டாஸ்மாக் இயக்குநர் விசாகனை விசாரணைக்கு அழைத்துச் சென்றது அமலாக்கத் துறை: அடுத்து என்ன?

சென்னை: சென்னையில் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளின் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அதிரடி சோதனை மேற்கொண்ட நிலையில், டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகனை அமலாக்கத் துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றது பரபரப்பை உருவாக்கியுள்ளது. டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல மணப்பாக்கம் சி.ஆர்.புரத்தில் உள்ள டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் இல்லத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. மேலும், சூளைமேடு பகுதியில் இருக்கும் எஸ்.என்.ஜே நிறுவனம், … Read more

இமாச்சலில் இரண்டரை ஆண்டுகளில் 1,200 அரசுப் பள்ளிகள் மூடல் – காரணம் என்ன?

சிம்லா: கடந்த இரண்டரை ஆண்டுகளில் இமாச்சலப் பிரதேசத்தில் மொத்தம் 1,200 பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக அம்மாநில கல்வி அமைச்சர் ரோஹித் தாக்கூர் தெரிவித்தார். இது குறித்து விளக்கம் அளித்துள்ள இமாச்சலப் பிரதேச கல்வி அமைச்சர் ரோஹித் தாக்கூர், “கடந்த இரண்டரை ஆண்டுகளில் மூடப்பட்ட 1,200 பள்ளிகளில் 450 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பூஜ்ஜியமாக இருந்ததால் மூடப்பட்டன. மற்றவை குறைந்த மாணவர் சேர்க்கை காரணமாக இணைக்கப்பட்டன. மாநில அரசின் கல்வித் துறையை வலுப்படுத்த பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டு வருகிறது. … Read more

’ஐபிஎல் விளையாட இந்தியா போகாதீங்க..’ முன்னாள் மும்பை இந்தியன்ஸ் பிளேயர் பகீர் கருத்து

IPL Latest News : இந்தியா-பாகிஸ்தான் பதற்றம் காரணமாக, ஐபிஎல் 2025 சில நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இப்போது போட்டி மே 17, அதாவது நாளை முதல் மீண்டும் தொடங்குகிறது. ஐபிஎல் தொடர் நிறுத்தப்பட்ட பிறகு, பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் தங்கள் நாடுகளுக்குத் சென்ற நிலையில் இப்போது மீண்டும் இந்தியாவுக்கு வரத் தொடங்கியுள்ளனர். அதே நேரத்தில், சில வீரர்கள் காயம் மற்றும் சர்வதேச போட்டிகளின் காரணமாக ஐபிஎல் விளையாட வர மறுத்துவிட்டனர். இதற்கிடையில், ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் … Read more

Maaman: "கதை நன்றாக இருந்தால் படம் ஓடப் போகுது; இப்படி பண்றது முட்டாள்தனம்" – கண்டித்த சூரி

சூரி நடித்துள்ள ‘மாமன்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் ராஜ் கிரண், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, ஸ்வாசிகா, பாலசரவணன் எனப் பலரும் நடித்திருக்கிறார்கள். மாமன் காமெடி கலந்த எமோஷனல் திரைப்படமாக ‘மாமன்’ உருவாகியிருக்கிறது. இப்படம் வெற்றியடைய வேண்டும் என சூரியின் ரசிகர்கள் சிலர் மண் சோறு சாப்பிட்டிருக்கிறார்கள். அந்த விஷயத்தைக் கண்டித்து காட்டமாக பேசியிருக்கிறார் சூரி. ரொம்ப முட்டாள்தனமானது சூரி பேசுகையில், ” இந்த படம் வெற்றியடையணும்னு என்னுடைய ரசிகர்கள் மண் சோறு … Read more

பாகிஸ்தானிடம் பயங்கரவாதிகள் ரூ. 14 கோடி நிதி பெற்றதாக ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு

புஜ் பாகிஸ்தானிடம் இருந்து பயங்கராவதிகள் ரூ. 14 கோடி நிதி உதவி பெற்றதாக ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறி உள்ளார்’ இன்று குஜராத் மாநிலம் பூஜ் விமானப்படை தளத்தில் மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் , ”நமது வீரமிக்க வீரர்களை பாராட்ட வந்துள்ளேன். காயமடைந்த நமது வீரர்களின் துணிச்சலுக்கு தலை வணங்குகிறேன். உங்கள் கண்காணிப்பின் கீழ் இந்தியாவின் எல்லைகள் பாதுகாப்பாக உள்ளன. பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியின் சின்னம் புஜ் மீண்டும் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் வளர்க்க தொடங்கி … Read more

கர்நாடகாவில் 3-வது முறையாக மதுபானங்கள் விலை உயர்வு

பெங்களூரு, கர்நாடகத்தில் கடந்த 2023-ம் ஆண்டு முதல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. ஆட்சிக்கு வந்த பின்னர் காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல், பெண்களுக்கு அரசு பஸ்களில் இலவச பயணம் உள்ளிட்ட 5 உத்தரவாத திட்டங்களை படிப்படியாக அமல்படுத்தியது. இந்த திட்டங்கள் அனைத்தும் தற்போது நடைமுறையில் உள்ளன. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபிறகு கர்நாடகத்தில் 2 முறை மதுபானங்கள் விலை உயர்த்தப்பட்டது. இந்தநிலையில், தற்போது மாநிலத்தில் 3-வது முறையாக மதுபானம் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சமீபத்தில் தான் பீர் … Read more

ஷான் டெய்டின் அனுபவம் எங்களுக்கு உதவும் – வங்காளதேச வீரர்

டாக்கா, வங்காளதேச கிரிக்கெட் அணி தற்போது (நாளை) யு.ஏ.இ-க்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் நிறைவடைந்ததும் பாகிஸ்தானுக்கு செல்லும் வங்காளதேச அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் நிறைவடைந்ததும் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்காளதேச அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இந்நிலையில், வங்காளதேச கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்சியாளராக ஆஸ்திரேலிய … Read more

சீனாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவு

பிஜீங், சீனாவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 6.29 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் யுனன் மாகாணம் குன்மிங் நகரை மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன. அதேவேளை, இந்த நிலநடுக்கத்தால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. 1 More update தினத்தந்தி Related Tags : China  earthquake  சீனா  நிலநடுக்கம் 

குப்பைத் தொட்டியில் சடலமாகக் கிடந்த ஒரு வயது பெண் குழந்தை; விசாணையில் போலீஸார்-நடந்தது என்ன?

உத்திரப்பிரதேச மாநிலம், கான்பூரைச் சேர்ந்தவர்கள் ரமேஷ்குமார்- காஜல் தம்பதி. இவர்களுக்கு ஆர்கேஷ் (4) என்ற மகனும் மஹி (1) என்ற மகளும் இருந்தனர். இவர்கள் குடும்பத்துடன் திருப்பூர், வீரபாண்டி, சுண்டமேடு பகுதியில் உள்ள தனியார் டையிங் காம்பவுண்டில் குடியிருந்து வந்தனர். இந்நிலையில், ரமேஷ்குமார் வேலைக்குச் சென்ற நிலையில் காஜல் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அப்போது 1 வயது பெண் குழந்தை மஹி காம்பவுண்டில் விளையாடி கொண்டிருந்தார். தீடிரென குழந்தையை காணவில்லை. அப்போது தேடிப்பார்த்தபோது காம்பவுண்டில் இருந்த குப்பைத் … Read more

அடுத்த 2 நாட்களுக்கு டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் நாளை (மே 17) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (மே 16), தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், … Read more