இன்று மாலை அதிமுக செயற்குழு கூட்டம்

சென்னை இன்று மாலை அதிமுக செயற்குழுக் கூட்டம் கூட உள்ளது. விதிப்படி இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு 2 முறை செயற்குழு கூட்டத்தையும், ஒரு முறை பொதுக்குழு கூட்டத்தையும் நடத்த வேண்டும். இதையொட்டி அதிமுக செயற்குழு கூட்டம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை நடைபெறுகிறது. மேலும் இந்த கூட்டத்திற்கு அவை தலைவர் தமிழ் மகன் உசேனும்  தலைமை தாங்குகிறார்.  கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள், தலைமை கழகச் செயலாளர்கள், மாவட்ட … Read more

Vizhinjam: `எங்கள் பார்ட்னர் அதானி' கேரள அமைச்சர் பேச்சு; `நல்ல மாற்றம்' பிரதமர் மோடி பாராட்டு

விழிஞ்ஞம் வர்த்தக துறைமுக திறப்புவிழா கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே அமைந்துள்ள விழிஞ்ஞம் அதானி வர்த்தக துறைமுக திறப்புவிழா இன்று நடைபெற்றது. விழிஞ்ஞம் துறைமுக திறப்பு விழாவில் சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்கள், திருவனந்தபுரம் நாடாளுமன்ற தொகுதி எம்.பி-யான காங்கிரஸ் முக்கிய தலைவர் சசிதரூர், கோவளம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். இதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை. கேரள துறைமுகத்துறை அமைச்சர் வாசவன், கேரளா முதல்வர் … Read more

மதுரை கிரானைட் முறைகேடு: அமலாக்கத் துறை வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

மதுரை: மதுரை கிரானைட் மோசடி தொடர்பான அமலாக்கத் துறை வழக்கில் சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளனர். மதுரை மாவட்டம் மேலூரில் கிரானைட் மோசடி தொடர்பாக ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனம் மற்றும் நிறுவனத்தின் இயக்குனர்களான நாகராஜன், துரை தயாநிதி (முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன்) ஆகியோர் மீது கீழவளவு போலீஸார் கிரானைட் மோசடி வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு கிரானைட் மோசடி வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் … Read more

‘பல்டி’ முதல் ‘காப்பி’ வரை: சாதிவாரி கணக்கெடுப்பு முடிவை முன்வைத்து மோடி அரசு மீது காங். விமர்சனம்

புதுடெல்லி: “நல்ல திட்டங்கள், கொள்கைகளை முதலில் எதிர்த்து, அதுகுறித்து அவதூறு பரப்பி, பின்னர் மக்கள் அளிக்கும் நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் அதனையே ஏற்றுக்கொள்ளும் பாஜகவின் முந்தைய பாணியிலேயே சாதிவாரி கணக்கெடுப்பு முடிவும் அமைந்திருக்கிறது” என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் விவரம்: “பல ஆண்டுகளாக சாதிவாரி கணக்கெடுப்பை ஒடுக்க முயன்ற மோடி அரசு, … Read more

பட்ஜெட் விலையில் விவோ Y19 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

சென்னை: இந்தியாவில் விவோ Y19 5ஜி ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் இப்போது இந்தியாவில் … Read more

தேவதாசின் தேவதை: காதல் மணம் கமழும் ஆல்பம் பாடல்!

மாஸ் ரவியின் ஒளிப்பதிவு இயக்கத்தில் ‘தேவதாசின் தேவதை’ என்றொரு தலைப்பில் காதல் மணம் கமழும் ஆல்பம் பாடல் உருவாகி உள்ளது. 

Ajith Kumar: “கடனை அடைப்பதற்குதான் சினிமாவிற்கு வந்தேன்!'' – பகிர்கிறார் அஜித்

கடந்த திங்கட்கிழமை நடிகர் அஜித் ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடமிருந்து பத்ம பூஷன் விருதைப் பெற்றார். விருது பெற்ற கையோடு இந்திய ஊடகங்கள் சிலவற்றுக்கு பேட்டிகள் கொடுத்திருக்கிறார். நடிகர் அஜித் குமார் இது நீண்ட வருட இடைவெளிக்குப் பிறகு அஜித் கொடுக்கும் பேட்டி என்பதால், அவர் பேசிய பல விஷயங்களும் இணையத்தில் வைரலாயின. ‘இந்தியா டுடே’ ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், சினிமாவுக்கு வந்ததற்கான காரணம் குறித்தும், அவர் நடித்த படங்களில் அவருக்கு மிகவும் பிடித்த … Read more

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை பங்களாதேஷ் கைப்பற்ற வேண்டும்… யூனுஸ் உதவியாளரின் ஆத்திரமூட்டும் பேச்சு…

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை பங்களாதேஷ் கைப்பற்ற வேண்டும் என்று அந்நாட்டின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸின் உதவியாளர் கூறியுள்ளார். இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் பாகிஸ்தானை இந்தியா தாக்கினால் இந்தியாவின் ஏழு வடகிழக்கு மாநிலங்களையும் பங்களாதேஷ் கைப்பற்ற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். வங்கதேச ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் (ஓய்வு) ALM ஃபஸ்லுர் ரஹ்மானின் இந்த பேச்சு இந்திய அதிகாரிகளை ஆத்திரமடையச் செய்துள்ளது. பங்களாதேஷ் பிரதமர் ஷேக் அசினா-வுக்கு … Read more

Ajith: “ஒரு குற்றவுணர்ச்சியால் தான் `நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்தேன்!'' – அஜித் ஓப்பன் டாக்

அஜித் நடித்திருந்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகியிருந்தது. கடந்த திங்கட்கிழமை ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவரிடமிருந்து அஜித் பத்ம பூஷன் விருதைப் பெற்றார். இதைத் தொடர்ந்து பல ஊடகங்களுக்கும் பேட்டி அளித்திருக்கிறார் அஜித். Ajith – Nerkonda Paarvai அப்படி ‘இந்தியா டுடே’ ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில் ‘பிங்க்’ படத்தை ரீமேக் செய்ததற்கான காரணத்தைக் கூறியிருக்கிறார். அந்தத் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பேசத் தொடங்கிய அஜித், “நான் ‘பிங்க்’ திரைப்படத்தை தமிழில் … Read more

பாஜக கூட்டணிக்கு பாராட்டு முதல் திமுக அரசுக்கு கண்டனம் வரை: அதிமுக செயற்குழுவின் 16 தீர்மானங்கள்

சென்னை: அதிமுக தலைமையகமான எம்ஜிஆர் மாளிகையில், அக்கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று (மே 2) நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றின் விவரம்: > 2026 சட்டமன்றத் தேர்தலில், திமுக-வை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு அதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு, மகத்தான வெற்றியைப் பெறுவதற்கு, அதிமுக தலைமையிலான வெற்றிக் கூட்டணியின் தொடக்கமாக பாஜகவுடன் கூட்டணியை அமைத்தும், திமுக என்கிற பொது எதிரியை … Read more