதுபதி

ஆறுமுககுமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘ஏஸ்’(ACE) . கன்னட நடிகை ருக்மிணி வசந்த் இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார்.   மே 23 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. ‘ஏஸ்’ படத்தில்… இந்நிலையில் ‘ஏஸ்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று (மே 17) நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட விஜய் சேதுபதி, “முதன் முதல்ல ‘வர்ணம்’ படத்துல நடிக்கிறதுக்கு என்னைய ரெக்கமண்ட் பண்ணது … Read more

டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் என கற்பனை செய்தியை ED பரப்புகிறது! அமைச்சர் முத்துசாமி

சென்னை; டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் என கற்பனை செய்தியை  அமலாக்கத்துறை  பரப்புகிறது என டாஸ்மாக் துறை அமைச்சர் முத்துசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும்,  டாஸ்மாக்  ஊழியர்களுக்கு ஆதரவாக தமிழக அரசு அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் மேற்கொண்டு துணை நிற்கும் என்றார். சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக, கடந்த மார்ச் 6 முதல், 8ம் தேதி வரை, சென்னை எழும்பூரில் உள்ள ‘டாஸ்மாக்’ தலைமை அலுவலகம் மற்றும் எஸ்.என்.ஜே., உள்ளிட்ட மதுபான நிறுவனங்கள், மதுபான ஆலைகளில், அமலாக்கத்துறை அதிகாரிகள் … Read more

கட்டுமான நிறுவனத்தின் ரூ.81 கோடி சொத்துக்கள் முடக்கம் – அமலாக்கத்துறை நடவடிக்கை

மும்பை, மராட்டிய மாநிலம் மும்பையை சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவனம் வித்யவாசினி குரூப். இந்நிறுவனம் போலி ஆவணங்கள் மூலம் எஸ்.பி.ஐ. வங்கியில் இருந்து 764 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்துள்ளது. இந்த மோசடி தொடர்பாக சிபிஐ, அமலாக்கத்துறை, பொருளாதார குற்றப்பிரிவு உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்நிலையில், பணமோசடி புகாரில் வித்யவாசினி குரூப் நிறுவனத்தின் 81 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை நேற்று முடக்கியது. இந்த வழக்கு … Read more

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் மந்திரி விருப்பம்

இஸ்லாமாபாத், காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22-ந் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானை சேர்ந்த மிக முக்கிய பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பு ஒன்று இதற்கு பொறுப்பேற்றது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த 7-ந் தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் ராணுவ தாக்குதல் தொடங்கியது. இந்திய படைகள் பாகிஸ்தானின் பயங்கரவாத தளங்களை குறிவைத்து தாக்கின. பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர். … Read more

`நள்ளிரவில் வந்த போன்; இந்தியாவின் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்கியது’ – ஒப்புக்கொண்ட ஷெபாஸ் ஷெரீப்

கடந்த மே மாதம் 10-ம் தேதி, பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூரை’ நடத்தி முடித்தது. ‘இந்திய ராணுவத்தை நாங்கள் தான் பெருமளவில் தாக்கினோம்’ என்று இதுவரை கூறிவந்த பாகிஸ்தான், நேற்று ஒரு உண்மையை உடைத்து பேசி பேசியுள்ளது. நேற்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, “மே 10-ம் தேதி நள்ளிரவு 2.30 மணியளவில், பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் அசிம் முனீர் எனக்கு போன் செய்து நமது விமானப் படை … Read more

குடும்பத்துக்குள் குழப்பம்; இதில் 50 தொகுதிகளில் வெற்றி எப்படி சாத்தியம்? – பாமக மீது சேகர்பாபு விமர்சனம்

சென்னை: “முதலில் பாமகவுக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டு, அதன்பிறகு வெற்றி தோல்வி குறித்து கருத்து சொல்ல வேண்டும். அவர்களுடைய குடும்பத்துக்குள்ளேயே வெட்டு, குத்து நடந்து கொண்டிருக்கிறது. இவர்கள் எப்படி 50 தொகுதிகளில் படுத்துக் கொண்டே வெற்றி பெற முடியும்?” என்று தமிழக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார். சென்னையில் அமைச்சர் சேகர்பாபு இன்று (மே 17) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: திரு வி.க.நகர், வில்லிவாக்கம், அம்பத்தூர் பகுதிகளில், அமுத கரங்கள் நிகழ்ச்சிக்கு முன்பாக, … Read more

‘தேசத்துக்கு என் சேவை தேவைப்படும்போது அதில் குறைவைக்க மாட்டேன்’ – சசி தரூர்

புதுடெல்லி: “தேசத்துக்கு என் சேவை தேவைப்படும்போது அதில் குறைவைக்க மாட்டேன்.” என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் எம்.பியுமான சசி தரூர் தெரிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் பூஜ்ய சகிப்புத்தன்மை குறித்து ஐ.நா.பாதுகாப்பு குழு உறுப்பு நாடுகள் மற்றும் முக்கியமான நட்பு நாடுகளுக்கு விளக்கமளிக்க செல்ல இருக்கும் அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் குழுவினை வழிநடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்திருப்பதற்கு சசி தரூர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது … Read more

‘அன்று அதிகாலை 2.30 மணிக்கு தகவல் கிடைத்தது’ – இந்திய தாக்குதல் பற்றி மனம் திறந்த பாக். பிரதமர்

இஸ்லாமாபாத்: ஆபரேஷன் சிந்தூரின்போது தங்கள் நாட்டின் முக்கிய விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது பற்றி பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முதன்முறையாக வெளிப்படையாகப் பேசியுள்ளார். கடந்த 10-ம் தேதி அதிகாலை 2.30 மணி அளவில் அந்தத் தகவலை ராணுவ தளபதி ஜெனரல் அசிம் முனீர் தன்னிடம் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார். முன்னதாக, நேற்று (வெள்ளிக்கிழமை) இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற நிகழ்வில் இதனை அவர் தெரிவித்துள்ளார். “மே.10 அதிகாலை 2.30 மணி அளவில் எனக்கு ஜெனரல் முனீர் … Read more

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்தியர் கைது… டாப் சீக்ரெட் தகவல்கள் லீக்! – பின்னணி என்ன?

India Pakistan War Ceasefire: பாகிஸ்தானுக்கு ஆதரவாக உளவு பார்ப்பது, ரகசிய தகவல்களை எதிரிகளிடம் பகிர்ந்ததாக கூறி ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரவி மோகன்-கெனிஷாவிற்கு ஆதரவாக பேசிய பிரபலம்! தொடர்ச்சியாக 4 வீடியோ பதிவு..

Suchitra About Jayam Ravi Kenisha Aarti : இணையமே ரவி மோகன்-கெனிஷா குறித்து பேசி வரும் நிலையில், பிரபலம் ஒருவரும் அவர்களுக்கு ஆதரவாக பேசி இருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.