3 நாட்கள், 2 என்கவுன்ட்டர்கள், 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை – காஷ்மீரில் நடந்தது என்ன?
ஸ்ரீநகர்: காஷ்மீரில் கடந்த 3 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட 2 முக்கிய நடவடிக்கைகளில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதை அடுத்து, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, அம்மாநிலத்தின் தெற்கு காஷ்மீரில் இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், தெற்கு காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு பெரிய நடவடிக்கைகளில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். தெற்கு காஷ்மீரின் புல்வாமா … Read more