ஐ.பி.எல். போட்டிகளை நடத்துங்கள் ஆனால் இது மட்டும் வேண்டாம் – சுனில் கவாஸ்கர் வேண்டுகோள்

மும்பை, பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்தது. இதன் காரணமாக இந்தியாவில் நடந்து வந்த 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஒருவார காலம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தொடர்ந்து போர் பதற்றம் தணிந்ததை தொடர்ந்து அணி நிர்வாகிகள், ஒளிபரப்புதாரர்கள், பாதுகாப்பு முகமைகள் உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்களுடன் ஆலோசனை நடத்திய இந்திய கிரிக்கெட் வாரியம் ஐ.பி.எல். போட்டி வருகிற 17-ந்தேதி மீண்டும் தொடங்கும் என அறிவித்துள்ளது. 13 லீக் ஆட்டங்கள் மற்றும் இறுதிப்போட்டி உள்பட … Read more

கனடா நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரியாக அனிதா ஆனந்த் நியமனம்

ஒட்டாவா, வட அமெரிக்க நாடான கனடாவில் பார்லிமென்ட் தேர்தல் நடந்தது. இதில், ஆளும் லிபரல் கட்சி, எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் மற்றும் புதிய ஜனநாயக கட்சி ஆகியவை களமிறங்கியது. இத்தேர்தலில், மார்க் கார்னி தலைமையிலான ஆளும் லிபரல் கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது. தற்போது கனடா பிரதமர் மார்க் கார்னி, புதிய அமைச்சரவை குறித்து அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் கனடாவின் வெளியுறவுத் துறை மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார். மந்திரியாக … Read more

பிரஜின்-சாண்ட்ரா: ரசிகைகள் கொண்டாடிய ஆங்கர்; டிவியின் முதல் Cute Couple |இப்ப என்ன பண்றாங்க? பகுதி 9

ஒரு காலத்தில் ஸ்கிரீனில் பிஸியாக இருந்து ரசிகர்களாலும் கவனிக்கப்பட்டவங்க இவங்க. விரும்பி பிரேக் எடுத்தாங்களா, சூழ்நிலையா தெரியாது. இப்போது மேக் அப் ஷூட்டிங் என எந்தப் பரபரப்புமின்றி இருக்கிறார்கள். ‘இப்ப என்ன பண்றாங்க?’ என இவர்களைத் தேடிப் பிடித்தோம். விகடன் டாட்.காமில் (vikatan.com) இனி ஒவ்வொரு வாரமும் நீங்கள் இவர்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம். பிரஜின் – சாண்ட்ரா குவிந்த ரசிகைகள்.. இடம் மாறிய இதயங்கள்! இன்றைக்கு சீரியலில் ஜோடியாக நடித்தவர்கள் ரியல் வாழ்க்கையில் ஜோடி சேர்வது சகஜமாகி விட்டது. இப்படி … Read more

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களுக்கான உதவித் தொகையை தமாதமின்றி வழங்க கோரிக்கை

ராமேசுவரம்: இலங்கை சிறையில் உள்ள மீனவர்களுக்கான உதவித் தொகையை தாமதமின்றி வழங்க கோரிக்கை விடப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களின் குடும்பத்திற்கு, தமிழக அரசின் உதவித் தொகையாக ரூ.350 மீனவளத் துறை மூலம் வழங்கப்படுகிறது. இந்த தொகை மீனவர்கள் சிறைக்குள் இருக்கும் நாட்களை மொத்தமாக கணக்கீடு செய்து நாள் ஒன்றுக்கு ரூபாய் 350 வீதம் அந்தந்த பகுதி மீன்வளத் துறை அலுவகம் மூலம் பாதிக்கப்பட்ட மீனவர்களின் வங்கிக் கணக்கில் வரவு … Read more

‘என் மகன் நாடு திரும்ப உதவிய அனைவருக்கும் நன்றி’ – பிஎஸ்எஃப் வீரரின் தந்தை நெகிழ்ச்சி

