‘பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு’ – தண்டனை விதிக்கப்பட்டோர் தரப்பு தகவல்

கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், கோவை மகளிர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என்று தண்டனை விதிக்கப்பட்டவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவையை அடுத்த பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கு தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கடந்த 2019-ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது நடந்த இச்சம்பவம் தொடர்பாக முதலில் பொள்ளாச்சி போலீஸார் விசாரித்தனர். பின்னர், சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்யப்பட்டு, பின்னர் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரித்தனர். மிகவும் … Read more

“என் மகள் பெயரில் போலி எக்ஸ் கணக்கு” – விரைவு நடவடிக்கைக்கு அகிலேஷ் யாதவ் கோரிக்கை

லக்னோ: தனது மகள் பெயரில் போலி எக்ஸ் கணக்கு தொடங்கி, அதனைக் கையாண்டு வருபவர்களை அடையாளம் கண்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். அகிலேஷ் யாதவ் மகளின் பெயரில் தொடங்கப்பட்டுள்ள சமூக வலைதள கணக்கில் பிரதமர் மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் மார்பிங் செய்யப்பட்ட படங்கள் பகிரப்பட்டுள்ளன. இது குறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவரும், உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் வெளியிட்டுள்ள … Read more

சமூக தொழில்முனைவுக்கு புதிய வடிவத்தை அளிக்கும் சுவாமி பாபா ராம்தேவ், ஆச்சார்யா பால்கிருஷ்ணா

Patanjali: பதஞ்சலி நிறுவனம் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) துறையை ஆதரித்து சிறு தொழில்களுக்கு ஒரு பெரிய தளத்தை வழங்கியுள்ளது.

வரலட்சுமியின் நடிப்பில் 'தி வெர்டிக்ட் '.. வெளியானது டிரெய்லர்

வரலட்சுமியின் நடிப்பைப் பாராட்டிய ஹாலிவுட் நடிகர்கள் : ‘தி வெர்டிக்ட் ‘ திரைப்பட விழாவில் வெளியிடப்பட்ட தகவல்!

Tourist Family: "இந்தப் படத்திற்குப் பிறகு என்னுடைய சம்பளம்…" – சசிகுமார் ஓப்பன் டாக்

`டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்று வருகிறது. அந்நிகழ்வில் பேசிய சசிகுமார், “ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இந்தப் படம் வெற்றி அடைந்ததால் என்னுடைய சம்பளத்தை ஏற்றிவிடுவீர்களா என்று பலரும் கேட்கிறார்கள். சம்பளம் ஏறாது. அதே சம்பளம்தான். பல ஆண்டுகளுக்குப் பிறகு எனக்கு இப்படி ஒரு வெற்றி கிடைத்திருக்கிறது. டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில்… இதை என்னுடைய வெற்றியாக நான் நினைக்கவில்லை. சசிகுமார் ஜெயித்து விட்டார், தயாரிப்பு நிறுவனம் ஜெயித்து விட்டது என்று நினைக்காதீர்கள். … Read more

ரூ.20,000 விலைக்குள் பெஸ்ட் ஸ்மார்ட்போன் வாங்கலாம்.. எந்த போன்?

Mobile Phones Under 20000 in India: 20 ஆயிரத்துக்கும் குறைவான ஸ்மார்ட்போன்கள் பல இருக்கிறது. இந்த வரிசையில் வரும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் சமீபத்திய அம்சங்களுடன் பொருத்தப்பட்டுள்ளன. நீங்களும் 20 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் புதிய ஸ்மார்ட்போனை தேடுகிறீர்கள் என்றால், இந்தக் கட்டுரையில் முழு தகவலையும் பெறலாம். இதில் நீங்கள் பல 5G போன்களின் விருப்பத்தை பெறுவீர்கள். ரெட்மி நோட் 14 5ஜி | Redmi Note 14 5GRedmi Note 14 ஒரு பிரபலமான ஸ்மார்ட்போன் … Read more

3 தீவிரவதிகள் பற்றி தகவலளித்தால் ரூ. 20 லட்சம் பரிசு

ஸ்ரீநகர் பஹல்காம் தாக்குதலுக்கு தொடர்புடைய 3 தீவிரவாதிகல் பற்றி தகவலளித்தால் ரூ. 20 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 22 ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டதற்கு பாகிஸ்தானை சேர்ந்த மிக முக்கிய பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பு ஒன்று பொறுப்பேற்றது. எனவே இந்தியா கடந்த 7-ந் தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் ராணுவ தாக்குதல் தொடங்கி பாகிஸ்தானின் பயங்கரவாத … Read more

டெஸ்ட் கேப்டன் பதவியை பும்ராவுக்கு கொடுங்கள் – சுனில் கவாஸ்கர்

புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் அடுத்த மாதம் 20ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியான நிலையில், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த 7ம் தேதி ரோகித் சர்மா அறிவித்தார். ரோகித்தை தொடர்ந்து விராட் கோலியும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து … Read more

Modi: `அணு ஆயுத மிரட்டலுக்கு அடி பணிய மாட்டோம்; இந்தியா மீது கைவைத்தால்…' – பஞ்சாப்பில் மோடி உரை

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் மொத்தம் 26 பேர் உயிரிழந்த சம்பவம், நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்தப் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில்  ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் ஜம்மு – காஷ்மீர் எல்லையில் இருக்கும் தீவிரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது இந்திய ராணுவம். இதையடுத்து இரு நாடுகளும் தாக்குதல்களை நடத்த நாடு முழுவதும் போர் பதற்றம் ஏற்பட்டது. Operation … Read more

‘தூய்மைப் பணியாளர் திட்டத்தில் முறைகேடு’ – சிபிஐ விசாரணை கோரி சவுக்கு சங்கர் வழக்கு

சென்னை: தூய்மைப் பணியாளர்களை தொழில்முனைவர்களாக மாற்றும் திட்டத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் யூடியூபர் சவுக்கு சங்கர் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில், யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கல் செய்த மனுவின் விவரம்: “தூய்மைப் பணியாளர்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் அவர்களை தொழில்முனைவோர்களாக மாற்றுவதற்கான அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. அதேபோல, துாய்மை பணியாளர்களுக்கு 50 … Read more