இலவசங்களால் ‘உண்மையான அதிகாரமளித்தல்’ நிகழாது: குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர்

புதுடெல்லி: உண்மையான அதிகாரமளித்தல் என்பது இலவசங்கள், நன்கொடைகள் மூலம் நிகழாது என்றும், போதுமான ஆதரவு மற்றும் வழிகாட்டுதல் மூலம் அவர்கள் தாங்களாகவே அதிகாரம் பெறுவதே உண்மையான அதிகாரம் அளித்தலாக இருக்கும் என்றும் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் காரோ ஹில்ஸ், காசி ஹில்ஸ், ஜெயின்டியா ஹில்ஸ் பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் மேகாலயாவின் சுய உதவிக்குழுக்களின் உறுப்பினர்களிடம் உரையாற்றிய ஜெகதீப் தன்கர், “நமது நாட்டின் வடகிழக்கு பிராந்தியமானது சுற்றுலாப் பயணிகளுக்கு சொர்க்கமாகத் திகழ்கிறது. குறிப்பாக மேகாலயா, … Read more

CBSE Results 2025: நல்ல மார்க் எடுத்த மாநிலம் எது? தமிழ்நாட்டுக்கு எந்த இடம்? முழு லிஸ்ட்!

CBSE Results 2025 Region Pass Percentage List : CBSE தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி இருக்கிறது. இதில், மாநில வாரியான தேர்ச்சி விகிதத்தையும், தமிழ் நாடு எந்த இடத்தில் இருக்கிறது என்பதையும் இங்கு பார்ப்பாேம்.  

சேரன் முதன்முதலாக நடிக்கும் மலையாள படம் ‘நரிவேட்டை’!

Cheran Malayalam Debut Movie Narivetta :  ‘நரிவேட்டை’ திரைப்படம் மே 23, 2025-அன்று வெளியாகிறது. இது சேரன் அறிமுகமாகும் முதல் தமிழ் திரைப்படமாகும்.

Zee Exclusive: ரூ.150 கோடி அரசு நிலத்தை… ஓசூரில் பத்திரப்பதிவு செய்தது எப்படி?

Zee Exclusive: ஓசூரில் அரசுக்கு சொந்தமான 150 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்து அதிகாரிகள் முறைகேடு செய்தார்களா…? அப்படி என்னதான் நடந்தது என்பதை இதில் தெரிந்துகொள்ளலாம்.

Tourist Family: "எனக்கே டிக்கெட் கிடைக்கல; படம் வெற்றி அடையும்னு தெரியும்; ஆனா.." – இயக்குநர் அபிஷன்

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், ஸ்ரீஜா ரவி எனப் பலர் நடிப்பில் வெளியான படம் `டூரிஸ்ட் ஃபேமிலி’. இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இன்று படக்குழு நன்றி தெரிவிக்கும் விழாவை நடத்தி இருக்கிறது. டூரிஸ்ட் ஃபேமிலி இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், “இந்தப் படம் வெற்றிப் படமாக இருக்கும் என்று … Read more

Flipkart Big Bachat Days Sale: பிராண்டட் போன்களில் நம்ப முடியாத தள்ளுபடிகள்

Flipkart Big Bachat Days Sale: ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட்டில் தற்போது பிக் பச்சத் டேஸ் சேல் நடந்துவருகிறது. இந்த நேரத்தில், பிளிப்கார்ட்டில் மின்னணு பொருட்கள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் பெரும் தள்ளுபடியில் கிடைக்கின்றன. உயர் தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்ட மொபைலை வாங்க திட்டமிட்டிருக்கும் நபர்கள் இந்த பிக் சேவிங்ஸ் டேஸ் விற்பனை முடிவதற்குள் ஐபோன் 16 பிளஸ், ஐக்யூஓஓ நியோ 10ஆர் மற்றும் மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ போன்களை வாங்கலாம். இந்த விற்பனை மே … Read more

தேதி மாற்றப்பட்ட இளையராஜாவின் கோவை இசைக் கச்சேரி

கோவை வரும்  17 ஆம் தேதி கோவையில் நடக்க இருந்த இளையராஜா இசைக் கச்சேரி ஜூன் 7 க்கு மாற்றப்பட்டுள்ளது. தற்போது இசைஞானி இளையராஜா படங்களுக்கு இசையமைப்பது குறைந்துள்ளது என்றாலும் அடிக்கடி சில இடங்களில் இசைக் கச்சேரிகளை நடத்தி மக்களை மகிழ்வித்து வருகிறார். கோவையில் வருகிற 17ம் தேதி இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. கோவை மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கும்நிலையில், இசை நிகழ்ச்சி தற்காலிகமாக ஒத்திவைக்கபடுவதாக அறிவிக்கப்பட்டது. இளையராஜா நாடு தற்போது … Read more

ஜார்க்கண்ட்: சிறுமியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 6 பேர் கைது

கும்லா, ஜார்க்கண்டின் கும்லா மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை அன்று திருமண ஊர்வலம் நடைபெற்றது. இரவு 9 மணிக்கு நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் தங்களது பெற்றோருடன் கலந்துகொண்ட 4 சிறுமிகள், ஊர்வலத்தை விட்டு ஒதுக்குப்புறமாக இடத்திற்கு சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த 6 பேர் கொண்ட கும்பல், சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது. இதைக்கண்டு சுதாரித்துக்கொண்ட சிறுமிகள், அந்த இடத்தை விட்டு தப்பியோட முயற்சித்தனர். இதில் 3 பேர் அந்த கும்பலிடம் இருந்து தப்பித்தனர். எனினும், ஒரு சிறுமி அந்த … Read more

இத்தாலி ஓபன் டென்னிஸ்: ரோகன் போபண்ணா ஜோடி 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

ரோம், பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ள இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா – செக் குடியரசின் ஆடம் பாவ்லாசெக் ஜோடி, நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் – குரோஷியாவின் நிகோலா மெக்டிக் ஜோடியுடன் மோதியது. இந்த போட்டியின் முதல் செட்டை … Read more

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களுடன் விமானம் அனுப்பப்படவில்லை: சீனா திட்டவட்ட மறுப்பு

பீஜிங், பாகிஸ்தான் ராணுவத்துக்கு தேவையான பெரும்பான்மையான ஆயுதங்கள் சீனாவில் இருந்தே கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் சீனாவும், பாகிஸ்தானும் மிக நெருங்கிய நட்பு நாடுகளாக உள்ளன. கடந்த 2020-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை பாகிஸ்தான் 81 சதவீத ஆயுதங்களை சீனாவிடம் இருந்தே கொள்முதல் செய்யதுள்ளது என்று ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் விமானப்படையில் உள்ள ஜே-17 போர் விமானங்களை இரு நாடுகளும் கூட்டாக உற்பத்தி செய்கின்றனசமீபத்தில் பாகிஸ்தான், இந்தியாவுக்கு … Read more