இஸ்ரேல்- ஹமாஸ் போர்: காசாவில் பலி எண்ணிக்கை 53 ஆயிரமாக உயர்வு

காசா சிட்டி, காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி .இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், … Read more

Protest Haka: மாவோரி பழங்குடியின எம்.பி-க்கள் சஸ்பெண்ட்; நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் நடவடிக்கை!

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வைதாங்கி ஒப்பந்தத்தில் மாற்றம் செய்ய நியூசிலாந்து நாடளுமன்றத்தில் ஒரு மசோதா கொண்டுவரப்பட்டது. இதற்கு எதிராக மாவோரி இன எம்.பி ஹனா, மாவோரி இன மக்களின் பாரம்பர்ய பாடலை பாடியவாரே அந்த மசோதாவின் நகலை கிழித்தார். அவையில் தன் எதிர்ப்பை இவ்வாறாக காட்டினார். அவருடன் மற்ற மாவோரி இன எம்.பி க்களும் பாடலை பாடி தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். வைதாங்கி ஒப்பந்தம்: இது நியூசிலாந்தின் வரலாறு , அதன் அரசியலமைப்பு மற்றும் அதன் … Read more

தனித்துப் போட்டியிட்டாலும் 40 தொகுதிகளில் வெற்றி: பாமகவினருக்கு ராமதாஸ் சொன்ன வியூகம்!

விழுப்புரம்: வரும் 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி நிச்சயம். இருப்பினும் தனித்துப் போட்டியிட்டாலும் குறைந்தது 40 தொகுதிகளிலாவது பாமக வெற்றி பெற வேண்டும் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் தைலாபுரத்தில் அக்கட்சியின் மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. ஆனால் இக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி கலந்துகொள்ளவில்லை. இதனையடுத்து பெரும்பாலான பாமக நிர்வாகிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. இந்த கூட்டத்தையொட்டி செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், “50 தொகுதிகளில் வெற்றி … Read more

மே 20 முதல் 30 வரை 15 மாநிலங்களில் ’ஜெய் ஹிந்த் சபா’ கூட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு

புதுடெல்லி: நாட்டின் 15 மாநிலங்களில் ‘ஜெய் ஹிந்த் சபா’ எனும் பெயரில் காங்கிரஸ் கட்சி கூட்டங்களை நடத்த இருக்கிறது. மே 20-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை இது நடைபெற இருக்கிறது. காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 2-ம் தேதி நடந்த தாக்குதலில் 26 பேர் பலியாகினர். இதற்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாதிகளின் நிலைகள் மீது துல்லிய தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து இரண்டு … Read more

ஹாங்காங், சிங்கப்பூரில் மீண்டும் கரோனா பரவல்: சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை

புதுடெல்லி: ஆசியாவில் பல்வேறு பகுதிகளிலும் மீண்டும் கரோனா பரவல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் கரோனா வேகமாகப் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளையே அச்சத்தில் ஆழ்த்தியது. மேலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அதோடு, பொருளாதார நெருக்கடியானது வல்லரசு நாடுகளையே திணறடித்தது. தற்போதுதான் பல நாடுகளும் அந்தத் தாக்கத்திலிருந்து மீண்டு வருகின்றன. இந்நிலையில், ஆசியாவில் பல்வேறு பகுதிகளிலும் மீண்டும் கரோனா பரவல் … Read more

FMCG துறைக்கு ஒரு நிலையான மாதிரியாகத் திகழும் பதஞ்சலியின் பேக்கேஜிங்

Patanjal’s Packaging: பதஞ்சலியின் பேக்கேஜிங் ஏன் FMCG துறைக்கு ஒரு நிலையான மாதிரியாகக் கருதப்படுகிறது என்பதைப் பற்றி இந்த பதிவில் புரிந்துகொள்வோம்.

தற்போது தான் நிம்மதியாக இருக்கிறேன் – சூசகமாக சொன்ன அண்ணாமலை

பாஜகவில் தற்பொழுது எந்த பதவியும் இல்லாமல் தான் கூண்டுக்கிளியாக தொண்டனாக நிம்மதியாக குடும்பத்தோடு வாழ்ந்து வருகிறேன் என்று அண்ணாமலை திருவண்ணாமலையில் பேட்டி.

ஆசை காட்டி மோசம் செய்த பிசிசிஐ.. பார்டர் கவாஸ்கர் தொடரின்போது நடந்தது என்ன?

இந்தியா கடைசியாக ஆஸ்திரேலியாவுடன் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடியது. 5 போட்டிகள் கொண்ட இத்தொடரில் இந்திய 1 போட்டியில் மட்டுமே வென்றது. 1 போட்டி டிராவாகவும் மற்ற மூன்று போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி வென்று தொடரையும் கைப்பற்றியது. இந்த நிலையில், இத்தொடரின் போதுதான், பிசிசிஐ விராட் கோலிக்கு கேப்டன் பதவி கொடுக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் போட்டியை இந்தியாவும் இரண்டாவது போட்டியை ஆஸ்திரேலியாவும் வென்றது. இச்சூழலில் கடைசி மூன்று போட்டிகளுக்கும் … Read more

மாமன் விமர்சனம்: உறவுச் சிக்கலைப் பேசும் மெலோடிராமா; ஆனால் வலிந்து திணிக்கப்பட்ட அந்த எமோஷன்கள்?!

திருச்சி மாவட்டத்தில் இனிப்பு பலகார நிறுவனத்தை நடத்தி வருகிறார் சூரி. தந்தையை இழந்த அவருக்கு, தன் அக்கா சுவாசிகாதான் உயிர். சுவாசிகாவிற்குத் திருமணம் ஆகி, 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், குழந்தை இல்லாததால் குடும்பத்தாரும் சுற்றத்தாரும் அவரது மனதைக் காயப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள். இந்நிலையில், கருவுறும் சுவாசிகா ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கிறார். அதீத பாசத்தைத் தன் அக்கா மகன் பிரகீத் சிவன் மீது பொழிந்து வளர்க்கிறார் தாய்மாமன் சூரி. இதனிடையே சூரி தன் காதலி ஐஸ்வர்யா லெட்சுமியை மணமுடிக்கிறார். … Read more

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை.. நடந்தது வெறும் டிரெய்லர் மட்டுமே: ராஜ்நாத் சிங்

‘ஆபரேஷன் சிந்தூர்’ இன்னும் முடிவடையவில்லை. நடந்தது வெறும் டிரெய்லர்தான். சரியான நேரம் வரும்போது, ​​முழுப் படத்தையும் உலகிற்குக் காண்பிப்போம் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். குஜராத்தில் உள்ள பூஜ் விமானப்படை தளத்திற்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (வெள்ளிக்கிழமை) வருகை தந்தார். கடந்த வார மோதலின் போது பாகிஸ்தான் இராணுவம் இந்த விமானப்படை தளத்தை குறிவைத்தது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீருக்குச் சென்ற அவர், கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் சர்வதேச எல்லையில் … Read more