ஹூக்லி: “பாகிஸ்தானிடம் பிடிபட்டிருந்த எனது மகனை மத்திய, மாநில அரசுகள் மீட்டுத் தந்திருக்கின்றன, அனைவருக்கும் நன்றி.” என்று பிஎஸ்எஃப் வீரர் பி.கே. ஷாவின் தந்தை நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 23-ம் தேதி எல்லையை தாண்டியதாக பாகிஸ்தான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பி.கே.ஷா இன்று (மே.14) இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்நிலையில், அவரது தந்தை மற்றும் மனைவி மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். பி.கே.ஷாவின் தந்தை போலா ஷா, “மத்திய மாநில அரசுகள் எனது மகனை … Read more

6,000+ ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மைக்ரோசாப்ட்!

புதுடெல்லி: மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது பணியாளர்களில் 3 சதவீதத்தை, அதாவது 6,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் உலக அளவில் சுமார் 2,28,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது மைக்ரோசாஃப்ட் நிறுவனம். அதே போல் 10,000 ஊழியர்களை கடந்த 2023 ஆம் ஆண்டு வேலையை விட்டு அனுப்பியிருந்தது. இந்நிலையில், தற்போது, மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது பணியாளர்களில் 3 சதவீதத்தை, அதாவது 6,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் … Read more

10 ஆம் வகுப்பு SSLC ரிசல்டை முன்கூட்டியே தெரிந்து கொள்வது எப்படி?

TN SSLC Result 2025 : எஸ்எஸ்எல்சி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை முன்கூட்டியே தெரிந்து கொள்வது எப்படி? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Heart Beat 2: `இளையராஜா சார் உன் கண்ணீர் தூய்மையாக இருக்குனு சொன்னாரு’ – ஹார்ட் பீட் 2 டீம் பேட்டி

லாங் ஃபார்மெட் சீரிஸாக ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியான ‘ஹார்ட் பீட்’ வெப் சீரிஸ் பலருக்கும் ஃபேவரைட்! மெடிகல் கதைக்களத்தில் டிராமா, காதல், காமெடி என கலக்கலாக முதல் சீசனில் கதை சொல்லியிருந்தார்கள். இதோ, முதல் சீசனுக்கு கிடைத்த அபரிமிதமான வரவேற்பைத் தொடர்ந்து இரண்டாவது சீசனும் ரிலீஸுக்கு தயாராகிவிட்டது. Heart Beat 2 Team Interview இரண்டாவது சீசனின் ரிலீஸையொட்டி ‘ஹார்ட் பீட் 2’ குழுவைச் சந்தித்து சாட் போட்டோம். இரண்டாவது சீசனில் புதியதாக அக்ஷதாவும் இணைந்திருக்கிறார். … Read more

வந்தாச்சி சாம்சங்கின் மிக மெல்லிய ஸ்மார்ட்ஃபோன்.. விலை எவ்வளவு?

Samsung Thinnest Smartphone Samsung Galaxy S25 Edge: சாம்சங் நிறுவனம் தற்போது மிக மெல்லிய கேலக்ஸி எஸ்25 எட்ஜ் (Galaxy S25 Edge) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்ஃபோன் மிகவும் மெல்லிய 5.8மிமீ சேசிஸ் மற்றும் இலகுரக வடிவமைப்பைக் கொண்டுள்ளது, இது கேலக்ஸி எஸ் தொடரில் மிக மெல்லிய ஸ்மார்ட்ஃபோன் ஆகும், அதனுடன் இந்த ஆண்டு இறுதிக்குள் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படும், அதனுடன் ஆப்பிளின் வரவிருக்கும் ஐபோன் 17 ஏர் … Read more

இன்று கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

திருவனந்தபுரம் இன்று கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,’   இந்தியாவில் வழக்கமாக தென்மேற்கு பருவம111 மழை தொடங்கி விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது  அதைப் போல் கேரளாவில் 4 நாட்களுக்கு முன்னதாக வரும் 27ம் தேதி பருவ மழை தொடரும் என்று மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று திருவனந்தபுரம், கோழிக்கோடு, பத்தனம்திட்டா, வயநாடு ஆகிய 4 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்பதால் இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.