டெஸ்ட் கிரிக்கெட்; விராட் கோலியின் இடத்திற்கு சரியான வீரர் யார்..? – புஜாரா பதில்

மும்பை, இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். இந்திய அணிக்காக கடந்த 2011-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆன அவர் 123 போட்டிகளில் விளையாடி அதில் 30 சதம் உட்பட 9,230 ரன்கள் குவித்துள்ளார். மேலும் 68 போட்டிகளில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ள விராட் அதில் 40 போட்டிகளை வென்று கொடுத்து இந்திய அணிக்காக அதிக வெற்றிகளை பெற்றுக்கொடுத்த … Read more

பள்ளி மீது போர் விமானம் வீசிய வெடிகுண்டு.. மாணவர்கள் 20 பேர் பரிதாப பலி

பாங்காக், மியான்மர் நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆங் சான் சூகியின் தலைமையிலான அரசை கவிழ்த்துவிட்டு ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது. ராணுவ ஆட்சிக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்து வருகிறது. பல கிளர்ச்சி அமைப்புகள் ராணுவ ஆட்சிக்கு எதிராக ஆயுதமேந்தி சண்டையிட்டு வருகின்றன. இதில் 6,600-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மத்திய மியான்மரின் தபாயின் நகரத்தில் உள்ள கிராமத்தின் மீது நேற்று காலை 9 மணி அளவில் … Read more

"வழக்கம் போல உங்கள் ஸ்டிக்கரைத் தூக்கிக் கொண்டு வராதீர்கள்" – முதல்வருக்கு இபிஎஸ் பதில்

கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம், நாட்டையே உலுக்கியிருந்தது. இந்த வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தராஜன், மணிவண்ணன், அருளானந்தம், ஹேரோன் பால், பாபு, அருண்குமார் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் அருளானந்தம், ஹேரோன் பால், பாபு ஆகியோர் அதிமுக பிரமுகர்கள். அப்போது அதிமுக ஆட்சி என்பதால் காவல்துறை குற்றவாளிகளுக்குச் சாதகமாகச் செயல்படுவதாகப் புகார் எழுந்தது. பொள்ளாச்சி பாலியல் வழக்கு பொள்ளாச்சி பாலியல் வழக்கு: `9 பேரும் … Read more

‘அந்த ‘சார்’கள் வெட்கித் தலைகுனியட்டும்’ – பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்புக்கு ஸ்டாலின் வரவேற்பு

சென்னை: “பொல்லாத அதிமுக நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது. அதிமுக குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்,” என்று பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்புக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பொல்லாத அதிமுக நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது. அதிமுக குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த ‘சார்’கள் மானமிருந்தால் … Read more

ஆதம்பூர் விமானப்படை தளத்தில் வீரர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி

புதுடெல்லி: பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்துக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, வீரர்களுடன் கலந்துரையாடி அவர்களின் துணிச்சலை பாராட்டினார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குக் காரணமாக இருந்த பயங்கரவாதிகளையும் அவர்களுக்கு துணை போனவர்களையும் எங்கிருந்தாலும் இந்தியா வேட்டையாடும் என்று பிஹாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி ஆவேச உரையாற்றினார். இதையடுத்து, கடந்த 7ம் தேதி இந்திய விமானப்படை 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இவற்றில் 5 முகாம்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும், 4 … Read more

இந்தியாவுடனான மோதலில் 11 வீரர்கள் உயிரிழப்பு – உறுதிப்படுத்திய பாக். ராணுவம்

இஸ்லாமாபாத்: மே 7 முதல் 4 நாட்களுக்கு நடைபெற்ற இந்தியாவுடனான மோதலில் தங்கள் ராணுவத்தைச் சேர்ந்த 11 வீரர்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் கடந்த 7ம் தேதி இந்திய விமானப்படை 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இவற்றில் 5 முகாம்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும், 4 முகாம்கள் … Read more

பிரதமர் மோடியின் ஒரே ஒரு புகைப்படம்… பாகிஸ்தானின் மொத்த வதந்தியும் கிளோஸ்!

PM Modi Adampur Airbase Visit: ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்ததன் மூலம் பாகிஸ்தானின் வதந்திகளை மற்றொரு முறை அம்பலமாகி உள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: 9 குற்றவாளிகளில் யார் யாருக்கு என்னென்ன தண்டனை?

Pollachi Sexual Assault Case: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளான 9 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

தமிழகம் மகளிர் முன்னேற்றத்தில் இந்தியாவுக்கே வழிகாட்டி : அரசு அறிவிப்பு

சென்னை தமிழகம் மகளிர் முன்னேற்றத்தில் இந்தியாவுக்கே வழிகாட்டியாக திகழ்வதாக அரசு அறிவித்துள்ளது. இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021-ல் ஆட்சிப் பொறுப்பேற்றபின் மகளிர் சமுதாய மேம்பாட்டிற்குப் புரட்சிகரமான புதிய பல திட்டங்களை அறிமுகப்படுத்தி மகளிர் சமுதாயத்தை உயர்த்தி வருகிறார்கள். அதன்படி, மகளிர் விடியல் பயணம் திட்டம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம், புதுமைப் பெண் திட்டம், பணிபுரியும் மகளிர்க்கு தோழி விடுதிகள் திட்டம், அரசுப் பணிகளில் மகளிர்க்கு 40% இட ஒதுக்கீடு … Read more

பஹல்காம் தாக்குதல்: 3 தீவிரவாதிகள் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.20 லட்சம் சன்மானம்

புதுடெல்லி, காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22-ந் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானை சேர்ந்த மிக முக்கிய பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பு ஒன்று இதற்கு பொறுப்பேற்றது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த 7-ந் தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் ராணுவ தாக்குதல் தொடங்கியது. இந்திய படைகள் பாகிஸ்தானின் பயங்கரவாத தளங்களை குறிவைத்து தாக்கின. பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர். … Read more