இந்தியா பாக். எல்லை பகுதிகளில் ராணுவம் குவிப்பு! பாகிஸ்தானில் பதற்றம்

டெல்லி:  பயங்கரவாதிகளை ஒழிப்பது தொடர்பாக முப்படை தளபதிகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவை  ஆலோசனை கூட்டங்களைத் தொடர்ந்து   இந்திய எல்லையில் படைகள் ராணுவ துருப்புகள்  குவிக்கப்பட்டு வருகின்றனர். இதனால்,  எந்த நேரமும்  பாகிஸ்தான்மீத தாக்குதல் நடத்தப்படலாம் என  அஞ்சப்படுகிறது. இதனால் பாகிஸ்தான் மக்கள் பீதியில்உள்ளனர். கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள்  உள்பட 28 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவம், அந்த நாட்டு … Read more

'பஸ்ஸைப் பாதியில் நிறுத்தி டிரைவர் தொழுகை' – வைரல் வீடியோ; அமைச்சரின் அதிரடி நடவடிக்கை

கர்நாடகாவில் ஹூப்பள்ளி – ஹவேரி சாலையில் அரசு பேருந்து டிரைவர் ஒருவர் சாலையோரமாகப் பேருந்தை நிறுத்திவிட்டு தொழுகை செய்யும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், டிரைவர் சீட்டிற்குப் பின் இருக்கும் பயணிகள் சீட்டில் டிரைவர் தொழுகை செய்கிறார். பேருந்தின் ஜன்னலுக்கு வெளியே சில பேருந்துகள், மற்ற வாகனங்கள் போய்கொண்டிருப்பது தெரிகிறது. அந்தப் பேருந்தில் பயணிக்கும் பயணிகளோ, டிரைவருக்காகக் காத்திருக்கின்றனர் என்பதைப் பார்க்க முடிகிறது. இந்த வீடியோவைப் பயணி ஒருவர்தான் எடுத்துள்ளார். கர்நாடகா பஸ் டிரைவர் … Read more

மதுரை மாவட்ட ஆட்சியரை பணியிட மாற்றம் செய்யக்கோரி விசிக சாலை மறியல்

மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவை பணியிட மாற்றம் செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மேலூர் அருகே சிட்டம்பட்டி டோல்கேட் முன்பு இன்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மதுரை தல்லாகுளத்தில் ஏப்.14-ல் அம்பேத்கர் பிறந்த நாளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேர்தல் அங்கீகார பேரணி நடந்தது. அப்போது தல்லாகுளத்திலிருந்து அவுட்போஸ்ட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க பேரணி சென்றனர். அப்போது 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை பின்தொடர்ந்து வந்த மாவட்ட ஆட்சியர் காரில் … Read more

“நினைவிருக்கட்டும்… இது மோடியின் இந்தியா” – பயங்கரவாதிகளுக்கு அமித்ஷா எச்சரிக்கை!

புதுடெல்லி: நாட்டின் ஒவ்வொரு மூலையில் இருந்தும் பயங்கரவாதத்தை வேரோடு அகற்றுவது உறுதி. அது நிச்சயம் நிறைவேறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு முதல்முறையாக டெல்லியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் அமித்ஷா கலந்து கொண்டார். இதில் அவர் பேசியதாவது: “பயங்கரவாதிகள் போரில் வெற்றி பெற்றுவிட்டதாக நினைக்கக்கூடாது. இந்தப் போர் இன்னும் முடிவடையவில்லை. நாங்கள் அனைத்து பயங்கரவாதிகளையும் பழிவாங்குவோம். யாராவது ஒரு கோழைத்தனமான தாக்குதலை நடத்தி, அது அவர்களின் பெரிய வெற்றி … Read more

மாஸ் காட்டிய மும்பை பந்து வீச்சாளர்கள்.. தொடரை விட்டு வெளியேறிய ராஜஸ்தான்!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 50வது லீக் ஆட்டம் இன்று (மே 01) ஜெய்பூரில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.  அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் ரிக்கில்டன் களம் இறங்கினர். இவர்கள் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி … Read more

சாதிவாரி கணக்கெடுப்பு என்றால் என்ன? கடைசியாக எப்போது எடுக்கப்பட்டது ?

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதி கணக்கெடுப்புக்கு அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCPA) ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது. 2010 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சமூக-பொருளாதார மற்றும் சாதி கணக்கெடுப்பை (SECC – எஸ்இசிசி) நடத்த முடிவு செய்தது. மாநிலம் விட்டு மாநிலம் இடம்பெயர்வதால் வகுப்பு மாறுதல் மற்றும் ஓபிசி-எஸ்சி பிரிவுகள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்திருப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து அப்போதைய உள்துறை அமைச்சர் பி. … Read more

Vijay: த.வெ.க தலைவர் விஜய் மதுரையில் ரோட் ஷோ | Photo Album

விஜய் ரோட்ஷோ விஜய் ரோட்ஷோ விஜய் ரோட்ஷோ விஜய் ரோட்ஷோ விஜய் ரோட்ஷோ விஜய் ரோட்ஷோ விஜய் ரோட்ஷோ விஜய் ரோட்ஷோ விஜய் ரோட்ஷோ விஜய் ரோட்ஷோ விஜய் ரோட்ஷோ விஜய் ரோட்ஷோ விஜய் ரோட்ஷோ Source link

''100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு 5 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை'': கரூர் எம்.பி. குற்றச்சாட்டு

கரூர்: 100 நாள் வேலை தொழிலாளர்களுக்கு 5 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என கரூர் எம்.பி. செ.ஜோதிமணி குற்றம் சாட்டியுள்ளார். கரூர் அருகேயுள்ள அப்பிபாளையம் ஊராட்சி தேத்தம்பட்டியில் இன்று (மே 1ம் தேதி) கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கரூர் எம்.பி. செ.ஜோதிமணி செய்தியாளர்களிடம் கூறியது: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென காங்கிரஸ் தொடர்ந்து போராடியது. சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து காங்கிரஸ் கோரிக்கை விடுத்த போதெல்லாம் ராகுல்காந்தியை பாஜகவினர் கேலிக்குரியவராக சித்தரித்தனர். இப்போது சாதிவாரி கணக்கெடுப்புக்காக … Read more

''முஸ்லிம்களையோ, காஷ்மீரிகளையோ குறிவைக்காதீர்கள்'': உயிரிழந்த கடற்படை அதிகாரியின் மனைவி வேண்டுகோள்

புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் காரணமாக, முஸ்லிம்களையோ அல்லது காஷ்மீரிகளையோ குறிவைக்காதீர்கள் என்று தாக்குதலில் உயிரிழந்த கடற்படை அதிகாரி வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி வேண்டுகோள் விடுத்துள்ளார். வினய் நர்வாலின் 27வது பிறந்தநாளை முன்னிட்டு, ஹரியானாவின் கர்னாலில் இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், நர்வாலின் தாயார் மற்றும் மனைவி ஹிமான்ஷி உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய குருகிராமைச் சேர்ந்த முனைவர் பட்டம் பெற்ற ஹிமான்ஷி நர்வால், “அவர் எங்கிருந்தாலும், … Read more

பகல்காம் தாக்குதல்: அனைவரும் வேட்டையாடப்படுவார்கள் – சூளுரைக்கும் அமித் ஷா!

பகல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட ஒருவரை கூட விடப்போவதில்லை. அனைவரும் வேட்டையாடப்படுவார்கள் என இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.