2027 உலக கோப்பையில் ரோகித், கோலி விளையாட மாட்டார்கள் – இந்திய முன்னாள் வீரர்

மும்பை, இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி. இந்திய அணிக்காக பல்வேறு போட்டிகளில் வெற்றியை பெற்று தந்துள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த டி20 உலகக்கோப்பை தொடரை வென்ற பின்னர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். அதேசமயம் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவோம் எனவும் கூறினர். இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வண்ணம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா கடந்த 7ம் தேதியும், … Read more

உக்ரைன் மீது 100 டிரோன்களை ஏவி ரஷியா தாக்குதல்

கீவ், ரஷியா-உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. இதில், பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர். 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட உக்ரைன் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் நாட்டின் ஐந்தில் ஒரு பங்கு பகுதியை ரஷியா கைப்பற்றி உள்ளது. இந்த போரை நிறுத்த அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் முயன்று வருகின்றன. நிபந்தனையின்றி 30 நாட்கள் போர் நிறுத்தத்துக்கு ரஷியா சம்மதிக்க வேண்டும் என்று அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் வலியுறுத்தின. அமைதி பேச்சுவார்த்தை நடத்த போர் … Read more

ஹைதராபாத் `கராச்சி பேக்கரி'-க்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு உள்ளதா? – உரிமையாளர் சொன்ன பதில்!

இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஹைதராபாத்தில் உள்ள பிரபல பேக்கரி கடையான `கராச்சி பேக்கரி’ கடந்த சில நாள்களுக்கு முன்பு தாக்கப்பட்டது. பாகிஸ்தானின் பெயர் இருந்ததாலேயே இந்த கடை தாக்கப்பட்டதாக கூறப்பட்டது. கராச்சி பேக்கரிக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இருக்கிறதா? அதன் வரலாறு என்ன? ஏன் கராச்சி என்ற பெயர் வந்தது? என்பது குறித்து பார்ப்போம். சுதந்திரம் அடைவதற்கு முன்பு கராச்சி பேக்கரி 1947 ஆம் ஆண்டு, இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு கராச்சி … Read more

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு: தவெக தலைவர் விஜய் வரவேற்பு

சென்னை: பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு, சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது வரவேற்கத்தக்கது என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்குச் சாகும்வரை சிறைத் தண்டனை வழங்கி, கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், பாதிக்கப்பட்டவர்களுக்குச் சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக இந்தத் தீர்ப்பு … Read more

பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகள் பற்றி தகவல் அளித்தால் ரூ.20 லட்சம் சன்மானம்!

புதுடெல்லி: பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 3 பேர் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு, ரூ.20 லட்சம் சன்மானம் வழங்கப்படும். தகவல் அளிப்பவர்களின் அடையாளம் கண்டிப்பாக ரகசியமாக பாதுகாக்கப்படும் என்று ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 2019 ஆம் ஆண்டு நடந்த புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பஹல்காம் தாக்குதல் மிகக் கொடூரமான தாக்குதல் சம்பவம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் 3 பேர் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு, ரூ.20 லட்சம் … Read more

CBSE Result 2025: சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!

CBSE Class 10th Result 2025:  சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வ வலைத்தளமான cbse.gov.in இல் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இன்று 10 ஆம் வகுப்பு ரிசல்ட் வெளியாகியுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு! தமிழக அரசுக்கு விஜய் வைத்த கோரிக்கை!

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு, சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது வரவேற்பை பெற்று வரும் நிலையில், தவெக தலைவர் விஜய் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

"2026-ல் உதயநிதி கூப்பிட்டா பிரசாரத்துக்கு போவீங்களா?" – சந்தானத்தின் சுவாரஸ்ய பதில்

ஆர்யா தயாரிப்பில், சந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை முன்னிட்டு, படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் ஆர்யா, சந்தானம், இயக்குநர் பிரேம் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். டிடி நெக்ஸ்ட் லெவல் – சந்தானம் அப்போது, பத்திரிகையாளர் ஒருவர், “சிம்புவுடனான நட்புக்காக மீண்டும் காமெடியனாக அவருடைய படத்தில் நடிக்கிறீங்க. பழைய பிரஸ் மீட்ல அரசியல் பக்கம் போக மாட்டீங்கனு சொல்லிருந்தீங்க. இப்போ உங்க நண்பர் … Read more

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது…

நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை மற்றும் மிரட்டி பணம் பறித்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரையும் குற்றவாளிகள் என்று கோவை மகளிர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குற்றவியல் சதி, பாலியல் துன்புறுத்தல், பாலியல் வன்கொடுமை, கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் மிரட்டி பணம் பறித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றங்களை உறுதிப்படுத்திய நீதிபதி ஆர். நந்தினி தேவி இவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என்றும் இவர்களுக்கு ஆயுள் … Read more

பஞ்சாபில் கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் பலி

சண்டிகர், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள 5 கிராமங்களில் கள்ளச்சாராயம் குடித்த 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பிரப்ஜித் சிங், குல்பீர் சிங், சாஹிப் சிங், குர்ஜந்த் சிங், நிந்தர் கவுர் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பராப்ஜீத் சிங் தான் கள்ளச்சாராயத்தை … Read more